Monday, September 9, 2024

திருமணத்தடை நீக்கும் பெருகமணி அகத்தீஸ்வரர் திருக்கோயில்....

_திருமணத்தடை நீக்கும்  அகத்தீஸ்வரர் திருக்கோயில்!!!_

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கர்ம வினையால் அவதிப்பட வேண்டும் என்பது விதி!

 ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணமாகும்.

 30 வயது கடந்த ஆண் பெண்கள் பலருக்கு இப்போதைய காலகட்டத்தில் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.

 இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ்வதற்கு பல்வேறு  வழிமுறைகளை சித்தர்கள் மூலமாக நமக்கு சிவபெருமான் உபதேசமாக வழங்கியிருக்கின்றார்.

அதில் ஒன்றுதான் அகத்தீஸ்வரர் கோயில் வழிபாடு ஆகும்!!!

பலகோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான் தமிழ் மொழியை முருகக் கடவுளுக்கு சொல்லித் தந்தார்!!!

 முருகக்கடவுள் சித்தர்களின் தலைவருக்கு தலைவர் என்று போற்றப்படும் அகத்தியருக்கு சொல்லித்தந்தார்!!!

 முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியர் நாம் வாழும் பூமி முழுவதும் பயணம் செய்து மனிதர்களுக்கு தமிழ் மொழியை போதித்தார் !!!

நாம் வாழும் பூமியில் முதன் முதலில் மனிதர்களால் பேசப்பட்ட மொழி நம்முடைய தமிழ்மொழி என்பது நம்மில் பலருக்கு தெரியாது!!!

 தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் &

 தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும்

 தினமும் ஒரு முறையாவது 

"ஓம் அகத்தீசாய நமக" என்ற குரு மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் !!!

எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறை கூட "ஓம் அகத்தீசாய நமக" என்று ஜெபம் செய்யவில்லையோ அவருக்கு ஒருபோதும் முக்தி கிடைக்காது!!!

 அகத்தியர் பூமியில் இருந்த ஆயிரம் கோடி ஆலயங்களிலும் பூஜையும் வழிபாடும் செய்திருக்கிறார் !!!

தற்போது நம்முடைய ஆன்மீக பாரத நாட்டில் சுமார் ஒரு கோடி ஆலயங்கள் இருக்கின்றன.

 அது தவிர நம்முடைய ஆதிமூல முதல் குரு என்று போற்றப்படும் அகத்தியர்  பல ஆலயங்கள் கட்டியுள்ளார்!!!

 அவர் உருவாக்கிய சிவலிங்கங்கள் மூலவராக இருக்கும் கோயில்களுக்கு அகத்தீஸ்வரர் திருக்கோயில் என்று பெயர்!!!

 அவற்றில் பெரும்பாலான கோயில்கள் நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் இருக்கின்றன.

 அகத்தியர் சித்தர்களின் தலைவர் என்று போற்றப்படுவது போல பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி அன்னை லோபமுத்ரா  போற்றப்படுகிறார்!!!

 அன்னை லோபமுத்ராவிற்கும்  அகத்தியர் சித்தருககும்  திருமணம் நிகழ்ந்த இடம் நம்முடைய தமிழ் நாட்டில் தான் இருக்கின்றது!!!

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் பெருகமணி என்று ஒரு ஊர் இருக்கிறது .

அங்கே அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது.

 இந்த கோயில் இருக்கும் வளாகத்தில்தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக அகத்தியருக்கும் லோபமுத்ராவிற்கும் திருமணம் நடைபெற்றது.

 "நான் ஒரு தலை சிறந்த சிவ பக்தனை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று லோபமுத்ரா தாய் மனதுக்குள் சபதம் எடுத்து இருந்தார் !!!

அதை நிறைவேற்றுவதற்காக அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை லோபமுத்ராவுக்கு வழங்கினார் .

அதன் முடிவாக தான் எதிர்பார்க்கும் தலை சிறந்த சிவனடியார் என்ற சிவபக்தர் அகத்தியர்தான் என்பதை லோப முத்திரா உணர்ந்தார்.

பெருகமணி அகத்தீஸ்வரர் திருக்கோயில் அகத்தியருக்கும் லோபமுத்ராவிற்கும் திருமணம் ஈரேழு பதினான்கு உலகங்கள் மற்றும் அனைத்து விதமான அவதாரங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது .

கலியின் கொடுமையால்  இந்த தெய்வீக நிகழ்வு நம்மில் பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

 அகத்தியர் என்ற நம்முடைய குருவின் திருவுளப்படி இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

 முப்பது வயதை கடந்த ஆண்களும் பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வரவேண்டும் .

 அகத்தியர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கே வருகை தருவது அதிகமான அருளைப் பெற்றுத் தரும்!!!

இங்கே உள்ள மூலவருக்கும் அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப்பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடங்கள்) இங்கே பிரார்த்தனை செய்யவேண்டும்.

கோயிலுக்கு அருகில் தலவிருட்சமாக மகா வில்வமரம் அமைந்திருக்கிறது.

 இந்த மரத்தை எட்டின் மடங்குகளில் சுற்றி வலம் வர வேண்டும் .

எண்களில்  எட்டாம் எண் அகத்தியருக்கு உரியது!!

  இந்த ஸ்தல விருட்சத்தை பதினேழு முறை வலம் வர வேண்டும்.

 அவ்வாறு வலம் வரும்போது" ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ஶ்ரீ அகத்தீசாய நமக" என்ற மந்திரம் ஜெபித்த வலம் வரவேண்டும்.

 வசதி உள்ளவர்கள் இங்கு வந்து அபிஷேகம் செய்து அன்னதானம் செய்யலாம்!!!

 மிகவும் பழமையான கோயிலாக இருப்பதாலும் 

பலருக்கு தெரியாமல் இந்த கோயில் இருப்பதாலும்

 மிகவும் சாதாரண கோயில் போன்ற தோற்றம் தோற்றத்தில் இருக்கிறது!!!

 அகத்தியரை குருவாக ஏற்றுக்கொண்ட அன்பர்கள் அடியார்கள் பக்தர்கள் விசுவாசிகள் சீடர்கள் அனைவரும் ஒருமுறை இந்த ஆலயத்திற்கு வருகை தந்து குருவின் அருளோடு குருநாதரின் அருளைப் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்!!!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...