*அருள்மிகு ஶ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம்.*
🙏🏻தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻
தென்னிந்திய கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1300 ஆண்டுகள் முதல் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
🛕மூலவர் : திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர்,
தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர். புவனேஸ்வரர், பூமீஸ்வரர்
🛕அம்மன்/தாயார் :
துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை
🛕தல விருட்சம் :
அரசு,புன்னை
பாகவரிநதி (குண்டாறு), சுவ்வைக்கடல் (சந்நிதிக்கு
தீர்த்தம் எதிரில் உள்ளது.)
🛕புராண பெயர் : திருச்சுழியல் ,
திருச்சுழி
🛕மாவட்டம் : விருதுநகர்
🛕மாநிலம் :
தமிழ்நாடு
🛕பாடியவர்கள்:
சுந்தரர்
🛕 தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 12வது தலம்.
🛕திருவிழா:
நவராத்திரி, ஆவணி மூலம், சித்தினர விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித்தபசு, தைப்பூசம், பங்குனி பிரமோற்ஸவ திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது
🛕தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🛕ரமண மகரிஷி பிறந்த தலம்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தேவாரத்தலம் ஆகும்.
🛕திருச்சுழியல் பெரிய ஊர். தேரோடும் நான்கு வீதிகள் சூழத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
🛕பிள்ளையாரை வழிபட்டு ஆலயத் திருவாயிலுள் நுழைந்தால் எதிரே அம்பாள் சன்னதி.
🛕வலதுபுறம் சுவாமி சன்னதிக்கு எதிரே கவ்வைக்கடல் தீர்த்தம் உள்ளது. அருகே ஆஸ்தான மண்டபம் உள்ளது.
🛕முதலாவதாகக் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன.
🛕திருவாயிலின் இருமருங்கிலும் விநாயகர், முருகன் உள்ளனர்.
🛕சுவாமி சன்னதியிலுள்ள ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. வாயிலில் உள்ள அதிகாரநந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் அறுகாற்பீடம் காணப்படுகிறது.
🛕இங்கு இத்தலத்திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது.
அடுத்து சபாமண்டபம், அந்தாரளமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன.
🛕மூலலிங்கப் பெருமானாகிய திருமேனிநாதர் சுயம்புலிங்கமாகக் கருவறையில் காட்சி தருகிறார்.
🛕வழிபட்டு வெளியில் சபாமண்டபத்தில் சிலை வடிவில் விளங்கும் நடராஜரைத் தரிசித்து வெளியே வந்து முதல் திருச்சுற்றை அடையலாம்.
🛕கிழக்கே சூரியன் தெற்கே அறுபத்து மூவர், சப்தமாதர்கள் உள்ளனர். தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
🛕வடக்கே சண்டேசர் கோயில் உள்ளது. வடகிழக்கே நடராசப் பெருமானும் கிழக்கே காலபைரவர், சந்திரன் ஆகியோரும் விளங்குகின்றனர்.
🛕கருவறையைச் சார்ந்த சோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே துர்க்கை ஆகியோர் உள்ளனர். அடுத்து கோயிலின் தென்பால் இறைவனுக்கு வலது பாகத்தில் விளங்கும் அம்பாள் கோயிலை அடைவோம்.
🛕நந்தி பலிபீடங்களை வழிபட்டு உள்ளே சென்றால் திருப்பள்ளியறை மண்டபம் காணப்படும். அடுத்து அர்த்த மண்டபமும் கருவரையும் உள்ளன.
🛕இது ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஒன்று.
🛕பிரார்த்தனை
திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை
வணங்கி பலனடைகின்றனர்.
🛕நேர்த்திக்கடன்:
தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும்
அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்
🛕தலபெருமை:
சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
🛕சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்தபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் கொண்டு காளைப் பருவத்தினராய்க் காட்சிதந்தார் என்பது வரலாறு.
🛕திருமணக் கோலத்தில் இறைவன் விளங்குவதால் மக்கள் பலரும் கோயிலில் திருமணம் செய்து கொள்வதைச் சிறப்பாகக் கொண்டு திருமணம் புரிந்து கொள்கின்றனர்.
🛕சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும்.
🛕திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும்.
🛕இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும்.
🛕இத்தலத்தின் வேறு பெயர்கள்: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி
🛕அம்பாள் துணைமாலை நாயகி மதுரை மீனாட்சி அம்மனை போலவே காட்சி தருகிறார். எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இத்தலத்தில் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம் இங்குத்தீர்வதன்றி வேறெங்கும் தீராது.
🛕தல வரலாறு:
சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் சுழியல் என வழங்கப்படுகிறது என்பது ஸ்தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும்.
🛕சிறப்பம்சம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🛕திருக்கோவில் முகவரி:
அருள்மிகு ஶ்ரீ திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment