சிவாலயங்களில் ஆறு கால பூஜை ( திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை, உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை) நடப்பது போல
நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். இந்த ஆறு பூஜைகளும் தேவர்களின் ஒரு நாளில் நடக்கும் ஆறு கால பூஜை என்பது ஐதீகம்.
நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதில் இன்று நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி நடக்கும் மஹாருத்ர மஹாபிஷேகம் ராக்கால பூஜையாகும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment