🐅 ஐப்பசி சதயத்திருநாள் கொண்டாட்டம் 🐅
🐅 ஏன் ஐப்பசி சதயத்திருநாள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
🐅 ஒரு மன்னருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
🐅 எண்ணிலடங்கா கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும் இவரைப்பற்றி தேட நினைப்பவர்களுக்கும்,இவரது தகவல்களை அங்கொன்றும்,
இங்கொன்றுமாக கேட்பவர்களுக்கும்?
🐅 இது வரை இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்னை பொறுத்தவரை போதாதென்பேன்,
சிறிதளவு தான் என்பேன்.
🐅 மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களின் பெயரில் அங்கிருக்கும் இடங்களும்,அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களும் நம் மா மன்னருக்கு இல்லை என்பேன்.
🐅 மன்னர்களுக்கெல்லாம் மன்னர்
நம் மன்னர்
மா மன்னர்.
🐅 இராஜனுக்கெல்லாம் இராஜன்
நம் மன்னர்
இராஜ இராஜர்.
🐅 நம்மை விட ஒரு வயது பெரியவரை கூட அவர் என்று அழைக்கும் நாம் ஏன் ஆயிரம் ஆண்டு வயதினை கடந்தவரை அவன் என்று அழைக்கிறார்கள் என்றும்,நாம் ஏன் அழைக்கிறோம் என்றும் என்கிற கேள்வி இன்றளவும் எழவில்லை,
இனியாவது மாற்றங்கள் பிறக்கட்டும்.
🐅 எங்கு விவசாயமும், இராணுவமும், தொழிலும் சிறப்பாக இருக்கிறதோ அந்த தேசமே சிறந்த தேசம்,அதை ஆளுபவரே ஒப்பற்றவராக ஏற்றுக் கொள்ளப்படுவர்.
🐅அந்த தகுதிக்கு ஒரு வரையறை இருந்தால் அதை தாண்டி, அவர் தொட்ட எல்லையை இன்று வரை மற்ற ஆட்சியாளர்கள் தொட்டிருப்பார்களா என்று யோசித்தால் அத்தகு நபரின் பெயர் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.
🐅 தனித்துவம் கொண்டவர் நம் மன்னர் ஆவார்.
🐅 பொதுவாக யுத்தம் வந்தால் படைகள் திரண்டு யுத்தம் செய்த காலத்தில் 28 வகை படை பிரிவுகளாக பிரித்து, பிரமாண்டமான இராணுவ கட்டமைப்பினை ஏற்படுத்தி, யுத்தம் செய்த பெருமை மா மன்னர் இராஜ இராஜ சோழருக்கே உண்டானது ஆகும்.
🐅 யானைகள் அவருக்கு முந்தை காலத்தில் படையில் இருந்தாலும்,
யானைகளும் யுத்தம் செய்த பெருமை இராஜ இராஜ சோழருக்கே உண்டானது ஆகும்.
🐅 தான் பதவி ஏற்ற பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு எந்த யுத்தமும் மா மன்னர் செய்யவில்லை.
🐅 அதற்கு பின்பு அவர் செய்த ஒவ்வொரு யுத்தமும் சோழதேசத்தின் பாதுகாப்பிற்கும்,
வளர்ச்சிக்கும் மட்டுமே செய்தார்.
🐅 எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் யுத்தம் செய்ததில்லை இராஜ இராஜ சோழர்,இம்சை தந்த கூட்டங்களை துவம்சம் செய்யவே யுத்தம் செய்தார்.
🐅 தான் பங்கேற்ற அனைத்து யுத்தத்திலும் வெற்றிவாகை சூடிய மன்னர் இவர்.
🐅 தனது ஆட்சிக் காலத்தில் பல இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக உருவாக்கினார்.
🐅 அதனால் தான் இவரது மெய்க்கீர்த்தி திருமகள் போல என்று நிலத்தினை மையப்படுத்தி தொடங்கும்.
🐅 தொழில் வளர்ச்சி,நிர்வாக மேலாண்மை,
முறையாக வரி விதித்தல் என்று அனைத்து முறையிலும் சிறப்பான ஆட்சி நடத்தியவர் நம் மா மன்னர்.
🐅 உலகின் பழமையான ஆட்சி காலங்களில் பொற்கால ஆட்சி என்ற ஒரு வார்த்தை மா மன்னர் இராஜ இராஜ சோழர் ஆண்ட ஆட்சி காலத்திற்கே பொருத்தமான பெயராக இருக்கிறது,அதை பல வரலாற்று ஆய்வாளர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
🐅 இறுதி காலத்தில் ஓய்வு எடுக்காமல் , நமது இனமும்,மொழியும்,
பண்பாடும்,ஆன்மீகமும்,உலகிற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு தஞ்சை பெரிய கோவிலை மக்களோடு சேர்ந்து,இறை சிந்தனையோடு கலந்து உருவாக்கினார்.
🐅 நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கு அடையாளமாக ஒரு ஆயிரம் ஆண்டுகள் போல இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வரை, உலகம் உள்ள வரை அக்கோவில் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கு அடையாளமாக, கம்பீரமாக, கர்வத்துடன் விண்ணோடு போட்டி போட்டு கொண்டு நிற்கும்.
🐅 பெருவுடையாரின் அருள் உலகத்திற்கு கிடைத்து கொண்டே இருக்கும்.
🐅 இத்தகு விஷயங்கள் அனைத்தும் வெறும் சொற்பமே அழகிய சோழரைப்பற்றி.
🐅 அவரின் பராக்கிரமத்தை,
ஆன்மீகத்தினை,
தெய்வபக்தியை,
மக்கள் நல சிந்தையை,
எதற்குள்ளும் அடக்க இயலாது.
🐅 அனைத்திற்கும் எல்லை கடந்த பேரரசர் நம் மா மன்னர் இராஜ இராஜ சோழர்.
🐅 அவரின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அதிகமான தகவல்கள் அடங்கிய மணிமண்டபமும்,
பிரமாண்டமான சிலையும் , தமிழகத்தில் வர வேண்டும்.ஓம்.
🐅 மா மன்னர் இராஜ இராஜ சோழர் அவர்களின் மெய்க்கீர்த்தி பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.
🐅 இத்தகு விஷயங்களால் தான் நம் மன்னர் இன்றளவும் பெரிய முக்கியத்துவத்தை பெறவில்லை என்று முன்பே கூறினேன்.
🐅 அவைகள் ஒரு புறம் நடந்து கொண்டே இருக்கும்.
🐅 நாம் நம் மன்னரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்,வெடி வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவோம்.
🐅 இக் கொண்டாட்டம் தமிழகம் தாண்டி,நாடு முழுவதும் கொண்டாடப்போகும் திருநாள் விரைவில் வர எம்பெருமான் அருள் புரியட்டும்.ஓம்.
🐅 அனைவருக்கும் ஐப்பசி சதயத்திருநாள் வாழ்த்துகள் 🌹
🐅 அருள்மொழிவர்மர் போற்றி.
🐅 அழகிய சோழர் போற்றி.
🐅அபயகுல சேகரர் போற்றி.
🐅 உலகளந்தார் போற்றி.
🐅 ஜனனாதர் போற்றி.
🐅 சிவ பாத சேகரர் போற்றி போற்றி.
🐅 மா மன்னர் இராஜ இராஜ சோழர் போற்றி போற்றி போற்றி.
🐅 சோழம் 🐅
🐅 சோழம் 🐅
🐅 சோழம் 🐅
No comments:
Post a Comment