Sunday, April 13, 2025

பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டு 2025 விசுவாவசு எப்படி இருக்கும்?

தமிழ் புத்தாண்டு 2025 : விசுவாவசு ஆண்டு வெற்றிகரமாக அமைய வழிபடும் நேரமும், முறையும்
தமிழர்களின் புதிய ஆண்டு பிறப்பதை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சித்திரை முதல் நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

பிறக்க இருக்கும் புதிய ஆண்டு அனைவருக்கும் நன்மையை தர வேண்டும் என்பதற்காக சித்திரை முதல் நாள் அன்று எப்படி வழிபட வேண்டும்? எந்த நேரத்தில் வழிபட வேண்டும்? ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக அமைய எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு 2025 :

தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டாக நாம் ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை 12 ராசிகளிலும் நிறைவு செய்து விட்டு, மீண்டும் முதல் ராசியான மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தை துவக்கும் நாளே தமிழ் புத்தாண்டாகும். குரோதி வருடம் நிறைவடைந்து அடுத்ததாக விசுவாவசு வருடம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி துவங்க உள்ளது. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருக்கும். தமிழ் புத்தாண்டு அன்றும், விசுவாவசு ஆண்டிலும் எந்த தெய்வத்தை, எந்த முறையில் வழிபட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


தமிழ் புத்தாண்டு வழிபாட்டு முறை :

சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாளான ஏப்ரல் 13ம் தேதியே வீட்டை சுத்தம் செய்து, தயார் செய்து விட வேண்டும். அன்று இரவு ஒரு தாம்பாலத்தில் பழங்கள், நகைகள், சில்லறை காசுகள் போன்றவற்றை எடுத்து வைத்து விட வேண்டும். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைப்பது சிறப்பு. அப்படி கிடைக்காதவர்கள் எந்த பழம் கிடைக்கிறதோ அந்த பழங்களை வைத்து கும்பிடலாம். நகைகள் இருந்தால் வைக்கலாம். இல்லா விட்டால் சில்லறை காசுகள் மட்டும் வைக்கலாம். வெற்றிலை பாக்கு, எலுமிச்சம் பழம் வைக்க வேண்டும். இவை இரண்டுமே வெற்றியும் அடையாளமாக கருதப்படுகிறது.


கனி காணுதல் :

சிலருக்கு அரிசி, பருப்பு, உப்பு போன்ற தானியங்கள், மஞ்சள் ஆகியன வைக்கும் வழக்கம் இருக்கும். அப்படி இருந்தால் அவற்றை படைத்து வழிபடலாம். மஞ்சள் நிற பூக்கள் வைக்கலாம். ஏதாவது ஒரு இனிப்பு, இவை அனைத்தையும் வைத்து, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து படும் அறையில் ஒரு ஓரமாக வைத்து விடலாம். காலையில் எழுந்ததும் கண்ணாடியில் அந்த பொருட்களையும், நம்முடைய முகத்தையும் பார்த்து விட்டு, தாம்பாலத்தில் உள்ள பொருட்களை தொட்டு வணங்கி விட்டு, குளித்து விட்டு வந்து விளக்கேற்றி சாமி கும்பிடலாம். இதற்கு கனி காணுதல் என்ற பெயர். வீட்டில் உள்ள அனைவரும் கனியை பார்த்த பிறகு அதை எடுத்து விடலாம். முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து நைவேத்தியமாக வைத்து படைத்து குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும். எதுவும் செய்ய முடிவில்லை என்றால் வெற்றிலை, பாக்கு மட்டும் வைத்து வழிபடலாம்.

அறுசுவை உணவு :

அன்றைய தினம் வீடுகளில் கண்டிப்பாக வேப்பம்பூ ரசம் வைக்க வேண்டும். அதே போல் மாங்காய் பச்சடி வைக்க வேண்டும். அறுசுவைகளும் அன்று உணவில் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக இவற்றை சமைத்து, அப்பளம், பாயாசம், வடை என என்ன முடிகிறதோ அதை சமைத்து, வாழை இலை போட்டு குல தெய்வத்திற்கு படைத்து விட்டு நாமும் சாப்பிடலாம். வாழ்க்கையில் அனைத்து விதமான விஷயங்களும் நடைபெறும். இது இயற்கை. ஆனால் பிறந்துள்ள விசுவாவசு ஆண்டில் நன்மைகளையே கொடு இறைவா என வேண்டிக் கொண்டு அறுசுவை படைத்து வழிபட வேண்டும். இரவு கனி காண்பதற்காக வைத்த பழங்களையும் வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து சாப்பிடலாம். முடிந்தால் அன்றைய தினம் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். தமிழ் புத்தாண்டு 2025 அன்று தானம் செய்வது நல்லது.


தமிழ் புத்தாண்டு வழிபாட்டு நேரம் :

காலை 6 முதல் 07.20 வரை
காலை 09.10 முதல் 10.20 வரை
இலை போட்டு வழிபடும் நேரம் :
பகல் 12.30 முதல் 01.30 வரை

புத்தாண்டில் வழிபட வேண்டிய தெய்வம் :

இது சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகும். சூரிய பகவானுக்குரிய தெய்வமாக இருப்பவர் சிவ பெருமான். சூரிய பகவான், உயர் பதவி, ஆரோக்கியம், செல்வ வளம், செழிப்பு ஆகியவற்றிற்கு உரிய கிரகமாவார். அதனால் விசுவாவசு ஆண்டு வெற்றிகரமாக அமைய சிவ வழிபாட்டினை, சூரிய வழிபாட்டினையும் தினமும் செய்வது சிறப்பு. தினமும் காலையில் சூரிய உதய சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவ மந்திரங்களை சொல்லி வருவதால் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான பலன்களை பெற முடியும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


No comments:

Post a Comment

Followers

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்க மயிலாப்பூருக்கு வாங்க...

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்க மயிலாப்பூருக்கு வாங்க! நற்றுணையாவது அண்ணாமலையாரே  சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நி...