Monday, December 25, 2023

உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்.. உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலின் வரலாறு.

ஆருத்ரா ஸ்பெஷல்

உத்திரகோசமங்கை நடராஜர்.
உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்.. உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலின் வரலாறு.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.  
உலகிலேயே முதல் நடராசர் தோன்றிய ஊர், உலகின் உள்ள அனைத்து ரிசிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் என பல்வேறு சிறப்புகளை இந்த இக்கோயில் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..

இந்தக் கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் என்று கருதப்படுகிறது. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 

இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது. 

இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகசுவர இலிங்கம் உருவாக்கிய ஆலயம்.

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற வாக்கியம் உருவான இடம். மரகத நடராசர் சிலை உள்ள ஆலயம். 
இப்படி பல அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

இந்த கோவிலை பற்றிய சிறப்பு தகவல்கள் :

உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை அவர்களது தலைநகராக இருந்தது. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், 
இலந்திகைப் பள்ளி, பத்ரிகா சேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

இராமாயண காலத்துக்கு முந்தையது :

மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் இராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

இத்தலத்தில் வேதவியாசர், 
காக புயண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர். இத்தலத்து பஞ்சலோக நடராசர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

முருகனுக்கு யானை வாகனம் :

இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது. 

இராமேசுவரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், இராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்கூறிய கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆதிசைவர் வசமிருந்த தலம் :

ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே இராமநாதபுரம் அரசரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்று வரை ராமநாதபுர சமத்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம். உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

பிரதோசத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோசங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும். இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.
ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூசை தொடர்ந்துசெய்தால் 
தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

இராமேசுவரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம். டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்சி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் நடராசர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றியடையவில்லை.

காகபுயண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர். இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராசர் சன்னதி சகசசுவரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடராசர் பச்சை மரகதக்கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் பழமையான கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள். காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம் அன்னாபிசேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

தினமும் இத்தலத்தில் 
காலை 5.30 மணிக்கு உசத் காலம்,
8 மணிக்கு கால சாந்தி, 
10 மணிக்கு உச்சிக் காலம், 
மாலை 5 மணிக்கு சாயரட்சை, 
இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூசைகள் நடத்தப்படுகிறது. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, 
மதியம் 12.30 மணிக்கு, 
மாலை 5.30 மணிக்கு அபிசேகம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

மரகதக்கல் நடராசர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர். இத்தலத்தில் உள்ள இராசகோபுரத்தில் சர்பேசுவரர் சிலை உள்ளது. 
உலகத்தின் பழமையான  கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. நடராசர் இங்கு அறையில் ஆடிய பின்னர் தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

தொன்மையான இலந்தை மரம் :

இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம். இங்குள்ள மங்களநாதர் இலிங்க வடிவில் உள்ளார். தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம். உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகசுவரலிங்கம் இங்குள்ளது.

பரதநாட்டிய கலை அறிமுகம் :

உத்தர கோசமங்கை திருத்தலமானது இராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும். இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், 
உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
 
சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். 

மிகப் பழமையான ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து சென்றால் மனநிறைவுடன் செல்லுவது நிச்சயமாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருவாதிரைத் திருவிழாக் கோயில்கள்*

*திருவாதிரைத் திருவிழாக் கோயில்கள்*     
                                                                                                   *திருவுத்தர கோச மங்கை  மங்களேஸ்வரர் திருக்கோயில்* :     
     
   அறுபத்தாறு முனிவர்களுக்கு இருபத்தெட்டு ஆகமங்களையும் அவற்றின் பொருளையும் ஆகமேசுவரன் உரைத்த மங்களமான திருக்கோயிலில் *மரகத  நடராஜருக்கு  அபிஷேகம் நடப்பது மார்கழித் திருவாதிரை யன்று மட்டுமே*. 

 எதிரே பெரிய  நந்தி கொடிக் கம்பம் பலிபீடம்  ஆகியவற்றுடன்  *தனிக் கோயில் போல் சிறப்புறும்  பெரிய நடராசர் சந்நிதியில்*   வருடம் முழுவதும் சந்தனக் காப்புடன் இருக்கும் மரகத நடராஜருக்கு  மார்கழித் திருவாதிரையில்   இரவும் பகலும்  நாள் முழுவதும்  அபிஷேகம் நடை பெற்று மீண்டும் சந்தனக் காப்பு சார்த்தப்படும்.  

        🌙  *திருவுத்தர கோச மங்கைக் கோணார் பிறைச் சென்னிக் கூத்தன் குணம்  பரவி*   (திருவாசகம்)         
     
  என்று மாணிக்க வாசகர்  எட்டு  குண  மரகத நடராசரைப் போற்றுகிறார். 

நடராஜர் பிரகாரத்தில்   *மாணிக்க வாசகருக்குத் தனிச் சந்நிதி*  உள்ளது.     

நடராசர் சந்நிதி மண்டபத்திலிருந்து  துளை வழியே  ஒரு புறம்  மாணிக்க வாசகரையும் மறு புறம் நேர் எதிரே அவருக்கு *ஜோதியாகக் காட்சி அளித்த மங்களேஸ்வரரையும்* காணலாம்.       

இந்த ஈஸ்வரன்   சந்நிதி மாடச் சந்நிதியாக உயரமாக நடராசர் பிரகாரத்தில் உள்ளது.   

☸️      *உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக  வேடம் காட்டிய இயல்பும்*      

  ⚜️          *தங்கு உலவுச் சோதித்   தனி உருவம் வந்து அருளி* (திருவாசகம்)        

       என   மாணிக்க வாசகருக்கு மங்கள நாதர்   *ஆட்கொண்டு அருளிய தனித்த  தட்சிணா மூர்த்தியாகவும்*       *ஜோதி வடிவமாகவும்   காட்சி அருளினார்*  என்ற  வரலாறு தெரியாத ஆலய நிர்வாகம் *தனி உருவமான  சிவ லிங்கத்திற்கும் தட்சிணா மூர்த்திக்கும்  மாறாக*  உமையோடு இருக்கும்  உமா மகேஸ்வரரைத்  தவறாக வைத்துள்ளது.  

நடராசர் பிரகாரத்தில் பதினோரு  ருத்திரர்கள் பூஜித்த பதினோரு லிங்கங்கள் உள்ளன.  

மரகத நடராஜர் சந்நிதியில்  ஸ்படிக லிங்கமும் மரகத லிங்கமும் உள்ளன. 

*மாணிக்க வாசகர் சந்நிதி* வெளிப் பிரகாரத்தில் *ஆயிர லிங்கச் சந்நிதி  அருகேயும்* குளக் கரையை  ஒட்டி   அமைந்துள்ளது.   

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? 

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?🌺

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். 

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

 ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

 இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஆறுபடை வீடு முருகன் கோவில் அதன் தாிசன வழிகாட்டி

ஆறுபடை வீடு அதன் தாிசன வழிகாட்டி 
arupadai veedu map
முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம்,​​ ‘திருமுருகாற்றுப் படை’ ஆகும்.​ பெரும் புலவர் நக்கீரர்,​​ முருகன் அருள் பெற்றுப் படைத்த சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படை,​​ முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.முருகன் அருள் பெற்ற புலவர்,​​ மற்றோர் புலவரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப் படை ஆகும்.​ இதனால்,​​ திருமுருகாற்றுப் படைக்குப் ‘புலவர் ஆற்றுப் படை’ என்ற வேறு பெயரும் உண்டு.​’இயற்கை அழகே முருகன்’ என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும்.​ அதனால் முருகப் பெருமானின் அழகைக் ‘கை புனைந்து இயற்றாக் கவின் பெரு வனப்பு’ ​ என்று கொண்டாடுவார்.​ ​பழந்தமிழ் இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்,​​ முருகப் பெருமானை ‘சேயோன்’ என்ற பெயரால் அழைக்கிறது.​ ‘சேயோன் மேய மைவரை உலகம்’​ என்பது தொல்காப்பிய சூத்திரத்தில் காணப்பெறும் தொடராகும்.​ ​ ‘சேயோன்’ என்பதற்கு ‘இளையவன்’ என்ற பொருளும் உண்டு.​ இளமை எங்குள்ளதோ அங்கே அழகும் கொஞ்சி விளையாடும்.​ ‘மைவரை உலகம்’ என்றால் ‘மழை மேகம் சூழ்ந்த மலைப் பகுதி’ என்பது பொருள்.​ மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சித் திணை என்று கூறுகிறது தொல்காப்பியம்.​ ஆம்!​ குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் நின்று அருள் பாலிப்பான்.​’ஆற்றுப் படை’ என்பதே ‘ஆறுபடை’ எனத் திரிந்துவிட்டது என்றொரு கருத்துண்டு.​

முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்.

திருச்செந்தூரில் தொடங்கி திருத்தணியில் முடியும் வரைபடம் இங்கே காட்டப்பட்டுள்ளது. உங்கள் வசதியை பொறுத்து நீங்கள் இதே வழித்தடத்திலோ அல்லது திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்கலாம்.

உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களி்ல் ஒவ்வொரு கோயிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரத்தை கொடுத்துள்ளேன். ஆனால், விசேஷ நாட்களில் தரிசன நேரம் மாறுபடலாம். ஆறு கோவில்களிலும் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கினால் முருகப் பெருமானை வழிபடலாம். சிறப்பு தரிசனத்திற்கு கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளாவன:-

🏵️ திருப்பரங்குன்றம்
‘முதல் படை வீடு’ என்ற பெருமையைப் பெறுகின்றது,​​ மதுரை மாநகரை அடுத்துள்ள திருப்பரங்குன்றம்.​ சூரபத்மனை அழித்து,​​ தேவர்களைப் பாதுகாத்தார் முருகப் பெருமான்.​ அவருக்கு தன் மகள் தேவசேனாவை மணம் முடிக்க விரும்பினான் இந்திரன்.​ முருகப் பெருமான் -​ தேவசேனா திருமணம் நிகழ்ந்த திருத்தலமே முதலாம் படை வீடாகிய திருப்பரங்குன்றம்.​திருப்பரங்குன்றத்தில் மலையைக் குடைந்து கர்ப்ப கிரஹம் அமைக்கப் பெற்றுள்ளது.

🏵️ திருச்செந்தூர்
சூரபத் ​மனை முரு​கப் பெரு​மான் அழித்த திருத்தலமே​​ இரண்​டாம் படை வீடான திருச்​செந்​தூர்.​ நெல்லை மாவட்​டத்​தில் மிகச் சிறந்த முரு​கன் தல​மாக,​​ கடற்​கரைக் கோயிலாகத் திகழ்கின்றது இவ்வாலயம்.​ ஆண்டுதோறும் இங்கு கந்த சஷ்டி விழா,​​ மிகவும் சிறப்பாக நிகழ்கின்றது.​ திருமலை நாயக்க மன்னரின் காரியக்காரர் வடமையப்பப் பிள்ளை என்பவர்,​​ திருச்செந்தூர் முருகப் பெருமானின் பக்தராக விளங்கியவர்;​ இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தவரென்று வரலாறு சொல்கிறது.​ஊமையாக இருந்த குமர குருபரர்,​​ செந்திலாண்டவர் அருளால் பேசும் சக்தி பெற்று,​​ பாடும் திறனும் பெற்று ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’,​ ‘மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்’ ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்.​டச்சு கொள்ளையர்களை நடுநடுங்க வைத்து,​​ அவர்களையும் தன்னை வணங்க வைத்த தனி ஆற்றல் படைத்தவர் திருச்செந்தூர் முருகன் என்றொரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.

🏵️ பழம் நீ ​(பழனி)
‘பழம் நீ’ என்பதே ‘பழனி’ எனத் திரிந்தது.​ மூன்றாம் படை வீடான பழனிக்கு,​​ ‘திரு ஆவினன் குடி’ என்பதே பழந்தமிழ்ப் பெயராகும்.​ இங்கு ஆண்டுதோறும் நிகழும் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கு,​​ பல்வேறு காவடிகள் சுமந்து பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர்.​ ​ இங்கு திருத்தேர் விழா,​​ திருக்கல்யாண விழா,​​ கந்த சஷ்டி விழா,​​ ஆடிக் கிருத்திகை விழா ஆகியவையும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.​ ​பழனி மலையில் பாதம் தேய நடந்து சென்று வழிபாடு செய்வதே சிறப்பு.​ இருப்பினும் முடியாதவர்களுக்காக விசேஷ வாகன வசதியை ஆலய நிர்வாகம் செய்துள்ளது.​ மலையுச்சியில் நவ பாஷனங்களால் உருவாக்கப்பட்ட ஞானப் பழமாக முருகப் பெருமான் விளங்குகின்றார்.​ இவருடைய எழிலின் நேர்த்தியைக் காணக் கண் கோடி வேண்டும்.​ பழனி முருகப் பெருமானைத் தங்கத் தேரில் வைத்து வழிபாடு செய்யும் எழில்மிகு காட்சியையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.​ வேண்டுதலாகப் பணம் கட்டி முருகப் பெருமான் பவனி வரும் தங்கத் தேரை இழுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.​ இங்கே கிரிவலமும் பௌர்ணமி நாளில் நிகழ்கின்றது.

🏵️ சுவாமிமலை
பிரணவ மந்திரத்தின் உட்பொருளை,​​ தந்தை சிவபெருமானுக்கே உபதேசித்த தனயன் முருகப் பெருமான்.​ இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த நான்காம் படை வீடே சுவாமிமலை.​ ‘சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா’ என்று இந்த லீலையை வர்ணித்து மகிழ்ந்துள்ளார் அருணகிரிநாதர்.​ இந்தத் திருத்தலத்தை திருமுருகாற்றுப் படையும்,​​ சிலப்பதிகாரமும் ‘திரு ஏரகம்’ என்று குறிப்பிடுகின்றன.​ தஞ்சை மாவட்டத்தில்,​​ கும்பகோணம் அருகிலுள்ள ‘சுவாமி மலை’ முருகன் தலத்தில் எப்போதும் திருவிழாக் கோலம்தான்.​ இங்கும் ஆடிக் கிருத்திகை விழா,​​ கந்த சஷ்டி விழா,​​ வைகாசி விசாகப் பெருவிழா,​​ பங்குனி உத்திரப் பெருவிழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடக்கின்றன.

🏵️ திருத்தணிகை
‘சிக்​கல்’ என்ற திருத்தலத்தில் வேல் வாங்கி,​​ செந்தூரில் சூரபத்மாதி அவுணர்களை அழித்து,​​ சினம் அடங்கி அமைதி காண முருகப் பெருமான் திருக்கோயில் கொண்ட ஐந்தாம் படை வீடே திருத்தணி.​ போர் உணர்வு தணிந்ததால் இத்தலம் ‘செருத்தணி’ என்று முன்பு அழைக்கப் பெற்றதாகவும்,​​ ‘செருத்தணி’ என்பதே ‘திருத்தணி’ எனத் திரிந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.​ஆறுபடை வீடுகளில் படித் திருவிழா,​​ குறிப்பாக ஆடிக் கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக நிகழும் திருத்தலம் திருத்தணியாகும்.​ திருப்புகழைப் பாடிப் பரவும் பக்தர்களின் பாக்கியமாக ஆடிக் கிருத்திகை அமைந்துள்ளது.​கிருத்திகை விரதம் இருந்து,​​ திருத்தணி முருகனைப் பக்தியுடன் படியேறி வழிபாடு செய்தால் சகல வளமும் நலமும் பெறலாம்.​ ​’வள்ளி’ என்ற குறவர் குலப் பெண்ணை மணம்புரிந்த திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் திருத்தணிக்கு உண்டு.’தேவசேனா’ என்ற தேவேந்திரன் திருமகளைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமான்,​​ ‘வள்ளி’ என்ற குறவர் மகளைத் திருத்தணியில் மணம் செய்து கொண்டான்.​ முருகப் பெருமானுக்கு ‘ஏற்றத் தாழ்வு’ என்பது இல்லை என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே வள்ளி-தெய்வயானை ​(தேவசேனா)​ திருமணமாகும்.​ ஆம்!​ பக்தர்களிடம் உயர்வு -தாழ்வு காட்டாத பரம்பொருளே முருகன்!​ முருகப் பெருமானின் இரு தார மணத்தின் நோக்கம் இதுதான்.

🏵️ பழமுதிர் சோலை
‘பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’​ என்று தன் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்வார் பெரும்புலவர் நக்கீரர்.​ ‘அழகர் மலை’ என அழைக்கப் பெறும் ‘பழமுதிர்சோலை’ சைவ-வைணவ ஒருமைப்பாட்டின் சின்னம்!​ இந்தத் தலத்தில் கள்ளழகராகிய திருமாலும் கோயில் கொண்டுள்ளார்!​ அழகுக்கெல்லாம் அழகான முருகப் பெருமானும் குடி கொண்டிருக்கிறார்.​ ‘முருகு’ என்ற சொல்லுக்கே ‘அழகு’ எனும் பொருள் உண்டே!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நடராசர் ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.

நடராஜர் சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன என வரலாறு சொல்வதைப் படித்திருப்போம். நடராஜ சிலை முழுதும் குறியீடுகளாக நிறைந்திருப்பதை பார்க்கலாம்.
அந்தக் குறியீடுகளில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.

ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.

இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?

முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில்:

சேஷநாகம் – கால சுயற்சியையும்
கபாலம் – இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை – அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் – அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.

பின் இடது கரத்தில் அக்னி, சிவன் – சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

வலது காலின் கீழே இருப்பது ‘அபஸ்மாரன்‘ எனும் அசுரன் – ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.

தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது.

இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் – அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’ என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த நாகம் – சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே ‘மகாகாலம்’. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!

அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவரே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறார்.

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

– பன்னிரெண்டாம் திருமுறை
சகலமும் சிவார்ப்பணம்
ஓம் சிவ சிவ ஓம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

Sunday, December 24, 2023

அருள்மிகு ஶ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர்.


*அருள்மிகு ஶ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம்.*

🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1300 ஆண்டுகள் முதல் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕மூலவர் : திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர்,
தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர். புவனேஸ்வரர், பூமீஸ்வரர்


🛕அம்மன்/தாயார் :
துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை


🛕தல விருட்சம் :
அரசு,புன்னை
பாகவரிநதி (குண்டாறு), சுவ்வைக்கடல் (சந்நிதிக்கு
தீர்த்தம் எதிரில் உள்ளது.)


🛕புராண பெயர் : திருச்சுழியல் ,
திருச்சுழி


🛕மாவட்டம் : விருதுநகர்


🛕மாநிலம் :
தமிழ்நாடு


🛕பாடியவர்கள்:
சுந்தரர்



🛕 தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 12வது தலம்.



🛕திருவிழா:
நவராத்திரி, ஆவணி மூலம், சித்தினர விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித்தபசு, தைப்பூசம், பங்குனி பிரமோற்ஸவ திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது 


🛕தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 


🛕ரமண மகரிஷி பிறந்த தலம்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தேவாரத்தலம் ஆகும்.



🛕திருச்சுழியல் பெரிய ஊர். தேரோடும் நான்கு வீதிகள் சூழத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 



🛕பிள்ளையாரை வழிபட்டு ஆலயத் திருவாயிலுள் நுழைந்தால் எதிரே அம்பாள் சன்னதி.



🛕வலதுபுறம் சுவாமி சன்னதிக்கு எதிரே கவ்வைக்கடல் தீர்த்தம் உள்ளது. அருகே ஆஸ்தான மண்டபம் உள்ளது. 


🛕முதலாவதாகக் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. 


🛕திருவாயிலின் இருமருங்கிலும் விநாயகர், முருகன் உள்ளனர்.



🛕சுவாமி சன்னதியிலுள்ள ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. வாயிலில் உள்ள அதிகாரநந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் அறுகாற்பீடம் காணப்படுகிறது. 


🛕இங்கு இத்தலத்திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது.
அடுத்து சபாமண்டபம், அந்தாரளமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன. 



🛕மூலலிங்கப் பெருமானாகிய திருமேனிநாதர் சுயம்புலிங்கமாகக் கருவறையில் காட்சி தருகிறார்.


🛕வழிபட்டு வெளியில் சபாமண்டபத்தில் சிலை வடிவில் விளங்கும் நடராஜரைத் தரிசித்து வெளியே வந்து முதல் திருச்சுற்றை அடையலாம்.


🛕கிழக்கே சூரியன் தெற்கே அறுபத்து மூவர், சப்தமாதர்கள் உள்ளனர். தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.



🛕வடக்கே சண்டேசர் கோயில் உள்ளது. வடகிழக்கே நடராசப் பெருமானும் கிழக்கே காலபைரவர், சந்திரன் ஆகியோரும் விளங்குகின்றனர்.


🛕கருவறையைச் சார்ந்த சோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே துர்க்கை ஆகியோர் உள்ளனர். அடுத்து கோயிலின் தென்பால் இறைவனுக்கு வலது பாகத்தில் விளங்கும் அம்பாள் கோயிலை அடைவோம்.


🛕நந்தி பலிபீடங்களை வழிபட்டு உள்ளே சென்றால் திருப்பள்ளியறை மண்டபம் காணப்படும். அடுத்து அர்த்த மண்டபமும் கருவரையும் உள்ளன. 



🛕இது ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஒன்று.


🛕பிரார்த்தனை
திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை
வணங்கி பலனடைகின்றனர்.


🛕நேர்த்திக்கடன்:
தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும்
அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்


🛕தலபெருமை:
சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.


🛕சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்தபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் கொண்டு காளைப் பருவத்தினராய்க் காட்சிதந்தார் என்பது வரலாறு.


🛕திருமணக் கோலத்தில் இறைவன் விளங்குவதால் மக்கள் பலரும் கோயிலில் திருமணம் செய்து கொள்வதைச் சிறப்பாகக் கொண்டு திருமணம் புரிந்து கொள்கின்றனர்.


🛕சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும்.


🛕திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும்.


🛕இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும்.


🛕இத்தலத்தின் வேறு பெயர்கள்: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி


🛕அம்பாள் துணைமாலை நாயகி மதுரை மீனாட்சி அம்மனை போலவே காட்சி தருகிறார். எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இத்தலத்தில் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம் இங்குத்தீர்வதன்றி வேறெங்கும் தீராது.


🛕தல வரலாறு:
சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் சுழியல் என வழங்கப்படுகிறது என்பது ஸ்தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும்.


🛕சிறப்பம்சம்:
 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.



🛕திருக்கோவில்  முகவரி:

அருள்மிகு ஶ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அபிராமி அந்தாதி என்பது திருக்கடையூர் அமிர்தகதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள அபிராமி பற்றியது.

அபிராமி அந்தாதி என்பது திருக்கடையூர் அமிர்தகதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள அபிராமி அம்மனைக் குறித்து வாசிக்கப்பட்ட தமிழ் கவிதைகளின் தொகுப்பாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோவில். இருபுறமும் இரண்டு கோபுரங்களுடன் கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, சிவன் எட்டு பயங்கரமான பேய்களை அழித்ததாகக் கூறப்படுகிறது, ஒவ்வொரு வெற்றியையும் வெளிப்படுத்த ஒரு கோயில் கட்டப்பட்டது. மரணத்தின் பிடியில் இருந்து மார்கண்டயாவைக் காப்பாற்ற சிவன் சென்ற நேரத்தை இந்தக் கோயில் சித்தரிக்கிறது. கோவிலில் வழிபடுவது தம்பதிகள் (வயது 60 அல்லது 81) நீண்ட ஆயுளுடன் ஆசீர்வதிப்பதாக கூறப்படுகிறது.
அபிராமி தேவி பார்வதியின் ஒரு வடிவம். அபிராமி என்றால் "ஒவ்வொரு தருணத்திலும் கவர்ச்சியாக இருப்பவள்". இந்த தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப் படுகிறது, மேலும் அவரது தீவிர பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது. தேவர்கள் விநாயகருக்குப் புனிதமான அமிர்தப் பானையை வழங்க மறந்துவிட்டு, அதைத் தங்களுக்குள் அருந்தியதாக புராணங்கள் கூறுகின்றன. 

தேவர்களின் நடத்தையால் கோபமடைந்த விநாயகர், பானையை எடுத்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைத்தார். பின்னர் மாரிதா சிவலிங்கமாக உருவெடுத்தது, அதை அகற்ற முடியவில்லை. இக்கோயிலில் சிவபெருமான் வீற்றிருப்பதால், அவரது துணைவி பார்வதி அபிராமியாக உருவெடுத்து கோயிலில் இருந்து வருகிறார்.

கவிதையின் பின்னணியில் உள்ள கதை அற்புதமானது மற்றும் கவர்ச்சிகரமானது, கடவுள் மீது உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அபிராமி பட்டர், அல்லது சுப்பிரமணிய ஐயர், தமிழ்நாடு மாநிலத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே அபிராமி தேவி அவரைக் கவர்ந்தார், விரைவில் திருக்கடையூர் அமிர்தகதேஸ்வரர் கோயிலில் அர்ச்சகரானார்.

ஒரு நாள், ராஜா கோயிலுக்குச் செல்லச் சென்றார், சுப்பிரமணிய ஐயரைக் கவனித்து, அவரைப் பற்றி மற்ற நபர்களிடம் விசாரித்தார். ஒரு பைத்தியக்காரன் என்றார்; இருப்பினும், அவர் அபிராமி தேவியின் தீவிர பக்தர் என்று மற்றொரு நபர் விளக்கினார். உண்மையைத் தானே தெரிந்து கொள்ள, மன்னர் சுப்பிரமணிய ஐயரிடம் சென்று, இது பௌர்ணமி நாளா அல்லது அமாவாசையா என்று கேட்டார். 

தேவியின் ஒளிரும் வடிவத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாத பூசாரி, இது முழு நிலவு நாள் என்று தவறாக பதிலளித்தார். கோபமடைந்த மன்னர், மாலை 6 மணிக்குள் முழு நிலவு தோன்றவில்லை என்றால், பாதிரியார் தூக்கிலிடப்படுவார் என்று அறிவித்தார். சுப்ரமணிய ஐயர் தனது தவறை உணர்ந்தவுடன் திகிலடைந்தார், 

அவருக்கு உதவ ஒரே ஒரு வழி இருப்பதாக முடிவு செய்தார். அவர் ஒரு பெரிய நெருப்பை உருவாக்கினார், அது ஒரு மேடையை தாங்கி, நூறு கயிறுகளால் ஒன்றாகப் பிடித்து, அபிராமி தேவியிடம் பிரார்த்தனை செய்தார், ஒவ்வொரு வசனத்திலும் ஒரு கயிற்றை அறுத்தார். 79வது பாசுரத்தில், அமாவாசை போல் பிரகாசிக்கும் வானத்தில் காதணியை எறிந்து விட்டு, அவர் முன் தேவி தோன்றினாள். அம்மனைப் போற்றி சுப்பிரமணிய ஐயர் மேலும் 21 செய்யுள்களைப் பாடினார். 

மன்னன் தன் தவறை உணர்ந்து, மரண தண்டனையை நிராகரித்து, பூசாரிக்கு "அபிராமி பட்டர்" என்ற பட்டத்தை வழங்கினார். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இதைப் படித்தால் முடியாத வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...