Sunday, September 8, 2024

சிவபெருமான் என்ற ஈசனின் பாதுகாப்புப் படையே சிவகணம்

_சிவகணம் என்றால் என்ன? சிவகணம் ஆக என்ன செய்ய வேண்டும்?_
சிவபெருமான் என்ற ஈசனின் பாதுகாப்புப் படையே சிவகணம்
பிரபஞ்சம் உருவாகி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;கலியுகம் உருவாகி 5125(கி.பி.2024 இல்) ஆண்டுகள் ஓடி விட்டன;இந்த 5125 ஆண்டுகளுக்குள் நம்மில் பெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்ப இதே பூமியில் பிறந்து கொண்டுதான் இருக்கிறோம்;

ஒவ்வொருமுறையும் கடந்த ஐந்து பிறவிகளின் கர்மாக்களை அனுபவிக்கவே பிறக்கிறோம்;

இதைத் தடுத்து நிறுத்திவிட்டு,மறுபிறவியில்லாத முக்தி அல்லது சிவனுடன் கலப்பது எப்படி? என்ற நோக்கத்துடன் தான் இந்த பூமியில் பிறக்கிறோம்;

கர்மவினைகளின் தாக்குதலால் இந்த லட்சியத்தை மறந்து திசை மாறிச் சென்று கொண்டிருக்கிறோம்;

இதில் இருந்து மீளவே எளிய பரிகாரம் இருக்கின்றது;அதுதான் அண்ணாமலை கிரிவலம்!

ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களைப் பார்த்தாலே புரிந்துவிடும்;

சித்தர்கள் பவுர்ணமியன்று கிரிவலம் வருகிறார்கள்;அதனால் நாமும் கிரிவலம் செல்கிறோம் என்று பவுர்ணமி கிரிவலவத்திற்கு வருபவர்கள் தெரிவிக்கிறார்கள்;

பவுர்ணமி கிரிவலம் எவ்வளவு சிறப்பானதோ அதற்கு இணையான கிரிவலநாட்களும்,அதைவிட மிகவும் உயர்ந்த புண்ணியங்கள் தரும் கிரிவல நாட்களும் இருக்கின்றன;

மொத்தம் 1,00,008 விதமான கிரிவல முறைகள் இருக்கின்றன;இவைகளில் ஒருசிலவற்றைத்தவிர பிற கிரிவல முறைகள் மிகவும் கடினமானவை;

27 நட்சத்திரங்களில் ஈசன் தாமே தேர்ந்தெடுத்த நட்சத்திரமே ஆருத்ரா என்ற திருவாதிரை;

ஒரு வருடத்திற்கு(தமிழ் ஆண்டுதான்) 12 மாதங்கள்;எனவே 12 அல்லது 13 திருவாதிரை நாட்கள் வரும்;இந்த நட்சத்திரம் நிற்கும் நாட்களில் தொடர்ந்து அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

இப்படி 12 ஆண்டுகள் வந்துவிட்டால்,ஈசனின் கருணைக்கு பாத்திரமாகிவிடுவோம்;

மேலும்,நமக்குத் துரோகம் செய்யாத,நம்மீது உண்மையான அக்கறை கொண்ட ஆன்மீக குரு அமைவார் என்பது சர்வநிச்சயம்;

இன்றைய கலியுகச்சூழலில் உண்மையான ஆன்மீக குருவைத் தேடிக்கண்டுபிடிப்பதற்குள் நமது ஆயுளே முடிந்துவிடும் போலும்;

3000 முறை இந்த பூமியில் பிறந்து பிறந்து அதன் பிறகே நமக்கு பொருத்தமான ஆன்மீக குரு அமைவார் என்பது சித்தர்களின் தலைவரும் தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியமகரிஷியின் கூற்று;

அதுவரை நம்மால் காத்திருக்க முடியுமா?

 அதனால்,அண்ணாமலையாரைச் சரணடைந்துவிட்டால்,இப்பிறவியிலேயே நமக்குத் தகுந்த ஆன்மீக குரு கிடைக்க அகத்தியமகரிஷியே அண்ணாமலையாரிடம் பரிந்துரைக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன;

அரசியலை விடவும் ஆன்மீகத்துறையில் தான் அளவற்ற மற்றும் யூகமே செய்யமுடியாத துரோகங்களும்,உள்குத்து அரசியல்களும் இருக்கின்றன;

அண்ணாமலையாரைச் சரணடைந்துவிட்டால் அதுவெல்லாம் தூள் தூளாகிவிடும் என்பது கடந்த கால அனுபவ உண்மை;

சிவபெருமான் என்ற ஈசனின் பாதுகாப்புப் படையே சிவகணம் ஆகும்;

இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான சிவகணங்கள் அந்த ஈசனின் உத்தரவுக்காக பல கோடி ஆண்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன;

சிவகணம் ஆகும் தகுதி நம்மில் யாருக்கு வரும் தெரியுமா?

யார் அண்ணாமலையாரை தனது மானசீக குருவாக,தனது ஆத்மார்த்த அப்பாவாக ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிட்டும்;

யார் இப்பிறவியில் 108 திருவாதிரை நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார்களோ அவர்களே சிவகணம் ஆகும் தகுதியைப் பெறுகிறார்கள்;

சைவத்தின் தலைநகரம் அண்ணாமலை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்;இது உண்மைதான்;இந்தப் பெயரில் ஒரு புத்தகமும் வெளிவந்திருக்கிறது;

சைவம் மட்டுமல்ல;மானுடத்தின் பிறவிக் கர்மாக்களை சுலமாக நீக்கும் ஒரே இடமும் அண்ணாமலை மட்டுமே!

முற்காலங்களில் ராமபிரான் கிரிவலம் வந்திருக்கிறார்;

கிருஷ்ணர் கிரிவலம் வந்திருக்கிறார்;

நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கிரிவலம் வந்துகொண்டிருக்கிறார்கள்;

பஞ்சபூதங்களும்,தேவர்களும்,சித்தர்களும்,மகான் களும்,ஈசனோடு கரைய விரும்பும் ஒவ்வொருவருமே ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் கிரிவலம் வந்து கொண்டே இருக்கிறார்கள்;

பிரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக கிரிவலம் வந்தது யார் தெரியுமா?

லலிதாம்பிகை என்ற பார்வதிதேவிதான்;அவருக்குத் துணையாக வந்தவர் சித்தர்களின் தலைவர் அகத்திய மகரிஷி!

கிரிவலம் செல்லும் ஒவ்வொருவருக்கும் அன்னை லலிதாம்பிகையின் அருளும்,அகத்தியமகரிஷியின் ஆசியும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது நம்மில் பலர் உணராத அதிசயம் !!!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...