Saturday, July 22, 2023

பக்தருக்கு ஒரு பிரச்சனை என்றதும், தூணில் இருந்து உடனடியாக அவதாரமெடுத்து வந்தவர் நரசிம்மமூர்த்தி.

*நடக்காததை நடத்திக்காட்டும்*
*நரசிம்ம மந்திரம்* 
நம்முடைய வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று நாம் முடிவு செய்து வைத்திருக்கும் சில விஷயங்களைக் கூட, நம்பிக்கையான வேண்டுதலை வைக்கும்போது அந்த இறைவன் அதை நடத்திக் காட்டுவார். 

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட கஷ்டத்திற்கும் நிச்சயம் தீர்வு உண்டு‌‌. 

அந்த தீர்வானது உங்களை வந்து அடைய, சிறிது காலதாமதம் ஏற்படும். அவ்வளவு தான். 

அந்த காலதாமதம் எதனால்? 

நீங்கள் செய்த கர்மவினைகளின் பலனை, நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி. 

எவரொருவர் இறைவனின் பாதங்களை தொடர்ந்து பற்றிக் கொண்டு, இறை வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு விடிவு காலம் கூடிய விரைவில் கிடைத்துவிடும்

பக்தருக்கு ஒரு பிரச்சனை என்றதும், தூணில் இருந்து உடனடியாக அவதாரமெடுத்து வந்தவர் நரசிம்மமூர்த்தி. 

இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! 

கோபத்தோடு இந்த பூமியில், பக்தர்களுக்காக அவதாரம் எடுத்த தெய்வங்களுக்கு எப்போதுமே ஒரு அதீத சக்தி உண்டு என்று சொல்லுவார்கள். 

ஆம், பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் இளகிய மனமும் இந்த ஆக்ரோஷமான தெய்வங்களிடம் உண்டு. 

ஆனால் தவறு செய்தால், தண்டனையும் கண்டிப்பாக உண்டு. இதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

அந்த வரிசையில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட 
இந்த பூமியில் சிங்க முகத்துடனும், மனித உடலுடன் அவதாரம் செய்த நரசிம்ம மூர்த்தியின் சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தை தான் இந்த பதிவில பார்க்க போகின்றோம். 

நீண்ட நாட்களாக உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறாத குறிக்கோள் இருந்தால், அதை நிறைவேற்றிக் கொள்ளவும், வீட்டில் இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகள் தீரவும், தீராத நோய் நொடிகள் தீரவும், தினம்தோறும் நரசிம்மரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். உங்களுக்கான நரசிம்மரின் மந்திரம் இதோ!

*யஸ்ப அபவத் பக்தஜன* *ஆர்த்திஹந்துபித்ருத்வம்*
*அந்யேஷு அவிசார்ய* *தூர்ணம்ஸ்தம்பே*
*அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி*
*ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே*.

இந்த மந்திரத்தை மனமுருகி தினமும் 3 முறை உச்சரித்தாலே போதும்.

இது நரசிம்மரை பற்றி சமஸ்கிரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரம். உச்சரிக்க தெரிந்தவர்கள், மந்திரமாகவே உச்சரிக்கலாம். சமஸ்கிருதத்தில் உச்சரிக்கத் தெரியவில்லை எனும் பட்சத்தில், இதற்கான தமிழ் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு, தமிழில் வாசித்தாலும் மந்திரத்தை உச்சரித்த பலனை நம்மால் பெற முடியும்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் இந்த ஸ்லோகத்திற்கான தமிழ் விளக்கப்பொருளைச் சொல்லுங்கள்.

*பக்தியற்றவர்களால்*
*அடைய முடியாதவனே*
*தாயின் கர்ப்பத்தில் இருந்து* *தோன்றினால் தாமதமாகுமென்று* *தூணிலிருந்து தோன்றியவனே*!

*நினைத்த மாத்திரத்தில்* *பக்தர்களின் துன்பத்தை* *நொடிப்பொழுதில் நீக்குபவனே*!

*லட்சுமி நரசிம்மனே*
*சரணம்*! *சரணம்*!!

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...