Sunday, November 24, 2024

சப்தகன்னியர் ஏழு பேரும் ஒரே சன்னதியில்...



இனி நமது தமிழகத்தில் உள்ள சில பிரசித்திப் பெற்ற கன்னிமார்கள் கோவில்களை யும், அந்தக் கன்னிமார்களே வழிபட்ட சில கோவில்களை பற்றியும் பார்ப்போம். உங்கள் ஊருக்கு அருகில் இந்த சப்த கன்னியர் கோவில்கள் இருந் தால் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

★திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், தேதியூர், கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் என்ற திருநாம த்தில் சாமுண்டி அம்மன் அருள் அளித்து வருகிறாள். இங்கு ஏழு பேரும் ஒரே சன்னதியில் அருள்புரிந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை வட்டம் வேம்ப நல்லூர் கிராமத்தில் சப்த கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது.

கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திரசூடேசுவரர் கோயிலில் சப்தமாதருக்கு சிற்றாலயம் உள்ளது.
அரக்கோணம் அருகேயுள்ள திருமால்புரம் ஒட்டிய பாலூர் கிராமத்தில் சப்த மாதர்களுக்கு வராஹி அம்மன் கோவிலில் ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெறுகின்றது.

★திருவாரூர் அருகில், காரை யூர் கிராமத்தில் அருள்மிகு 
ஸ்ரீஆயுதம் காத்த அம்மன் திருகோவில் உள்ளது. இந்த 
ஶ்ரீஆயுதம் காத்த அம்மன் சாமுண்டி அவதாரமாய் அருள்பாலித்து வருகிறாள். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்திற்காகச் சென்றபோது அவர்களின் ஆயுதங்களைப் பாதுகாத்ததால் ஶ்ரீஆயுதம் காத்த அம்மன் என்று பெயர் பெற்றாள்.

★கிருட்டிணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயிலில் திருச்சுற்றில் சப்தமாதர் திருவுருவங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தேனி மாவட்டம், எல்லப்பட்டி செக்டேம் கரையில் 100 வருடங் களுக்கு மேலாக உள்ள ஒரே கல்லிலான ஏழு கன்னிமார் திருவுருவத்திலான தனிக் கோவில் உள்ளது.

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், ஆயுதகளம் தெற்கு கிராமத்தில் ஸ்ரீ கன்னி யம்மன் ஆலயத்தில் சப்த கன்னிகளை 100 வருடங்களு க்கு மேலாக வழிபட்டு வருகின் றனர்.

★கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழமணக்குடி கிராமத் தில் ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட் டையை அடுத்த நெருஞ்சிப் பேட்டை காவிரியாற்றின் நடுவே உள்ள கன்னிமார் திட்டில் சப்தகன்னியர் புடைப்பு ச்சிற்பம் அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்த கெட்டிச் செவியூரில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் உள்ளது.

சேலம் அம்மாப்பேட்டை காளி கோயிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் அமைந்துள்ளது.

★சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு அருகில் முன்னு தித்த நங்கை அம்மன் கோயி லில் ஒரே கல்லில் சப்த கன்னி யர் சிலையை காணலாம்.

திருச்சி உறையூர் சாலை ரோடில் பாளையம் பஜாரில் சப்தமாதருக்கு சிற்றாலயம் உள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் கிராமத்தில் சப்த கன்னிகையர் கோவில் உள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது.

கரூர் மாவட்டம் கிரீன் லேண்ட் (பெரிய குளத்துப்பாளையம் மற்றும் சின்ன குளத்துப்பாளை யம்) கன்னிமார் சிற்றாலயம் அமைத்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், வெங்கட சமுத்திரம் ஏரிக்கரையில் சப்த கன்னிமார் திருக்கோவில் அமைந்துள்ளது.

★திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் அமைத்துள்ள அயித்தாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பிடாரி இளையாண்டி அம்மன் கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் இளையாண்டி அம்மனாகவும் மற்ற ஆறு கன்னிகையரும் தனித் தனி சிலைகளாக இருந்து அருள் பாலித்து வருகின்றனர். மேலும் இந்த கோவில் சுற்றி இருக்கும் எட்டு ஊருக்கு சொந்தமான எல்லை காக்கும் அம்மனாக உள்ளது. இந்த கோவில் எப்போது உருவானது என்று அங்கு உள்ள மக்களு க்கே தெரியாத புதிராகவும் உள்ளது. பல நூறு வருடங்கள் பழமையான கோவிலாக இருக்கலாம் என அங்கு உள்ள மக்களால் நம்பப்படுகிறது. இப்போது நடக்கும் 2024ம் ஆண்டில் இந்தக் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது.

★நீண்டு கொண்டே போவதால் சில கோவில்கள் மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இனி இந்த சப்த கன்னியரே வழிபட்ட சில கோவில்களைப் பற்றி நாம் காணலாம். சப்தமாதர்களில் முதலாவதான பிராம்ஹி வழிபட்ட திருத்தலம் - சக்கர மங்கை. சக்கரப்பள்ளி என அழைக்கப்பட்ட  இத்தலம் ஐயம்பேட்டை என தற்போது அழைக்கப்படுகிறது. இறைவன் சக்கரவாகேஸ்வரர். இறைவி தேவநாயகி.

மகேஸ்வரி வழிபட்ட திருத் தலம் - அரியமங்கை. இறைவன் அரிமுக்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை.

கௌமாரி வழிபட்ட திருத்தலம் - சூலமங்கலம். இறைவன் கிருத்திவாகேஸ்வரர். இறைவி அலங்காரவல்லி.

வைஷ்ணவி வழிபட்ட திருத் தலம் - நல்லிச்சேரி. இறைவன் ஜம்புநாதசுவாமி. இறைவி அகிலாண்டேஸ்வரி.

வராகி வழிபட்ட திருத்தலம் - பசுபதி கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பால்வளநாயகி.

இந்திராணி வழிபட்ட திருத்தலம் - தாழமங்கை. இறைவன் சந்திரமவுலீஸ்வரர். இறைவி ராஜராஜேஸ்வரி.

சாமுண்டி வழிபட்ட திருத்தலம் - திருப்புள்ளமங்கை. இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி சௌந்தர்யநாயகி.

★நண்பர்களே! இதுவரை சப்த கன்னியரைப் பற்றிய பொது வான சில குறிப்புகளைக் கண்டோம். இனி ஒவ்வொரு கன்னி தேவதையைப் பற்றி சிறிது விரிவாக காணலாம். சக்தி பீடங்களைப் பற்றி அறிவதற்குமுன் சப்த கன்னி யரைப்பற்றியும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...