Tuesday, September 19, 2023

அருள்மிகு பழனி முருகன் கோவில் அல்லது பழநி முருகன் கோவில்*

*அருள்மிகு பழனி முருகன் கோவில் அல்லது பழநி முருகன் கோவில்*
 முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும்.
மூன்றாம் படை வீடான இக்கோயில் மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.
 இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

*பெயர்:*
பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

*அமைவு:*
பழனி

*மூலவர்:*
தண்டாயுதபாணி சுவாமி (முருகன்)

*கட்டடக்கலை வடிவமைப்பு:*
தென்னிந்தியக் கோயில்

*முருகன் சிலையின் சிறப்பு:*
முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாசாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாசாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முப்பெரும் தேவியரும்  ஒன்றாக அமைந்த  ஒரே #மூகாம்பிகை தலமான தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற ச...