உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான
#அம்பாள்_அவதரித்த #ஆடிப்பூரம் இன்று
(#திருஆடிப்பூரம்)
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்
ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
#உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள்:
மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.
#ஆடிப்பட்டம் தேடி விதை:
ஆடி மாதத்தில்தான் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் சகல ஜீவராசிகளுக்கும் செழிப்பு உண்டாவதாக நம்பப்படுகிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பார்கள் இது பெயர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல. காம, குரோத, மத, லோப, மோக, மாச்சர்யத்தை களை பிடுங்கி எரிந்து “பக்தி” எனும் விதையை மனதில் விதைக்க வேண்டும் என்பது பொருள். ஆடி பிறந்ததுமே பண்டிகைகள் ஓடிவரும் என்பர்.
#ஆடித்தபசு:
“ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி” என்பார்கள். ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் ஆடிப்பூரம், நம்மையெல்லாம் தாங்குகிற பூமாதேவி அவள் அவதரித்தது ஆடிப்பூரத்தில் தான். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததாக சொல்லப்படுகிறது திருவையாற்றில் “ஆடித்தபசு” என்பது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது .
#காவிரி பூப்பெய்திய நாள்:
ஆடி பதினெட்டாம் பெருக்கு மிகவும் விசேஷமான நாளாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாமிரபரணி நீர் பெருக்கெடுத்து ஓடும் நாளாகும். காவிரி பூப்பெய்திய நாள் என்றும் போற்றப்படுகிறது. அன்று ஏராளமான பெண்கள் கருகமணி, காதோலை, காசு, புஷ்பம், வளையல் இவற்றை காவிரியில் விட்டு வழிபடுவார்கள். புது மணம் செய்து கொண்டவர்கள் தாலி பிரித்து கட்டுவார்கள்.
#ஆனி முற்சாரல் | ஆடி அடைச்சாரல்:
திருக்குற்றாலத்தில் மிகவும் விசேஷமான மாதம் இந்த ஆடி மாதம். “ஆனி முற்சாரல்”, “ஆடி அடைச்சாரல்” என்று மூலிகை நீரில் நனைய வரும் மக்கள் அதிகம். தொடர்ந்துவரும் பண்டிகைகளுக்கு தோரணம் கட்டி வரவேற்கும் மாதம் ஆடி மாதமே.
#அம்மனுக்கு வளைகாப்பு:
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுவது, அந்த அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதாக நினைத்து, அதனால் அம்மன் நமக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும் என்று பெண்கள் வழிபடுவது சிறப்பு. அம்மன் வளையல் அணிய ஆசைப்பட்டதாக ஐதீகம் உள்ளது, அதனால் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால் நினைத்ததை அம்மன் செய்வார் என்பது அதீத நம்பிக்கை. ஒற்றைப்படை அல்லது 108 வளையல் அணிவித்து வழிபட்டு அதை கலந்துகொண்டோருக்கு கொடுத்து கொண்டாடுவது வழக்கம்.
#செவிவழி வரலாறு:
முன்னோரு காலத்தில் வளையல் விற்பவர், வளையல் விற்றுவரும் வழியில் தலைசுற்றல் ஏற்படவே அருகில் இருந்த ஆலயத்தின் முன் ஓய்வெடுக்க அமர்ந்து கண் அயர்ந்து சற்றுநேரம் உறங்கிவிட்டார். விழித்து பார்க்கையில் அம்மன் அனைத்து வலையல்களையும் அணிந்த காட்சியை பார்த்து அதிர்ந்தார். உடனே தோன்றிய அம்மன் நான் தான் வளையல் அணியும் ஆசையில் அணிந்துகொண்டேன் என்று கூறிய வரலாறு பின்னாளில் ஆடிப்பூர விழாவாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment