Wednesday, July 19, 2023

இராமேஸ்வரம்_தீர்த்தங்கள் 🙏

#இராமேஸ்வரம்_தீர்த்தங்கள் 🙏 
              இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ளே  22 தீர்த்தங்களும் அவற்றின் 
மகிமைகளும் .......இராமேஸ்வரம்_தீர்த்தங்கள் 🙏 
          இராவணன் பிராமணன் என்பதால் பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் ஸ்ரீராமரை பிடிக்கவே  அவர் #கந்தமாதனபர்வதம் என்ற இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபட நினைத்தார்.  ஆஞ்சநேயர், சிவலிங்கத்தைக்  கொண்டு வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மணலில் இலிங்கம்  அமைக்க அதை ஸ்ரீராமபிரான் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்!   என்பது துளசிதாசரின் ராமாயணம் மற்றும்  இராமேஸ்வரம் தல வரலாறு கூறுவதாகும். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் இராமேஸ்வரம் பற்றி கிடையாது. 
         இராமர்,  ஈஸ்வரனை வழிபட்ட தலம் என்பதால்  'இராமேஸ்வரம்" என்று  கந்தமாதன பர்வதம் அதுமுதல் அழைக்கப்பட்டது.  அந்த  இடமானது  பூர்வத்திலேயே மிகவும் புண்ணியமான தலமாக விளங்கி வந்தது.  இராமேஸ்வரத்தில்  புனிதமான பல தீர்த்தங்கள் உள்ளன. 
       இங்குள்ள   தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றர்.

 #இராமேஸ்வர_தீர்த்தங்களும்_அவற்றின்__மகிமைகளும்.

.#அக்னி_தீர்த்தம் :
       இது இராமேஸ்வரத்தில்  கோயிலுக்கு வெளியேயுள்ள முக்கிய தீர்த்தமாகும். இராமேஸ்வரத்திலுள்ள கடல் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் சீதாதேவி தீக்குளித்ததால், அக்னி பகவானையே சீதாதேவியின் கற்பு சுட்டு விட்டதாம்.  எனவே அந்த  வெம்மையைத்  தீர்த்துக்கொள்ள  அக்னி பகவானே  இந்த சமுத்திரத்தில்  சரணடைந்தாராம்.  சீதாதேவி  தீயினுள் புகுந்ததால்,  அக்னி பகவானே அந்த வெம்மையைத்  தாங்காது இந்தச் சமுத்திரத்தில் அடைக்கலமானதால், 
இத் தீர்த்தம் *அக்னி தீர்த்தம்  எனப்படுகிறது.
         சீதாதேவி தீக்குளித்த அந்த அக்னியே சமுத்திரமாக மாறியது என்றும் கூறுவர்.
அதற்கேற்ப இந்தச் சமுத்திரத்தில் அலைகள் பெருமளவில் எழும்பாது;  சாதாரணமான ஒரு நீரோட்டம்  போலவே  மிக அமைதியாக இந்தக்  கடல் இங்கே காணப்படுகிறது.  நெடுந் தொலைவு வரை நாம் அந்த சமுத்திரத்தில் நடந்து சென்றாலும் சமுத்திர நீரானது,  நமது முழங்கால் அளவே உயரம் உள்ளது. 
        இதில் நீராடினால் நமது பாபங்கள் அனைத்தும்  தீர்வதோடு, நாம் வேண்டியதும் நிறைவேறும்;  நோய் நொடிகளும் அகலும்; முக்கியமாக சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்குகின்றன.   இது அனுபவப்பூர்வமான உண்மை.

1. #மகாலட்சுமி_தீர்த்தம்
       இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சந்நிதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.

இதில். நீராடினால் சகல ஐஸ்வர்யமும்  கிடைக்கும்.

2. #சாவித்திரி_தீர்த்தம்,

3. #காயத்ரி_தீர்த்தம்,

4. #சரஸ்வதி_தீர்த்தம்

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. 

இம்மூன்று தீர்த்ங்களில் நீராடுவதால்   மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5.  #சேது_மாதவ_தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். 

இதில் ஶ்ரீராமபிரானால்  இலட்சுமிதேவியின்  சகல அருளும், சித்தச் சக்தியும் பெறலாம்.

6. #நள_தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சந்நிதிக்குத் தென்புறம் உள்ளது.
இதில் நீராடுவதால் சூரியபகவானின் அருளைப் பெற்று  சொர்க்கலோக பதவி அடைவர்.( சூரிய பகவானாக வருவதும் மகாவிஷ்ணுவே. எனவேதான் சூரியனை #சூரியநாராயணர் எனப் போற்றுவர்)

7. #நீலன்_தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சந்நிதிக்கு வடபுறம் உள்ளது. 
இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. #கவாய_தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சந்நிதியின் முன்புறம் உள்ளது. 
இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனை வலிமை,  உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

9. #கவாட்ச_தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சந்நிதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. 
     இதில் நீராடுவதால் நரகத்திற்கு 
செல்லும் கொடுநிலை வராது. மன வலிமை, தேக ஆரோக்கியம், 
திட சரீரம் கிடைக்கும்.

(   *நளன், *நீலன், *கயவாகு, *கவாட்சன் ஆகியோர் சுக்ரீவன் அது படையில் மிக முக்கிய தளபதிகள் ராமர் பாலம் கட்டுவதற்கு முக்கியமாக பணியாற்றியவர்கள்.)

10. #கந்நமாதன_தீர்த்தம்,

சேது மாதவர் சந்நிதியின் முன்பகுதியில் கவாய, கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. 
இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்மஹத்தி பாப நீங்கும்.

11.  #சங்கு தீர்த்தம்,

ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில்
பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. #சக்கர_தீர்த்தம்.

ஶ்ரீராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. 
     இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி ஆரோக்கியம் அடைவர்.

13. #பிரம்மாத்திர_விமோசன_தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சந்நிதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால்
பிரம்மஹத்தி பாப தோஷங்களும், பாபங்களும் நிவர்த்தியாவதடன், 
பில்லி சூனியம்  போன்ற தீவினைகள் இருந்தாலும் நீங்கும்.

14.  #சூர்ய_தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.
இத்தீர்த்தத்தில் நீராடுவதால் முக்கால ஞானம் உண்டாவதுடன்,  நோய்களும்  தீரும்.

15. #சந்திர_தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.
இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16.  #கங்கா_தீர்த்தம்,

 17. #யமுனா_தீர்த்தம்,

 18. #காயத்ரி_தீர்த்தம்,

இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளன..
      இவைகளில் நீராடுவதனால் பிணி, 
மூப்பு, சாக்காடு(இளமையில் மரணம்) ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. #சாத்யாம்ருத_தீர்த்தம்,

திருக்கோவில் அம்பாள் சந்நிதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சந்நிதியின் தெற்கு பக்கம் உள்ளது. 
     இதில் நீராடினால் தேவதைகளின் கோபம்,  பிராம்மணசாபம் ஆகியவைகள் இருந்தால்   நீங்குவதுடன், சூரியபகவானின் அருளும், மோட்ச பிராப்தியும்   கிடைக்கும்.

20.  #சிவ_தீர்த்தம்,

இந்த தீர்த்தம் சுவாமி சந்நிதி நுழைவாயில் மற்றும் அம்மன் சந்நிதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. 
     இதில்  நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. #சர்வ_தீர்த்தம்,

இத் தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சந்நிதியின்   முன்புறம்  உள்ளது. 

இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோய்கள்,  நரை திரை போன்றவைகள்  நீங்கி ஆரோக்கியமடையலாம்.🙏
   
22 #கோடி_தீர்த்தம்: இத் தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால்  இராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. கோடி தீர்த்தத்தில் நீராடியபின்  இராமேஸ்வரத்திலேயே  இரவு தங்கலாகாது என்றொரு சம்பிரதாயம் அங்கே நிலவுகிறது.
    #ஓம்நமசிவாய__ஜெய்ஶ்ரீராம்  🙏

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...