*திருவாதிரைத் திருவிழாக் கோயில்கள்*
அறுபத்தாறு முனிவர்களுக்கு இருபத்தெட்டு ஆகமங்களையும் அவற்றின் பொருளையும் ஆகமேசுவரன் உரைத்த மங்களமான திருக்கோயிலில் *மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடப்பது மார்கழித் திருவாதிரை யன்று மட்டுமே*.
எதிரே பெரிய நந்தி கொடிக் கம்பம் பலிபீடம் ஆகியவற்றுடன் *தனிக் கோயில் போல் சிறப்புறும் பெரிய நடராசர் சந்நிதியில்* வருடம் முழுவதும் சந்தனக் காப்புடன் இருக்கும் மரகத நடராஜருக்கு மார்கழித் திருவாதிரையில் இரவும் பகலும் நாள் முழுவதும் அபிஷேகம் நடை பெற்று மீண்டும் சந்தனக் காப்பு சார்த்தப்படும்.
🌙 *திருவுத்தர கோச மங்கைக் கோணார் பிறைச் சென்னிக் கூத்தன் குணம் பரவி* (திருவாசகம்)
என்று மாணிக்க வாசகர் எட்டு குண மரகத நடராசரைப் போற்றுகிறார்.
நடராஜர் பிரகாரத்தில் *மாணிக்க வாசகருக்குத் தனிச் சந்நிதி* உள்ளது.
நடராசர் சந்நிதி மண்டபத்திலிருந்து துளை வழியே ஒரு புறம் மாணிக்க வாசகரையும் மறு புறம் நேர் எதிரே அவருக்கு *ஜோதியாகக் காட்சி அளித்த மங்களேஸ்வரரையும்* காணலாம்.
இந்த ஈஸ்வரன் சந்நிதி மாடச் சந்நிதியாக உயரமாக நடராசர் பிரகாரத்தில் உள்ளது.
☸️ *உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும்*
⚜️ *தங்கு உலவுச் சோதித் தனி உருவம் வந்து அருளி* (திருவாசகம்)
என மாணிக்க வாசகருக்கு மங்கள நாதர் *ஆட்கொண்டு அருளிய தனித்த தட்சிணா மூர்த்தியாகவும்* *ஜோதி வடிவமாகவும் காட்சி அருளினார்* என்ற வரலாறு தெரியாத ஆலய நிர்வாகம் *தனி உருவமான சிவ லிங்கத்திற்கும் தட்சிணா மூர்த்திக்கும் மாறாக* உமையோடு இருக்கும் உமா மகேஸ்வரரைத் தவறாக வைத்துள்ளது.
நடராசர் பிரகாரத்தில் பதினோரு ருத்திரர்கள் பூஜித்த பதினோரு லிங்கங்கள் உள்ளன.
மரகத நடராஜர் சந்நிதியில் ஸ்படிக லிங்கமும் மரகத லிங்கமும் உள்ளன.
*மாணிக்க வாசகர் சந்நிதி* வெளிப் பிரகாரத்தில் *ஆயிர லிங்கச் சந்நிதி அருகேயும்* குளக் கரையை ஒட்டி அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment