சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் மங்களவார வளர்பிறை அஷ்டமி
நான்கு யுகங்களில் நடப்பு கலியுகத்தில் ஆண்டுகள் அறுபதில் அதிகசக்திவாய்ந்த சோபகிருது என்னும் இந்த ஆண்டில் ஆடி மாதந்தன்னில் வளர்பிறை மங்களவாரம் எனும் செவ்வாய்கிழமை அஷ்டமித்திருநாள்
எப்படிப்பட்ட துன்பங்களாயினும் விலகிட அஷ்டமி திதி உகந்தநாள்
இந்தநாளில் அகோரமூர்த்திகளான பைரவ தேவனோடு அகோரவீரபத்திரர் காலாக்கினிருத்திரர் மற்றும் அகோரதேவிகளான சாமுண்டீஸ்வரி ருத்ரகாளி சண்டிகாளி பிடாரிதேவி வனதுர்கை மயானகாளி இவர்கள்
இன்புற்று அருள்பாலிக்கும் அற்புததிருநாள்
இந்தநாளில் எவனொருவன் சிவலிங்கதிருமேனியையும் அகோரமூர்த்திகளையும் அகோர தேவிகளையும் பூஜிப்பவன் எல்லாதுன்பங்களிலிருந்தும் விலகுகின்றான்
இந்த நாளில் ஆலயங்களில் நெய்யினால் தீபமேற்றிட பல தலைமுறையினர் நலம்வாழக்கூடும் பல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்
இந்த செவ்வாய்கிழமை அஷ்டமி திருநாளில் மாலைநேரம் அகோரமூர்த்தி திருமேனிகளுக்கும் அகோரதேவிகளின் திருமேனிகளுக்கும் பால் மஞ்சள் பஞ்சாமிர்தம் தயிர் தேன் இளநீர் கரும்புச்சாறு அபிஷேகம் செய்வது மிக மிக அதிக நற்பலன்களைத்தரும்
இன்றையதினம் துவரங்கொட்டையால் செய்த உணவு வகைகளை நெய்வேத்தியமாக படைத்து பல்லுயிர்க்கு தானம் செய்தால் இருபத்தோரு தலைமுறை சேர்ந்த முன்னோர்கள் அனைவருக்கும் நண்மைகள் அடைந்து பெற்று உங்களுடைய வரும் காலம் இருபத்தோரு தலைமுறையை சேர்ந்த சந்ததியினர்க்கும் நல்ல நற்பலன்களை தரும்
இன்றைய தினம் எவனொருன் அஷடமி திருநாளில் சரியான முறையில் பூஜித்து வழிபாடு செய்து துவரையினால் செய்த உணவுப்பொருள்களை பல்லுயிர்க்கு தானம் செய்து பலரின் பசியைபோக்குகின்றானோ அவன் நீண்டகாலம் நல்லவேலையும் கிடைத்து நல்லசெல்வமும் பெற்று மங்களகரமாய் என்றென்றும் நலமாகவும்வாழ்வான் என்று சாத்திரங்கள் கூறுகின்றது
இன்றையதினம் பஞ்சாமிர்தம் நெவேத்தியமாக செய்து படைத்து பல்லுயிர்க்கு தானம்தர எல்லாவிதமான சம்பத்துகளும் உண்டாகும் பதினாறு வகையான செல்வங்களும் பெறலாம்
சிவ சிவ திருட்ச்சிற்றம்பலம்
சிவ சிவ நமசிவாய சிவ சிவ
No comments:
Post a Comment