Tuesday, August 13, 2024

வடலூர் வள்ளலாரைப் பற்றிய அரிய செய்திகள்.....



திரு வள்ளலாரைப் பற்றிய அரிய செய்திகள்.
திருஅருட்பாவில் முதல் ஐந்து திருமுறைகளிலும் அடங்கியுள்ள 4192 பாடல்களில்அடங்கியுள்ள கருத்துக்கள்.

1) நூலின் பாயிரத்தில் கண்டவாறு "வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்" என்பதை விளக்குகின்ற மெய்ஞான கருவூலமாக முதல் ஐந்து திருமுறைகளும் விளங்குகின்றன.

2) சித்தர்களுக்கு உரிய பரிபாஷை சொற்களான "வெளிக்குள் வெளி"" இரவு பகலற்ற இடம் "எண் குணத்தான்" முதலியன முதல்ஐந்துதிருமுறைகளில் அமைந்துள்ளன.

3) ராமலிங்க பெருமானார் சென்னையில் வசித்த காலத்திலேயே "இவ்வுலகில் பொருந்தும் சித்தன் ஆனேன்" என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

4) வானில் இருந்து வந்தவர் என்று அறிவித்துள்ளார். 

5) ஒன்பது வயது முதல் 
12 வயது வரை முருகப்பெருமான் ஞான குருவாக விளங்கினார் என்று அறிவித்துள்ளார்.

6) 12 வயது முதலே நடராஜ பெருமான் ஞான கல்வியை கற்பித்து தவம் புரிய பயிற்சி அளித்தார் என்று அறிவித்துள்ளார். 

7)இறைவனும்இறைவியும் உணவளித்த நிகழ்ச்சிகளைகூறியுள்ளார்.

8) இறைவன் அரு (சோதி உருவம்) உரு (நடராஜபதி)
அருவுரு (சிவலிங்க வடிவ ஜீவசரூபம்) ஆகிய மூன்று தோற்றங்களில் உள்ள ஏகன் என்று தெளிவு படுத்தி உள்ளார். 

9) பரப்பிரமமே அல்லாஹ் என்று கூறி உலக மக்களின் ஆன்மநேய ஒருமைப்பாட்டை விளக்கியுள்ளார்.

10) இறைவனின் சொரூபமே ஜீவன் என்று சித்தர்கள் கண்ட உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். 

11) தம்முடைய சிறிய வயது முதலே இறைவன் தம்முள்ளிருந்து பாடுகிவிக்கின்றான் என்று அறிவித்துள்ளார்.

12) ஞானத்தின் அதிபதியாகிய விநாயகர் முக்கண் உடையவர் என்று வேறு எவரும் கூறாத செய்தியை கூறியுள்ளார். 

13) திருஞானசம்பந்தர் நடராஜ பெருமானின் நெத்திக்கண்ணில் இருந்து தோன்றியவர் என்று வேறு எவரும் கூறாத செய்தியை கூறியுள்ளார்.

14) பசுபதி பாசம் என்ற பரிபாஷையை விளக்கியுள்ளார். 

15) துரியும் துரியாதீதம் பற்றி குறிப்பிட்டுள்ளார். 

16) திருமாலும் பிரம்மனும் காணாத அடி முடியை கண்ட அனுபவத்தை விளக்கியுள்ளார். 

17) தன்னைத் தான் கண்ட அனுபவத்தை விளக்கியுள்ளார். 

18) வறுமையின் காரணமாக தவம் செய்வதில் தடை ஏற்பட்டதால் இறைவன் தண்டித்ததை விரிவாக விளக்கி உள்ளார். 

19) சிவபெருமானின் ஆணைப்படி திருஞானசம்பந்தர் சூக்கும தேகத்தோடு தம் முன்னாள் தோன்றி தவத்திற்குஉறுதுணையாய் இருந்ததை விளக்கியுள்ளார்.

20) மாணிக்கவாசகர் சூக்கும தேகத்தோடு தோன்றி திருவாசகத்தில் சேர்க்கப்படாத "தமிழ் தாழிசை" என்ற பதிகத்தை கற்பித்ததை கூறியுள்ளார்.

21) திருநாவுக்கரசரும் சுந்தரரும் தோன்றி ஆசிர்வதித்ததை கூறியுள்ளார் 

22) புவனகிரி வயலூரில் முருகன்ஆணையிட்டவாறு விநாயகரை வணங்கி பாடிய பின்னர் அவர் தமக்கு உபதேசம் செய்ததைவிளக்கியுள்ளார்.

23) ஞான தவம் செய்யும்போதுதெய்வங்களும், சமாதியில் உள்ள ஞானிகளும் வந்து உரையாடிஆசீர்வதிப்பார்கள் என்று கூறினார்.

24) பிரம்மரந்திரத்தின் உள்ளே துரியாதீதத்திற்கு மேலே அமிர்தம் ஊறுவதைப் பற்றி கூறியுள்ளார்.

25) சூக்கும சரீரத்தோடு தோன்றும் ஞானிகள் மற்றும் ஒளி உருவில் வரும் தெய்வங்கள் மீது இயற்கையான நறுமணம் எழுந்து வீசும் என்ற ரகசியத்தைவெளிப்படுத்தியுள்ளார்.

26) ஞான தவம் செய்யும் போது தச நாதங்கள் கேட்கும் என்ற ரகசியத்தை கூறியுள்ளார் 

27) அமிர்தத்தை சுவைத்த அனுபவத்தை பல பாடல்களில்விளக்கியுள்ளார்.

28) சூக்கும சரீரத்தையும் ஜீவ சொரூபத்தையும் தரிசித்த அனுபவத்தை விளக்கியுள்ளார்.

29) ஞானத்தவத்தில் விநாயகப் பெருமான் தமது தும்பிக்கையால் பிரம்மரந்திரத்த்தினு ள்ளே சுழுமுனை சுவாசத்தை தூக்கி ஏற்றி விட அது துரிய நிலையில் உள்ள சூக்கும சரீரத்தை உயர்த்தி துரியாதீத நிலையில் உள்ள ஜீவசொரூபத்தோடு ஐக்கிய படுத்திட உச்சிக்குழி திறந்து முத்தி என்ற முன்னுறு சாதனத்தை எய்திய அனுபவத்தைவிளக்கியுள்ளார்.

30) சிவபெருமான் இராமலிங்கரை நாதார்ந்த நாட்டின் நாயகராக முடிசூட்ட விரும்பி தம்முடைய பளிங்குத் திருமேனியை ராமலிங்கரின்உடலுக்குள் பொருத்தி இருக்கும் ரகசியத்தைவெளிப்படுத்தியுள்ளார்.

31) தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை கூறியுள்ளார். 

32) பொய் குரு மெய்குரு இருவரின்இலக்கணங்களையும் இலக்கியுள்ளார். அவருடைய காலத்தில் சென்னையில் பொய் வழிகாட்டிய குருவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 

33) வடலூரில் தான் துன்புறுத்தப்பட்ட போது சிவபெருமான் செய்த உதவிகளைவெளிப்படுத்தி உள்ளார்.

34) தம்முடைய இல்லற வாழ்க்கையைப் பற்றியும் வறுமையால் தன் மனைவி தாயார் அனைவரும் ஒருவேளை மட்டும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டதையும் படிப்போர்கண்கலங்குமாறு விவரித்துள்ளார்.

35) இளமையும் உடலும் நிலையற்றவை என்று அறிகுறித்து உள்ளார். 

36) ஆணவம் தவத்தை அழிக்கும் என்று எச்சரித்துள்ளார். 

37) கோபம் தவத்தின் எதிரி என்று எச்சரித்துள்ளார். 

38)ஆசையைவிலக்கினால் முத்தி கிட்டும் என்று கூறியுள்ளார்.

39) சத்துவ குணமே தவத்தை வளர்க்கும் என்றுதெளிவுபடுத்தியுள்ளார்.

40) ஆதி சித்தர் அகத்தியரின் வழிவந்த ஒரு சித்தரே ராமலிங்கர். மேலும் நந்தி தேவர் திருமூலருக்குஉபதேசித்த திருமந்திரத்தில் உள்ள சன்மார்க்கத்தையே உலகில் பரப்ப முயன்றவர் ராமலிங்கர்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...