அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்,
கீழப்பெரும் பள்ளம் - 609105
மயிலாடு துறை மாவட்டம்.
*மூலவர்:
நாகநாதர்
*தாயார்:
செளந்தர்யநாயகி
*தல விருட்சம்:
மூங்கில்
*தீர்த்தம்:
நாகதீர்த்தம்.
*அமைத்தவர்
சோழர்கள்.
*மூலவராக நாகநாதர் உள்ளார்.
*அம்மன் தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் காட்சிதருகிறார்.
*தல வரலாறு:
அமுதம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி நாகம் மிகவும் பலவீனமடைந்தது. ஒரு கட்டத்தில் களைப்பு மிகுதியால் விஷத்தை உமிழ ஆரம்பித்தது. இதைக் கண்டு பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் தேவர்களை காப்பாற்ற வேண்டி அந்த விஷத்தை தானே அருந்தி நீலகண்டன் ஆனார்.
தனது விஷத்தை சிவபெருமான் விழுங்க வேண்டி வந்ததை எண்ணி வாசுகி நாகம் மிகவும் வருத்தமுற்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தது. வாசுகியின் தவத்தால் மகிழ்ந்து காட்சி தந்த சிவபெருமான் வாசுகிக்கு பாப விமோசனத்தை அளித்து, அதன் தியாக உணர்வையும் பாராட்டினார்.
*அப்போது வாசுகி தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இத்தலத்தில் எழுந்தருள வேண்டும் இறைவா என வேண்டியது. வாசுகியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் நாகத்தின் பெயரை தாங்கி "நாகநாதர்" எனும் திருநாமத்துடன் இத்தலத்தில் அமர்ந்தார்.
*இது கேதுபகவானுக்குரிய பரிகாரத்தலமாகும்.
தேவர்களை வரிசையாக அமர வைத்து தன்வந்திரி அமிர்தத்தை வழங்கிய சமயத்தில், தேவர்கள் வரிசையில் மாறுவேடத்தில் அமர்ந்த அசுரன் ஒருவனும் அமிர்தத்தை பெற்று குடித்தான். இதை சூரியனும், சந்திரனும் கண்டுபிடித்து விட்டனர். இதை அறிந்து கோபமடைந்த மகாவிஷ்ணு, தனது கையில் உள்ள சுதர்சன சக்கரத்தால் அந்த அசுரனின் உடலை இரண்டாக வெட்டினார். அமிர்தத்தை உண்ட பலனால் மரணமடையாமல் "தலை பகுதிக்கு பாம்பின் உடலும்", "உடல் பகுதிக்கு பாம்பின் தலையும்" கிடைக்கிறது.
நாம் இவர்களையே ராகு - கேது என்கிறோம். இவர்கள் சிவ பெருமானை வழிபட்டு நவகிரகங்களாக இணைந்தனர்.
*கேது இத்தலத்திற்கு வந்து நாக தீர்த்தத்தில் நீராடி, சிவனை வழிபட்டு, பலன் பெற்றதால் இத்தலம் கேது தலமாக போற்றப்படுகிறது. .
*கோவிலுக்குள் கேதுவிற்கு தனி சன்னதி உள்ளது. கேது, மூலவரான நாகநாதரை வழிபட்ட நிலையில் காட்சி தருகிறார்.
*பக்தர்கள்
இத்தலத்தில் நரம்பு, வாயு தொடர்பான நோய்கள் நீங்கவும், பயம் நீங்கவும், தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்கவும், குடும்பத்தில் எப்போதும் ஐஸ்வர்யம் நிலைக்கவும், தலைமுறை சிறக்கவும் இறைவன் நாகநாதரையும், கேது பகவானையும் வழிபடுகின்றனர்.
*ஜாகத்தில் கேது திசை நடப்பவர்கள் அவர்களது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இத்தலம் வந்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
*நேர்த்திக் கடனாக பக்தர்கள் கேது பகவானுக்கு கொள்ளு சாதம் படைத்து, பல வர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
*திருக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியன்று சிறப்பு ஹோமம் நடத்துகிறார்கள்.
*கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவகிரக சன்னதி இல்லை.
*இத்தல விநாயகர், அனுகிரக விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
*இங்கு இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன.
*அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 5 கி.மீ முன்னே தர்மகுளம் என்ற இடம் உள்ளது. தர்மகுளத்திலிருந்து உள்ளே 2 கி.மீ தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து 21 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment