கும்பகோணம் அருகே உள்ள பிரம்ம ஞான ஈஸ்வரன் கோவில் அவிட்டம் நட்சத்திரத்தைக் கொண்ட மக்கள், பெரும் செல்வாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே போல், செல்வம் அதிகமாக பெற்றிருப்பார்கள். கம்பீரமான தோற்றம், மன தைரியம் கொண்ட இவர்கள், அதிகமாக கோபப்படும் இயல்புடையவர்கள்.
ஆனால் எப்போது சாந்தமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து அப்போது அமைதியாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தோஷங்கள் நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, திருமண தடை நீங்க, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றுக்கு பிரம்மஞான புரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
பிரம்மஞான புரீஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம் கீழக்கொருக்கை என்ற பகுதியில் உள்ளது. இங்கு மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். தாயார் புஷ்பவல்லி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
சிவபெருமானுக்கும், அம்மனுக்கும் எதிரே உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. மேலும், கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இரட்டை பைரவர், துர்க்கை, பிரம்மா சன்னதி உள்ளது.
அவிட்ட நட்சத்திரக்காரர்கள், முந்திரிப்பருப்பு, நிலக்கடலை ஆகிய இரண்டையும் மாலையாக கட்டி, இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பிரம்மபுரீஸ்வரருக்கு சாற்றினால் நினைப்பது நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
தற்போது இந்த கோயில் கும்பாபிஷேக வேலை நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் உதவலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment