Sunday, September 15, 2024

வெள்ளப்பக்கம் அருள்மிகு சிவலோகநாதர் கோயில்....

வெள்ளப்பக்கம் அருள்மிகு சிவலோகநாதர்
தென்னாடுடைய சிவனே போற்றி                                                       என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள இயற்கை சூழல் நிறைந்த வெள்ளப்பக்கம் கிராமத்தில் கங்கை கொண்ட கோபுரத்தை கட்டிய இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஸ்ரீ சிவகாமசுந்தியுடன் சிவலோகநாதர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தீராத நோய்களும்; தீரும் என்பதும் ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடைகள் விலகும் என்பதும் இத்தலத்தின் ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் அன்னதானம் செய்தும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக பன்னீர் மரமும் தீர்த்தமாக ஈசான்ய தீர்த்தம் உள்ளது.


கோவிலுள்ள பலிப்பீடம் தாண்டி கோஷ்டத்தில் மகாகணபதி பாலமுருகன் லிங்கோத்பவர் வள்ளி தெய்வாணையுடன் சுப்ரமணியசுவாமி மற்றும் நந்திதேவர் உள்ளார். இங்கு தனி சனீஸ்வரன் (திருநள்ளாறுபோல்) கிழக்கு முக தனி சனீஸ்வர பகவனாக காட்சியளிக்கிறார்.

விண்ணுக்கொரு மருந்தாய் வேதவிருப்பொருளாய் கண்ணுக்கினியனாய் விளங்கிடும் எல்லாம் வல்ல சிவபெருமான் உலகின் உயிர்கள் அனைத்தையும் பாதுகாக்க திருவுள்ளம் கொண்டு இம்மண்ணுலகில் எழுந்தருளியுள்ளார். ஆதியும் அந்தமுமில்லா அந்த அருட்பெரும் ஜோதியை கசிந்துருகிப் பாடிய சிவநெறியாளர்கள் ஆட்கொண்ட அருட்காட்சியை இம்மண்ணுலகம் கண்டுள்ளது. நமசிவாய என்றும் ஒலி முழங்கும் சிவதலங்கள் பல இப்புண்ணிய பூமியாகிய பரதக் கண்டத்தில் தெய்வமணம் கமழும் தமிழகத்தில் சிவபெருமான் தனது பரிவாரங்களோடு எழுந்தருளியுள்ள நடுநாட்டின்கண் மூர்த்தி தலம் தீர்த்தம் இம்மூன்று நிலைகளாலும் சிறப்புற்றது.

பழம் பெருமை வாய்ந்த நெல்லிக்குப்பம் வெள்ளப்பாக்கம் வான்பாக்கம் ஆகிய அழகிய கிராமங்களில் பூலோகம் சிவலோகம் கைலாயம் ஆகிய சிவாலயங்கள் பிறந்துவாழ்ந்து முக்தியடையக்கூடிய மனிதன் மூன்று நிலைகளையும் குறிக்கக்கூடிய கோவில்கள் முக்கோண வடிவில் 3 கிலோ மீட்டார் தொலைவில் அமைந்திருப்பது நம் நடுநாட்டுத்தலத்தில் தான் என்பது உலக வியப்புக்குரியதாகும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...