Friday, June 25, 2021

இராச இராச சோழன்

ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது.  ஆடி திருவாதிரை. ஆனால் அவரை கொண்டாட யாருமில்லை.

ஆம், ராஜராஜனை விட பல மடங்கு வெற்றிகளை குவித்தவர் ராஜேந்திரன். ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் ஈழத்திலுமே இருந்தது, 

அதை கலிங்கம், சாளுக்கியம் வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தார் ராஜேந்திரர்.

நிச்சயம் சரித்திரத்தின் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவர். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தமிழினத்தில் பிறந்ததால் மறைக்கப்பட்டார்.

தமிழினம் அவரை கொண்டாடி தீர்த்தது, ராஜேந்திரன் எனும் அப்பெயர் இன்றும் தமிழ்நாட்டில் சூட்டப்படும் அளவுக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அவரை பெருமையாய் எண்ணிற்று.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே “மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..”

தனது “ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.. “

அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 
5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும்  ஆகும் தீவன செலவு  200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்...

ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 
5 லட்சம் குதிரைகளையும் , ராஜேந்திர சோழர் பராமரித்தது எதற்காக.. ?

போர் புரிவதற்காக மட்டும்தான்.. !

யானைப்படை  மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவரின் , காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்..?

தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து  ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவருடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...

1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்... தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்..?

பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்..?
நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..!

அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவர் நாட்டை எவ்வளவு செழிப்பாக  வைத்திருந்திருப்பார் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா..?.

தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழரே முதன் முதற் காரணம்...

எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும்  என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து “ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு” தனது தலைமை இடத்தை மாற்றினார் ராஜேந்திர சோழன்...

“உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை”!

ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு  இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள " படை நிலை காடுவெட்டி" என்ற  ஊரே சாட்சியம்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை , பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை... இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள்  அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...

ஒரு நாட்டைப் பிடிக்க 
6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள் , குதிரைகள் , காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றார் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ?

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில்  தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்..?

அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால்,  கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவரா அவர்..?

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவருடன் சென்று இருக்க வேண்டும்..?
மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவர் பெற்றிருக்கவில்லை என்றால்  60 ஆண்டுகளாக தொடர்  வெற்றி பெற்றிருக்க முடியுமா..?

தற்போதைய “இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை* போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரர் அவர்... 

அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை  துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவர் ராஜேந்திர சோழன்..

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்..

நமது அறிவுசார் காப்பியங்களான, “தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள்” உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவர் அவர்..

கங்கை கொண்ட சோழபுரம்.

அவர் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கிற்று, இந்த கண்டத்தின் அமைதியும் போரையும் அந்த ஊர்தான் முடிவு செய்தது.

இது பற்றிய கல்வெட்டும் படமும் சுதை சிற்பமும் ஏராளம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தன, பின் வெள்ளையன் காவிரி கரையினை பலபடுத்த கல் வேண்டி அவற்றை அடித்து உடைத்து காவிரி கரைகளில் படியாகவும் ஆற்றுக்கல்லாகவும் புதைத்தனர்.

ராஜேந்திரனின் மிகப்பெரும் வாழ்வின் ஆவணங்களை காவிரிக் கரை படிகளாக அலைக்கல்லாக மாறிவிட்டது வரலாற்று சோகம்.இடையில் வந்த தெலுங்கர் இங்கு வரலாறு தொடர்பை துண்டித்ததும், பின் வந்த வெள்ளையர் அதை இன்னும் அழித்ததும் தமிழ்நாட்டின் கரும்காலம்.

தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளையன். திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு, அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது.

ஆனாலும் தீக்குச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல எஞ்சியிருக்கும் கல்வெட்டுகளே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு சொல்கின்றன‌.அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவரின் வரலாற்றை மீட்டெடுத்தால் தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயப் பெருமையும் ஆளுமையும் வெளிவரும்.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சமும் குறையாத சமயப் பணி அவருடையது, இராஜ இராஜருக்காவது நாள் நட்சத்திரமுண்டு,
கொண்டாட படுவதுண்டு.
ஆனால் இராஜேந்திரருக்கு அதுவுமில்லை.

அவரை மீட்டெடுத்து முன்னிலைப்படுத்தல் வேண்டும். ஆடித் திருவாதிரைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்த மறந்த நாம், 
ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிப்பெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூறல் வேண்டும்.

இங்கு தேடி மீட்டெடுக்க வேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும்.நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும், நிச்சயம் செய்தாக வேண்டும்.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...