Wednesday, August 7, 2024

நாக சதுர்த்தி என்ன செய்தால் சிறப்பு?

*-நாக சதுர்த்தி-*

என்ன செய்தால் சிறப்பு?

நாக சதுர்த்தி...!!

கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் அதாவது ஆடி வளர்பிறை சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

இந்தநாளில் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்வதை நாக சதுர்த்தி விரதம் என்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்கு பூஜை செய்து, புற்றுக்கு பால் ஊற்றி, புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், சங்குபாலன், கார்க்கோடகன், குளிகன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தை சொல்லிக்கொண்டே புற்றுக்கு பால் ஊற்றி பூஜிப்பது நல்லது.

திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள்.

நாக சதுர்த்தி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.

புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நெய்வேத்தியம் செய்து 12 முறை வலம் வந்து வணங்கினால் நன்மை உண்டாகும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...