Sunday, September 15, 2024

சந்திர கிரகணம் யாருக்கு பாதிப்பு?

சந்திர கிரகணம் செப்டம்பர் 18, 2024 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும், இது உலகின் பல பகுதிகளிலும் தெரியும்.

சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 06:11 மணிக்கு நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 6 நிமிடங்களாகும்


இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா - உலகின் இரவுப் பகுதியிலிருந்து சிறப்பாகப் பார்க்கப்படும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் தெரியாது.. மேலும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும்.


சந்திர கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:



1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் பகவானி நினைத்து வழிபட வேண்டும்


2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 


3. கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது. 




4. குறிப்பாக கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.


5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை: 


1. உணவு மற்றும் தண்ணீரில், தர்ப்பை அல்லது துளசி இலைகளை போட வேண்டும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். 


2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடுவதால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். 


3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுதால் நன்மை உண்டாகும். 


4. சந்திரகிரகணம் முடிந்தவுடன்வெள்ளை பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

5. இந்தியாவில் உள்ள கோவில்களில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...