⚜️ *பட்சீஸ்வரம் கருடேஸ்வரர் திருக்கோயில்*
🙏 *வழிபட்டவர்கள்* : கருடன் விஷ்ணு ஹனுமான் சனி மற்றும் பலர்.
பட்சீஸ்வரம் வேலூர் அருகே செய்யாறில் (திருவோத்தூர்) ஆண் பனை மரம் குலை தள்ளிய வேத புரீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகே உள்ளது.
பட்சி (பறவை) அரசனாகிய கருடன் வன்னி மரத்தடியில் வன்னி இலைகளால் லிங்கப் பரம் பொருளைப் பூசித்து விஷ்ணுவிற்கு வாகனம் ஆகும் நலம் பெற்றதால் பட்சீஸ்வரம் என்று பெயர்.
கருடனுக்கு அருள் புரிந்த ஈசனுக்கு கருடேஸ்வரர் என்று திருநாமம்.
*கருவறைக்கு முன்னர் கருடன் நின்று பூஜிக்கும் லிங்கம்* உள்ளது.
கோபுர வாசலில் கருடன் சிவ பூஜை செய்யும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கருடன் சிவ பூசை செய்வது சுதைச் சிற்பமாகவும் உள்ளது. வண்ண ஓவியமாகவும் விளங்குகிறது.
வெளிப் பிரகாரத்தில் ஞானப் பெருவெளி என்ற பெரிய தனிச் சந்நிதியில் அண்ட சராசரங்களையும் இயக்கிக் காக்கும் ஆடல் நாயகன் அருள் புரிகிறார்.
கருடனது மூத்த சகோதரனாகிய அருணன் திருவாரூர் பேரளம் அருகே *திரு மீயச்சூர் மேக நாதர் கோயிலில்* மேக லிங்கத்தைப் பூஜித்து சூரிய தேவனுக்குத் தேரோட்டியாகும் வரம் பெற்றான்.
*அருணனுக்கு அருளிய மேக நாதருக்கு அருணா மிகிரேஸ்வரர்*
பட்சீஸ்வரம் கருடேஸ்வரரைப் பூஜித்து கருட வாகனத்தைப் பெற்ற மகா விஷ்ணு கருவறைச் சுவற்றில் நின்றிருக்க மகா லட்சுமி பிரகாரத்தில் அமர்ந்துள்ளாள்.
கருடேஸ்வரரை வழிபட்டு வாழ்வு பெற்ற சனியும் ஆஞ்சனேயரும் தனிச் சந்நிதிகளில் உள்ளனர். பைரவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
*சிவ வடிவங்கள் மட்டுமே இருந்த , யாவும் கடந்த தூய சிவ Pபரம்பொருள் கோயிலில்* ஆகம விரோதமாகக் கட்டப்பட்ட பக்தர்களான மும்மல ஆண் பெண் தெய்வச் சந்நிதிகள் யாவும் *பிற்காலத்தவை* .
சிறு தெய்வ கிரக தேவர், மண்ணுலக வாசி அனுமான், காசி காவல் தெய்வ பைரவர் சந்நிதிகள் *தற்காலத்தவை* சமீப காலத்தவை.
*கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மான் கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே*
என ஈஸ்வரன் கோயிலை அடைந்தும் *சிவ மகிமை அறியாமல் வேறு ஒரு தெய்வத்தை நினைப்பவர் அஞ்சத் தக்க தீயவர்* என்று *ஈசனே திருக் கரத்தால் எழுதிய திருவாசகம் தெளிவுறுத்துகிறது.*
No comments:
Post a Comment