Tuesday, April 8, 2025

ஆயுள் தோஷம்' போக்கும் திருநீலக்குடி - சப்த ஸ்தான விழா .

தரிசிப்பவர்  'ஆயுள் தோஷம்' போக்கும் விழா இது...!
        திருநீலக்குடி - சப்த ஸ்தான விழா  
                         (ஏழூர் பல்லக்கு)
                  சித்திரை பிரும்மோற்சவம்                 
 மார்கண்டேயர்  சிரஞ்சீவி பதத்தினைப் பெறுவதற்காக சிவபெருமானை பூஜித்த தலங்கள் 108 என்பர். இவற்றுள் அம்மையப்பர் அருட்காட்சியுடன் சிரஞ்சீவி பதத்தினைப் பெற்ற தலம்  திருநீலக்குடி.
இதனைப் போற்றிடும் விதமாக சுற்றியுள்ள  ஏழு தலங்களில் வலம் செய்து இத்தலத்து இறையை நன்றியுடன் போற்றி   வணங்கினார். பெருமானை அம்பிகையுடன்  சிவிகையில் எழுந்தருளச் செய்து தொழுத படியே பின் நோக்கியவண்ணராய்த் தாம்  நடந்தபடி, சுற்றியுள்ள 6 சிவாலயங்களை திருவலம் செய்துள்ளார் மார்கண்டேயர் என்பது புராணத்தகவல். 

இப்புண்ணிய  நிகழ்வினைச்  சிறப்பிக்கும் விதமாக வருடாந்திர  சித்திரைப் பெருவிழா சமயத்தில் அம்மையப்பரை வணங்கிடும் மார்கண்டேயருடன் கூடிய  பல்லக்குடன் சுற்றி உள்ள ஆறு தலங்களையும் வலம்செய்து வழிபடும் ஐதீகநிகழ்வு 12-ம் நாள் உற்சவமாக  நிகழ்த்தப்படுகிறது.               
இந்த நிகழ்வினை 'ஏழூர்பல்லக்கு' என்ற பெயரில், சப்தஸ்தான விழாவாகப் போற்றுகின்றனர். 

மார்க்கண்டேயரின் அழகிய திருவுருவினை ஆலயத்தின்  வெளிமண்டபத்தில் தரிசிக்கலாம். ஆயுள்  தோஷம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் இத்தலத்து இறையை வணங்குவதினாலும், இந்த ஏழூர் பல்லக்கு நிகழ்வினைத் தரிசிப்பதினாலும் தோஷம் அகன்று மனபயங்கள்  நீங்கப் பெறுவது கண்கூடு. 

#சப்தஸ்தான #தலங்கள்:

1. #திருநீலக்குடி - ஸ்ரீ அநூபமஸ்த்தனி சமேத ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி.

2. #இலந்துறை - ஸ்ரீ அபிராம சுந்தரி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரர்.
(காலை வேளை)

3. #ஏனாதிமங்கலம்- ஸ்ரீ சௌந்திர நாயகி சமேத ஸ்ரீ சோம நாதர்.
(முற்பகல்)

4. #திருநாகேஸ்வரம் - ஸ்ரீ கிரிகுஜாம்பிகை சமேத ஸ்ரீ நாகநாதேஸ்வரர்.  
(உச்சிக் காலம்)

5. #திருபுவனம்- ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்ப ஹரேஸ்வரர்.
(சாயரக்ஷை)

6. #திருவிடைமருதூர் - ஸ்ரீ ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை சமேத ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர்.
(இரவு)

7. #மருத்துவக்குடி - ஸ்ரீ அபிராமியம்பாள் சமேத ஸ்ரீ ஐராவதேஸ்வரர்.
(மறுநாள் முற்பகல்)
   
திருக் கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் - 
ஸ்ரீ #மனோக்கியநாத சுவாமி
 (#நீலகண்டேசுவரர்) ஆலயம், #திருநீலக்குடி (#தென்னலக்குடி) - தஞ்சாவூர் மாவட்டம்
இறைவியர்:
1. ஸ்ரீ #அநூபமஸ்த்தனி  எனும் அழகாம்பிகை.
2. ஸ்ரீ #பக்தாபீஷ்டப்ரதாயினி எனும் தவக்கோலம்

அமைவிடம்: கும்பகோணம் காரைக்கால் வழித் தடத்தில் கும்பகோணத்திலிருந்து 12 கி்மீ  தொலைவிலும் ; ஆடுதுறைக்கு 3 கி்மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

20 வகை பிரதோஷங்கள்

20 வகை பிரதோஷங்கள் *1. தினசரி பிரதோஷம்.* *2. பட்சப் பிரதோஷம்.* *3. மாசப் பிரதோஷம்.* *4. நட்சத்திரப் பிரதோஷம்.* *5. பூரண பிரதோஷம்...