மக்கள் தலைவன்.
ஐப்பசி சதயம்.
இராஜராஜ சோழன் பிறந்தநாள்...
பெருவேந்தன் இராஜராஜன்...
ஒரு அரசன் பேரரசனாய் ஆவது எப்போது..?
மக்கள் அரசனாய் இருப்பது எவ்வாறு..?
அரசனது வீர தீர பராக்கிரமச் செயலோ, அவன் பெற்ற வெற்றிகளோ, அவன் கொண்ட நாடுகளோ, அவன் கட்டிய கோவிலோ
இன்ன பிற காரணங்களாலோ அல்ல...
அரசன் தனது குடிமக்களின் நலனைக் காக்க வேண்டும். அம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். மக்களும் தம் மன்னனைப் போற்ற வேண்டும்..
சுருங்கக் கூறின்..
மன்னனை மக்கள் நேசிக்கவேண்டும். மக்களை மன்னன் நேசிக்க வேண்டும்.
அப்படியொரு அரசனே பேரரசனாக பெருவேந்தனாக மக்கள் தலைவனாக நீடித்த பெருமையைப் பெற முடியும். காலங்கள் கடந்தும் அவனது பெருமையை வரலாறு நினைவூட்டும்..
அப்படியொரு பேரரசர்தான் பெருவேந்தன்
மக்கள் தலைவன் இராஜராஜர்.
இவர் மக்களை நேசித்தார். மக்கள் இவரை நேசித்தனர்.
என்ன சான்று..?
ஏராளமாய் உண்டு என்றாலும் ஒரு கல்வெட்டுச் செய்தியைப் பார்ப்போம்.
இராஜராஜரின் 14 ஆம் ஆட்சியாண்டு. கி.பி.999
காஞ்சிபுரம் களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர். பெயர் காடன்மையிந்தன். இவர் தஞ்சைக்குச் சென்று தனது அரசனை சந்திக்கிறார். தனது அரசனது நலம் வேண்டி தனது ஊர் கோவிலில் ஒரு விளக்கெரிக்க அனுமதி வேண்டுகிறார்.
இராஜராஜனோ,..
தனது நலன் மட்டுமல்ல..
ஊர் மக்களின் நலனுக்காக உலக மக்கள் நலனுக்காக.. இந்த பூமியில் வாழும் அனைவரும் நன்றாக இருக்குமாறு விளக்கேற்றவும் என்கிறார்..
ஊர் திரும்பிய காடன் மயிந்தன் தனது விருப்பப்படி தனது அரசனது நலம் வேண்டி அவரது பெயரில்
விளக்கு ஒன்றும், அரசனின் விருப்பப்படி
பூமியில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க விளக்கொன்றும்
ஆக இரண்டு விளக்குகளை அவ்வூர் சிவன் கோவிலில் ஏற்றுவதற்கு நிவந்தம் தந்து ஏற்பாடு செய்கிறார்.
'ராசாவுக்கெல்லாம் நன்றாக பூமிக்கெல்லாம் நன்றாக ஒரு விளக்கு வைய் என்றுடையார் அருளச் செய்ய எம்பெருமான் அருளுச்செய்தாகில்
இரண்டு விளக்கா வைக்கிறேன் "
என்பது களக்காட்டூர் சிவன் கோவிலில் காடன்மைந்தன் கூறும் கல்வெட்டு வாசகம்.
மக்களை நேசித்த மன்னன்..
மன்னனை நேசித்த மக்கள்..
இதுவே அருமொழி என்னும் அரசன் இராஜராஜன் ஆன ரகசியம்..
ஆகவேதான் இராஜராஜனுக்கு எத்தனையோ விருது பெயர் இருந்தும் அவர் விரும்பி ஏற்றப் பெயர்..
" ஜனநாதன் "
அதாவது
மக்கள் நாயகன்.
ஆகவேதான் தலைமுறை பல கடந்தும் மக்கள் தலைவனின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------
அன்புடன்
மா.மாரிராஜன்..
கல்வெட்டு புகைப்பட உதவி.
அன்பு வந்தியத்தேவன்
No comments:
Post a Comment