Wednesday, September 18, 2024

ஶ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் கபிஸ்தலம்.....


*அருள்மிகு ஶ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்,*
*கபிஸ்தலம்,*
*தஞ்சாவூர் மாவட்டம்,*
*தமிழ் நாடு மாநிலம்*
*(108 திவ்ய தேசங்களில் 9 வது திருக்கோவில் ஆகும்)*


தமிழக கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த வைணவஸ்தலம் 900 ஆண்டுகள் முதல்1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைணவ ஸ்தலம்,திருக்கோவில் முழுக்க முழுக்க எம்பெருமான் மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .

🛕மூலவர் : எம்பெருமான் மகாவிஷ்ணு
🪷கஜேந்திர வரதர்


🛕 அம்மன்/ தாயார்:  
மகாலட்சுமி 
🪷ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்


🛕உற்சவர்:
தாமோதர நாரயணன்

🛕உற்சவர் தாயார்:
லோகநாயகி


🛕 இடம்: கபிஸ்தலம்


🛕மாவட்டம்:
தஞ்சாவூர்


🛕மாநிலம் : தமிழ்நாடு


🛕 பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்



🛕மங்களாசாசனம் செய்தவர்கள்:
திருமழிசை ஆழ்வார்


🛕 புராண பெயர்:
திருக்கவித்தலம்


🛕பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது.

🪷மூலவர்
கஜேந்திர வரதப் பெருமாள். இவர் ஆதிமூலம் என்றும் அழைக்கப்படுகிறார். 

🌷பெருமாள் இங்கு புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

🪷தாயார்
ரமாமணிவல்லி தாயார். 
🪷இவருக்குப் பொற்றாமரையாள் என்ற பெயரும் உள்ளது.


🪷விமானம்
ககனா க்ருத விமானம்.

🪷தல விருட்சம்
மகிழம்பூ மரம்

🛕தீர்த்தங்கள்
🌷கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம், 
🌷கபில தீர்த்தம்.

🛕திருவிழா
ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்.


🛕கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்க பட்டது. 

🛕இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். 
🌷ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். 

🪷அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.


🛕ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். 

🪷ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். 


🪷மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.

🛕ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். 


🪷காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. 


🪷திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். 


🪷முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.


🛕ஆஞ்சனேயருக்கும் அருள் அளித்த தலம் இந்த கபிஸ்தலம் (கபி-தலம்). 
இத்தலம் கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.


🛕தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. 

🪷ஏனைய நான்கு தலங்கள் 
🌷திருக்கண்ணபுரம், 🌷திருக்கோவிலூர், 🌷திருக்கண்ணங்குடி, 🌷திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.


🛕 கோவில்களின் விவரம் பின்வருமாறு 

🪷லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி

🪷கஜேந்திரவரதர் கோவில்,கபிஸ்தலம்

🪷நீலமேகபெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்


🪷பக்தவக்ஷல
பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை

🪷உலகளந்த பெருமாள் கோவில் திருக்கோவிலூர்


🛕திருமழிசை ஆழ்வார் இத்தலம் குறித்து ஒரே ஒரு பாசுரம் பாடியுள்ளார்..


🛕 திருக்கோவில் அமையப்பெற்றது ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் அமைப்பதற்காக கல்வெட்டுகள் கூறுகின்றது..


🛕 இடைக்கால சோழர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்..



🛕 எம்பெருமான் கஜேந்திர வரதர், புஜங்க சயனம் எனப்படும் சயன  நிலையில், கருவறையில் வீற்றிருக்கிறார்..

🪷விமானம்கங்கனாக்ருத விமானம் என்று அழைக்கப்படுகிறது . 

🛕கருவறைக்கு வலதுபுறம் ராமனவல்லிக்கு தனி சன்னதி உள்ளது. 

🪷முதல் சன்னதியில் யோக நரசிம்மர் , சுதர்சனர் , கருடன் மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன .

🛕 முக்கிய கோவில் குளம் கஜேந்திர புஷ்கரணி மற்றும் கோவில் வளாகத்திற்குள் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படும் மற்றொரு குளம் உள்ளது.

🛕காலை 7 மணிக்கு உஷத்காலம் ,

🪷 8:00 மணிக்கு காலசாந்தி , 

🪷மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலம் , 

🪷மாலை 6:00 மணிக்கு சாயரக்சை , 

🪷இரவு 7:00 மணிக்கு இரண்டம்கலம் , 

🪷இரவு 8:00 மணிக்கு அர்த்த ஜாமம். 

🛕திருமழிசை ஆழ்வார் இத்திருக்கோயிலின் பெருமாளை “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் – ஆற்றுப்படுகையில் சாய்ந்திருக்கும் கண்ணன்” என்று போற்றியுள்ளார். அன்றிலிருந்து கண்ணன் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.


🛕கோவில் பூஜை தினசரி அட்டவணை:

ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் கோவில் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், 
🌷மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


🛕எப்படி அடைவது:

🪷திருக்கூடலூரில் இருந்து 10 முதல் 12 கி.மீ.

🪷20 kms from Kumbakonam via Swamimalai.

🌷சுவாமி மலையிலிருந்து 8.5 கி.மீ.

🌷கும்பகோணத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலை #22ஐப் பயன்படுத்தி சுவாமிமலை வழியாக கபிஸ்தலம் வரை பயணிக்கலாம். 


🛕கோவில் தனிச் சிறப்புக்கள் :

* புஜங்க சயனத்தில் காட்சி தரும் பெருமாள்

* முதலை, யானைக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம்

* பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று


🛕ராமநாமவல்லி சந்நிதி, மூலஸ்தானத்திற்கு வலப்புறத்தில் உள்ளது. யோக நரசிம்மர், சுதர்சனர், கருடர், ஆழ்வார்கள் ஆகியோர்களுக்கு தனி சந்நிதிகள் உள்ளன.


🪷திருவிழாக்கள்

🌷வைகாசி விசாகம் (தேர்த் திருவிழா), 
🌷வைகாசி பிரம்மோற்சவம், ஆடி பௌர்ணமி (கஜேந்திர மோட்ச லீலை) தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். 


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...