Friday, October 20, 2023

அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத பார்வதீஸ்வரர் திருக்கோயில் இஞ்சிக்குடி, திருவாரூர்.

🙏🏻 *ஓம் கம் கணபதயே நமோ நமஹா*  🙏🏻

🙏🏻கோபுர தரிசனம் , கோடி புண்ணியம் இன்றைய கோபுர தரிசனம்🙏🏻


அருள்மிகு ஶ்ரீ சாந்த நாயகி சமேத  பார்வதீஸ்வரர் திருக்கோயில்,
இஞ்சிக்குடி, திருவாரூர்.



🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1000 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕மூலவர்:
பார்வதீஸ்வரர்


🛕அம்மன்/தாயார்:
தவக்கோல நாயகி/ சாந்தநாயகி அம்மையார்.


🛕ஊர்: இஞ்சிக்குடி


🛕மாவட்டம்:திருவாரூர்


🛕மாநிலம்:தமிழ்நாடு


🛕திருவிழா:வைகாசி பிரம்மோற்ஸவம், பிரதோஷ காலம் சிவராத்திரி ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.. 



🛕தல சிறப்பு:
இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதும், திருமணக் கோலத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவதும் சிறப்பு.



🛕பொது தகவல்:
ராஜராஜ சோழனின் பேரன் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.


🛕பிரார்த்தனை
சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதால் இங்கு வழிபட, கிரகதோஷங்கள் விலகும் மற்றும் திருமணக் கோலத்தில், சண்டிகேஸ்வரியுடன், சண்டிகேஸ்வரர் காட்சி தருவதால் இங்கு பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும்.


🛕நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


🛕தலபெருமை:
குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லையாம். இந்தத் தலத்து அம்பிகையின் அருளால் குழந்தை வரம் கிடைக்க, அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினானாம் மன்னன். 



🛕இன்றும் கால்களில் கொலுசுகளுடன் விசேஷ தரிசனம் தருகிறாள் அம்பிகை.



🛕விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவது விசேஷ அமைப்பு. ஆகவே, இங்கு வந்து வழிபட, கிரகதோஷங்கள் விலகும் என்கிறார்கள். தவிர, இங்கு திருமணக் கோலத்தில், இல்லாமல் சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருகிறார் சண்டிகேஸ்வரர். ஆக, இங்கு வந்து பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.



🛕 தினமும் நாகலிங்கப் பூக்களால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு!


🛕பார்வதிதேவியால் உருவாகி, அவளது வேண்டுதலுக்கு இணங்க இடப் பக்கத்தை வழங்கியதால், இந்தத் தலத்தின் ஈசனுக்கு பார்வதீஸ்வரர் என்றும், அம்பாள் தவக்கோல நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.



🛕 உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், சாந்த நாயகி என்றும் போற்றுவர். மேலும் இவளுக்கு லலிதாம்பிகை என்ற ஒரு பெயரும் உண்டு. 



🛕பெருமாளும் ஸ்ரீ ஆதிகேசவம் எனும் திருநாமத்துடன் தலத்தின் மேற்கில் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.



🛕தல வரலாறு:
துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்ததால், அவரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானாள் மதலோலை எனும் அரக்கி. அதன் விளைவாக அம்பரன், அம்பன் ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், ஈன்றதும் இறந்து போனாள். வளர்ந்து பெரியவர்களான அசுரர்கள், கொடுமைகள் பல புரிந்தனர். அதைப் பொறுக்க முடியாமல் சிவனாரிடம் தஞ்சம் புகுந்தனர் தேவர்கள். ஈசன் புன்னகையுடன் தன் தேவியைப் பார்த்தார். அவரின் குறிப்பறிந்த அம்பிகை, அசுரர்களை அழிக்க, அழகிய கன்னிப் பெண்ணாக உருவெடுத்தவள், அரக்கர்கள் முன் தோன்றினாள். இருவரும் அவள் மீது மையல் கொண்டனர். இந்த நிலையில், வயோதிக அந்தணராக வந்தார் பெருமாள். 



🛕அசுரர்களிடம் சென்று, ஒரு பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் ? உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள் என்று கூறிச் சென்றார்.




🛕அவ்வளவுதான்… அசுர சகோதரர்களுக்கு இடையே பலப்பரீட்சை துவங்கியது. அம்பன் அழிந்தான்; அம்பரன் ஜெயித்தான். அம்பாளைத் தேடி வந்தான். அப்போது, மகா காளியாக உருவெடுத்து நின்றாள் தேவி. பயந்து போன அசுரன், வடக்கு நோக்கி ஓடினான், அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்துக்கு இரையாக்கினாள் அம்பிகை, அசுர வதம் முடிந்ததும், உக்கிரம் தணிந்து, மீண்டும் ஈசனின் இடப்பாகம் அடையவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் பெருமாள். 



🛕தேவியும் உக்கிரம் தணிந்து, அருகில் இருந்த சந்தனமரக் காட்டுக்கு வந்து, மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட ஆரம்பித்தாள். உரிய காலம் வந்ததும் சிவனார் தோன்றி, தேவியை தன் இடப்பாகத்தில் ஏற்றார்.



🛕சிறப்பம்சம்:
இங்கு சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதும், திருமணக் கோலத்தில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் காட்சி தருவதும் சிறப்பு .



🛕 திருக்கோவில் சோழ மன்னன் விக்ரமச்சோழன் கட்டப்பட்டது.



🛕 திருக்கோயில் முகவரி

அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத பார்வதீஸ்வரர் திருக்கோயில் இஞ்சிக்குடி, திருவாரூர்.


🙏🏻 நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻


சித்தமெல்லாம்  சிவமயத்துடன் கடையேன் ஞான சிவம் என்கின்ற ஜெயம் ஶ்ரீ கா பா.ஞானசேகரன்.
9976460143


 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...