Tuesday, August 6, 2024

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாளாகும்.

இன்று ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு..!!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடலிற்கு நல்லது என்று கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுகிழமைகளில் அன்னையை வழிபட்டால் எல்லா நன்மைகளும் நமக்கு கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆண்டாள் அவதாரம் செய்த இந்த நாளை ஆடிப்பூரத் திருநாளாக கொண்டாடி வருகின்றோம்.

இத்தினத்தில் அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள்.

அம்மனுக்கு வளைகாப்பு

பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள்தான் ஆடிப்பூரம்.

அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். ஆடிப்பூரம் அன்று பூமி தாயினை வழிபட்டு அவளின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

வழிபாடு

ஆடிப்பூர நாளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, பூஜையறையில் விளக்கேற்றி குலதெய்வத்தையும், அம்மனையும் மனதார நினைத்து விரதத்தை தொடங்க வேண்டும். இந்நாளில் பெண்கள் பச்சை நிறத்தில் அல்லது பிங்க் நிறத்தில் புடவையை அணிந்து விரதத்தை அனுசரிப்பது சிறப்பை தரும்.

ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலைகளை போட்டு, இந்த துளசி தீர்த்தத்தை பருகி நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ளலாம். இத்துடன் பால், பழங்களையும் சாப்பிடலாம்.

மாலையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனின் வளைகாப்பு தரிசனத்தை மேற்கொள்ளலாம். மேலும், கோயிலுக்கு செல்லும்போது ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல் வாங்கி அம்மனுக்கு படைத்து தரிசிக்கலாம்.

அம்மனை தரிசிக்கும் போது உங்களின் வேண்டுதலை மனம் உருக வேண்டி அம்மனின் நாமத்தை உச்சரித்து வழிபடுங்கள். உங்களால் முடிந்த கலவை சாதத்தை அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து, கோவில் தீர்த்தத்தை பருகி விரதத்தை முடித்து கொள்ளுங்கள்.

அம்மனுக்கு படைத்த வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையலை யாராவது ஒருவருக்கு தானம் அளிக்கலாம். அதிலிருந்து சில வளையல்களை நீங்களும் அணிந்து கொள்ளலாம்.

பலன்கள்

அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

அதேபோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும்.

ஆடிப்பூர தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி கொடுப்பது நன்மை மட்டுமின்றி புண்ணியத்தையும் தரும்.

ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது.

ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பார்கள்.

ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட, கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.

திருமணம் ஆகாத பெண்கள் வளையல் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...