*நாடி வரும் பக்தர்களுக்கு நலம் பயக்கும் நாச்சியார் அம்மன் ஆலயம்*
இந்த அம்மன் கோவில் வடக்கு நோக்கி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தஞ்சைக்கு மேற்கு திசையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் மற்றும் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் இரண்டிற்கும் நடுவில் நேர்கோட்டில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் கிழக்கில் கோவில் பத்து கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரன் கோவிலுக்கும் இந்த நாச்சியார் அம்மன் ஆலயத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு
சுமார் 40வருடங்களுக்கு முன்னால் கோவில் பத்து கிராமத்தில் உள்ள
குலோத்துங்கன் சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் இருந்து இந்த நாச்சியார் அம்மன் கோவிலுக்கு சீர்வரிசையுடன் ஆனந்த வல்லி அம்பாள் சமேத ஆபத்சகாய ஈஸ்வரன் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
மேலும் இந்த திருக்கோயில் மேற்கு பகுதியில் அம்மன் குளம் தீர்த்தகுளமாக காட்சி தருகிறது.
இந்த கோவிலில் நேர் எதிராக வடக்கு திசையில் ஆனந்த காவிரி எனும் புனித நதியும்.
இந்த அம்மன் கோவிலுக்கு தெற்கு திசையில் கல்லணை கால்வாய் நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த அம்மன் கோவிலில் உள்ள அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு திருமண யோகம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயில் திறக்கும் நேரம்
காலை 8 மணிக்கு மேல் 12 மணிவரை
மற்றும் பக்தர்கள் அர்ச்சகரை தொடர்பு கொள்ள செல்:8940582904
பெயர்: பாலசுப்பிரமணியம் சிவம்🙏
No comments:
Post a Comment