Saturday, July 22, 2023
சென்னை புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்
சிவ சிவ சென்னையை சுற்றியுள்ள பழம்பெரும் சிவாலயங்களின் வரிசையில் 23வதாக ஞாயிறு ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் பற்றி காணலாம் !!!இத்திருக்கோவில் செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது நவகிரகங்களில் நடுநாயகன் சூரியபகவான், சூரியவழிபாடு என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளது !!!பலர் புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுப்படையிலும், ஞாயிறு போற்றதும் என்று சிலப்பதிகாரத்திலும் உள்ளது , சங்க காலம் தொட்டே சூரிய வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன!!! அதன்படி சூரியவழிபாட்டிற்க்காக இத்திருக்கோவில் அமைந்துள்ளது !!! இங்கு வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ சொர்ணாம்பிகை பாதத்தில் சித்திரை மாதத்தில் சூரியஒளி படுவது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது !!!பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ அரசர் ஒருவர் ஆந்திர பிரதேசத்தின் மீது படையெடுத்து இவ்வழியாக செல்லும்போது சோழவரத்தில் முகாமிட்டார்!!! இங்குள்ள செந்தாமரை தடாகத்தின் நடுவே உயர்ந்து நின்ற ஓர் அதிசய மலரை பறிக்க முடியாமல் தன் வாளை வீசிட அது கீழ் இருந்த சிவலிங்கத்தில் பட்டு அத்தடாகமே ரத்தவெள்ளமானது !!!இதனை எதிர்பாராத சோழ அரசர் அதிர்ந்து போனார்!!! பின்பு தன் தவற்றை உணர்ந்து அரசர் செய்த செயல் மற்றும் இக்கோவிலின் சிறப்புக்கள் பற்றி நாளை காணலாம் ❤️🔱சிவாயநம🔱❤️
Subscribe to:
Post Comments (Atom)
Followers
பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓
பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...
-
பாம்பின் தலை, உடல், வால்… மூன்று துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் காணப்படும் அதிசய பாம்பு கோயில்கள்! இந்திய ஆன்மீக மரபில் நாக வழிப...
-
தீராத துயரத்திற்கும் தீர்வு தரும் குலதெய்வ தீப வழிபாடு இந்த தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், வாசலி...
-
"குலதெய்வங்கள்" என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம்..., குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்....
No comments:
Post a Comment