_குளிகன்..._
சனீஸ்வர பகவான் தவ்வை தம்பதியினரின் மகன்.
எருமைத்தலையும் மனித உருவும் கொண்டவராக இருக்கிறார்.
ராவணனின் மனைவி மண்டோத்திரி
நிறைமாத கர்ப்பமாக இருக்கும் போது
குரு சுக்கிராச்சாரியாரை அவரது அரண்மனையில் சந்திக்கிறார்
சுக்கிராச்சாரியார்.
நல்ல வீரமான அறிவான குழந்தை பிறக்க
நவகிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் என ராவணன் சுக்கிராச்சாரியாரிடம்
கேட்டவுடன்
அவர் அனைத்தும் ஒரு கட்டத்தில் இருக்க வேண்டும் என சொல்கிறார்.
அப்படி என்றால் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்
இவ்வளவுதானா
என கூறி
முதலில் எனது குருநாதர் சுக்கிராச்சாரியாரை பிடித்து ஜெயிலில் போடுங்க என்றார்.
நவகிரகங்கள் அனைவரையும் பிடித்து வந்து ஜெயிலில் ஒரே இடத்தில் போட்டு அடைத்தார்
இராவணன்.
சுக்கிராச்சாரியாரை அனைவரும் கடிந்து கொண்டனர்.
மண்டோத்திரி குழந்தையை பிறக்க வைக்க முடியாமல்
குழந்தை வெளியே வராமல்
அதீத துன்பத்தில் ஆழ்ந்தார்.
கத்தியபடியே இருந்தார்.
ராவணன் மிகுந்த கவலைகொண்டார்.
காலத்தை கணக்கிடும் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இருந்ததால் காலம் தடுமாறி
அனைத்து செயல்களும் தடைபட்டது.
நவகிரகங்கள் நாம் எப்படி வெளியே போவது இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என வருத்தப்பட்டனர்.
சனீஸ்வர பகவான் அப்படியே தரையில் அமர்ந்து கண்களை மூடி சிவபெருமானை தியானித்தார்.
அந்த நேரத்தில் தவ்வை குளிகனை பெற்றெடுத்தாள்.
சனீஸ்வரபகவான் குளிகனுக்கு நேரத்தை பிரித்து கொடுத்தார்.
அந்த குளிக நேரத்தில் காலம் இயங்க ஆரம்பித்தது.
ராவணனுக்கு ஓர் வீரமான மகனும் கிடைத்தார்
ஒரு மனிதனின் ஜணன ஜாதகத்தில், அதாவது ஆயுள் காரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவானின் பிள்ளைகளான மாந்தி, குளிகன் ஆகிய இருவரில் குளிகன் என்ற உபகிரகமே ஒரு மனிதனின் ஆயுள் காலகட்டத்தை நிர்ணயம் செய்கிறார்.
சனீஸ்வரபகவானுக்கு பகலில் பிறந்தவர் குளிகன்.
இறவில் பிறந்தவர் மாந்தி ஆவார்.
இந்த குளிகனை வைத்து அஷ்டவர்க்கம் என்று கணக்குப் போட்டு ஜோதிட உலகம் ஆயுள் காலத்தை துள்ளியமாக சொல்லி விடுகிறது.
இந்த குளிகன் தோஷத்தை முற்றிலுமாக விளக்கிவிட கூடியவர் சித்திரகுப்தன்.
குளிகை காலத்தில் செய்யப்படுகிற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாகும். அதனால் நற்காரியங்களையும், சுபகாரியங்களையும் மட்டுமே இந்தக் காலத்தில் செய்கின்றார்கள்.
குளிகனை சனிக்கிழமைகளில் வணங்கலாம். சனீசுவரனை வணங்கும் போது குளிகனை சேர்த்து வணங்கலாம்.
காயத்திரி மந்திரம்
மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment