Wednesday, July 19, 2023

திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு

திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு...!
 
பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்கும் திருவாலங்காடு, திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.

திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம், ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படுகிறது. வலது காலை உடம்புடன் ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். 

இத்தலத்து நடராஜர், மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப்போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டித் தூக்கி நின்று ஆடாமல், உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக பாதத்தைத் தூக்கியிருக்கிறார்.

எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளியை, வெட்கித் தலை குனியவைத்த நடனமான இந்த ஊர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். 

ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானைவிட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன், காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப்போனாள். 

நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல 
புராணம்.

அரக்கோணத்திலிருந்து 14Km  தொலைவில்  திருவாலங்காடு தலம் உள்ளது.

ஓம் நமசிவாய...

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...