⚜️ *அன்னாபிஷேகம்* .
🌳 *தெய்வம் முதல் தாவரம் வரை எல்லா ஜீவராசிகளுக்கும் அருள் புரிவதே கடவுள்*
.
*எல்லாம் கடந்த ஒரே மெய்க் கடவுளான பரமேஸ்வரன் தாவர நாதர்* .
எத்தனையோ பிறவிகளில் பிறக்கும் அரி அயன் அம்மன் முதலிய எல்லா ஆத்மாவிற்கும் ஒவ்வொரு பிறவியிலும் வெவ்வேறு தாய். வெவ்வேறு தந்தை.
ஆனால் *எல்லா ஆத்மாவிற்கும் எல்லாப் பிறவியிலும் நிரந்தரமான ஒரே தாய் தந்தையாக இருப்பவர்* *தாயுமான சிவபெருமான்* *மாதேஸ்வரன்* *அம்மை யப்பன்* .
⚜️ *யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்* (திருவாசகம்)
⚜️. *தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமே ஆய தலைவனார்* (சுந்தரர்)
என *புல் முதல் அரி அயன் ருத்திரன் சக்தி லட்சுமி சரஸ்வதி உள்ளிட்ட தெய்வம் வரை எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாப் பிறவியிலும் தந்தையும் தாயுமாக இறைவனும் இறைவியுமாக அப்பனும் அம்மையுமாக அருள் புரிவது ஓங்கார வடிவ லிங்கப் பரம்பொருள்* ஆதலால் தாவரங்கள் அளிக்கும் *பூ இலைகளால் மட்டுமன்றி சாதம் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து வழிபடப்படுவது அன்னாபிஷேகம்* எனப்படுகிறது.
*அரிசி, திராட்சை, ஏலக்காய், கல்யாணப் பூசணி, தர்ப்பூசணிப் பழம், வேப்பங்கனி, தேங்காய், கத்தரிக்காய் மற்றும் பல லிங்க வடிவம் உடையவை*.
⚜ *அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்* (அப்பர்)
என சிதம்பரம் பொன்னம்பலச் சிற்றம்பலத்தில் *ஸ்படிக லிங்கத்திற்குக் காலையும் மாலையும் ஒவ்வொரு நாளும் சாதத்தால் பல முறை அபிஷேகம்* நடக்கிறது.
🌴 *புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி* (அப்பர்)
☘ *தாளி அறுகாம் உவந்த தார்* (திருவாசகம்)
என புல்லுக்கும் ஒரு உடலைப் படைத்துக் காத்து *அவற்றை அணிந்து கொண்டு அவற்றுக்கும் முக்திப் பேறு அளிப்பவர்* கருணைக் கடலான தாவர நாதர் பரம சிவன்.
ஆலங்காடு, பனங்காடு, பராய்த்துறை, கடம்பந்துறை, மாதோட்டம், திருமருகல், திருப் பைஞ்ஞீலி, திருப் பாசூர், திருவிடை மருதூர், திரு நெல்லிக்கா , திரு எருக்கத்தம் புலியூர், திருமாந்துறை, திரு முல்லை வாயில் போன்று *தாவரத்தோடு உணவோடு* தொடர்பு உடைய தலங்கள் பல, ஈசன் திருநாமங்கள் பல.
ஆலமர் செல்வன், அரசிலிப் பெருமான், ஜம்புகேஸ்வரர், குறும்பலா நாதர், குற்றாலநாதர், ஏகாம்பரேஸ்வரர், தர்ப்பாரண்யர், பாதிரிப்புலியூரர்,
கடம்ப வன நாதர், தில்லை யாடி, மருகல் பெருமான்,
மருத வாணர்,
நெல்லி வன நாதர், நெல்லையப்பர், நெல்வேலி நாதர், வெண்ணிக் கரும்பர், திருச் சோற்றுத் துறையர், வெண்ணெயப்பர், நெய்யாடியப்பர்,
பழன நாதர், பூங்காவனர்,
கொன்றை வேந்தர், ஆத்திச்சூடி, தாமரையான், மல்லீஸ்வரர்,
முல்லை நாதர்,
தவனச் சடையர் போன்று திரு நாமங்கள் கணக்கற்றவை.
*எல்லாம் எனக்கே* என்ற ஆணவம் கொண்டவை செயற்கையான அந்நிய மதங்கள்.
*எல்லாம் ஈசனுக்கே*
என்று அவர் படைத்தவற்றை அவருக்கு அர்ப்பணிப்பது இயற்கையான இந்து நெறி.
சிவப்பிரியா.
No comments:
Post a Comment