Friday, March 17, 2023

ஞாயிற்றுக்கிழமையில், ராகுகாலத்தில் பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங் கள்

ஞாயிறு பிரதோஷம்;
ஞாயிற்றுக்கிழமையில், ராகுகாலத்தில் பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங் கள். சகல தோஷங்களும் விலகும். வாழ் வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. 

 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். பிரதோஷ நாளில், சிவாலய ங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமா னையும் வணங்கி வழிபடுவ து மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். 

குறிப்பாக, ஞாயிற்று கிழமைக்கு தனி சிறப்பு உண்டு.பொதுவாகவே பிரதோஷ நேரம் என்ப து, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்று கிழமையன்று ராகுகா லம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. 

எனவே ராகுகாலமும் பிரதோஷ தருண மும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்

சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதே வருக்கும் விசேஷ அபிஷேகங்கள், பூஜை கள் நடைபெறும்.

குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந் தி தேவருக்குத்தான் அபிஷேக ஆராத னைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங் கள் நடைபெறும். 

நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.   ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷம். மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்க ள். 

முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண் டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண் ணாரத் தரிசித்து, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்

இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தா ல், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட் டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறு ம் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் பெருகும் நிலைக்கும்.

பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்!

“ஓம் நமச்சிவாய”

இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன  பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

◆◆ நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும்.
◆◆ உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.
◆◆ குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.
◆◆ எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர்.
◆◆ இறுதியில் மோக்ஷம் கிடைக்கும்.

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி. பிரதோஷ காலத்தில் நந்தியம்பெரு மானை வணங்க வேண்டும்.

"நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே."

என்ற பாடல் பிரதோஷம் மற்றும் நந்தியம் பெருமான் மகிமையை வலியுறுத்தும்

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...