Sunday, July 9, 2023

தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 
காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே

என்று கூறி அருளினார்.

பொருள்

தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய்மையான

வெண்  = வெண்மையான

மதி = நிலவை

 சூடிக் =  தலையில் சூடி

காடு உடைய = சுடு கட்டில் உள்ள

சுட லைப் = சாம்பலை

பொடி = பொடியாக

பூசி = உடல் எல்லாம் பூசி

என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்

உன்னை = உன்னை (சிவனை )

நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்

மேவிய = உள்ள

பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

மிக மிக அருமையான  பாடல்.

இதற்குள் கொட்டிக் கிடக்கும் அர்த்தம் ஆயிரம்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான். ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க ஊற்று போல பொங்கி வரும் இதன் அர்த்தங்கள்.

அவை என்ன என்று பின் வரும் ப்ளாகில் சிந்திப்போம்.‌ ( திருஞானசம்பந்தர்

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...