Friday, July 14, 2023

சிவனை ஏன் வணங்க வேண்டும்? சிவனை ஏன் நினைக்க வேண்டும்?

சிவனை ஏன் வணங்க வேண்டும்? சிவனை ஏன் நினைக்க வேண்டும்?

சிவனை நினை தீரும் நம் தீவினை!!
சுடுகாட்டில் பாடப்படுவது திருவாசகம் மட்டுமே. ஏனெனில், சுடுகாட்டிலும் உனக்கு துணையாக இருக்கும் ஒரே தெய்வம் சிவபெருமான் மட்டுமே."

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நான் தருவேன்" என்ற பிள்ளையார் துதியை, எவனும் சுடுகாட்டில் பாட மாட்டான்.

"கந்த சஷ்டி கவசம்" என்ற முருகன் துதியை, எவனும் சுடுகாட்டில் பாட மாட்டான்.

"தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்" என்ற அம்மன் துதியை, எவனும் சுடுகாட்டில் பாட மாட்டான்.

"ஹரிவராசனம் விஷ்வ மோகனம்" என்ற ஐயப்பன் துதியை, எவனும் சுடுகாட்டில் பாட மாட்டான். அது ஏன்????!!!!!!!!

ஏனெனில்... சிவபெருமான் தான் இறைவன். அவனே மெய். மெய்யை போற்றி பாடுவதே, திருவாசகம். சுடுகாட்டிலும் உனக்கு துணையாக இருக்கும் ஒரே தெய்வம், சிவபெருமான் மட்டுமே.

நீ, கடவுள் என்று நம்பிய எதுவும் சுடுகாடு வரை வாராது. சுடுகாடு வரை வருவது, சிவபெருமான் மட்டும் தான். ஏனெனில், அவன் மட்டுமே இறைவன்.

இந்த பிறவியில், சிவபெருமான் தான் இறைவன் என்று உன்னால் உணர முடியவில்லை என்றால், உனக்கு மறுபிறவி நிச்சயம்.

சிவபெருமான் தான் இறைவன் என்று உணர்ந்தவருக்கு, இப்பிறவியே இறுதியாய் அமையும்!

நமக்கு வாழ்வு தந்த சிவமே மெய். நம்மை வாழ வைக்கும் சிவமே மெய். எதையோ நம்பி நீ வாழ்ந்தாலும், உன்னை வாழ வைப்பது சிவபெருமான் என்பதே மெய். மெய்யே சிவம்.

நாயன்மார்களும் நால்வரும் சிவனை வணங்கினர். சிவனடி சேர்ந்தனர். சிவனடி சேர, சிவனை நினைப்போம், சிவனை உரைப்போம், சிவனடி சேரவே சீவித்திருப்போம். நீ வணங்குவது எதனை????

சிவனை நினை தீரும் நம் தீவினை!!

No comments:

Post a Comment

Followers

சிதம்பரேஸவரர் நவபுலியூரின் ஏழாம் தலம் அத்திபுலியூர்.

நவபுலியூரின் ஏழாம் தலம் அத்திபுலியூர், நாகபட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அந்த அத்திபுலியூர், கட...