Sunday, June 27, 2021

Uppiliyappa perumal koil

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்
108 திவ்யதேசங்கள்.

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில்:-

திருவிண்ணகர் (எ) ஒப்பிலியப்பன் கோவில் 

மூலவர்: ஒப்பிலியப்பன்

தாயார்: பூமிதேவி

உற்சவர்: ஸ்ரீனிவாசன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: சுத்தானந்த விமானம்

தீர்த்தம்: அகோராத்ரா புட்கரணி, ஆர்த்தி புட்கரணி, சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம்

மங்களாசாசனம்: பேயாழ்வார் - 2 பாசுரம், நம்மாழ்வார் -11 பாசுரம், திருமங்கையாழ்வார் - 34 பாசுரம். 

நாமாவளி: ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பன் ஸ்வாமிநே நமஹ.

ஊர்: திருநாகேஸ்வரம், கும்பகோணம்.

தல வரலாறு :-

முற்காலத்தில் மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேய மகரிஷி, "பூமாதேவி" தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்றும், "திருமால்" தனக்கு மாப்பிள்ளையாக வேண்டுமென்றும் ஆசையுற்று இங்குள்ள துளசி வனத்தில் கடும் தவம் செய்தார்.

அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், பெரிய பிராட்டியை நோக்கி "தேவி! நீ சென்று மார்க்கண்டேயரின் மகளாக இரு. தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்" என்றார்.

அதற்கு மனமிறங்கிய பூமாதேவி ஒருநாள் துளசிச் செடியின் அருகே இரண்டு வயது பெண் குழந்தையாகத் தோன்றினார். அக்குழந்தை பூமி பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய மார்க்கண்டேய மகரிஷி "பூமாதேவி"எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.

"பூமாதேவி" திருமண வயதை அடைந்தாள். அவளுக்கு திருமணம் செய்து வைக்க தக்க மணமகனைத் தேடினார் மார்க்கண்டேயர்.  அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத் தீர்மானித்தார்.

"திருமால்" வயோதிக அந்தணர் வேடம் பூண்டு, கந்தலான ஆடையை உடுத்திக் கொண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அவரை வணங்கி வரவேற்ற முனிவர், "தாங்கள் விரும்புவது யாது?" எனக் கேட்டார்.

அதற்கு முதியவர், "நான் உயர்ந்த குடியில் பிறந்தவன். வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன். மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை.  தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட முனிவர் "இதற்கு நான் உடன்பட மாட்டேன்" என்று உறுதியுடன் கூறிவிட்டார்.

ஆனால், முதியவரோ "தங்கள் மகளை திருமணம் செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை விடுவேன்" என்றார்.

செய்வதறியாது திகைத்த முனிவர், தனது மகளிடம் சென்று நடந்ததை விளக்கினார். அதற்கு அவள், வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன். வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன் என்றாள்.

மார்கண்டேய மகரிஷி வேறு வழி தெரியாமல் திருப்பதி வெங்கடேச பெருமாளை நினைத்து வழங்கினார். அப்போது அந்தணர் வெங்கடேசப் பெருமாளாகக் காட்சி தந்தார். 

முனிவரே உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம் செய்து தர வேண்டும்.

உமது மகள் சிறு பெண்ணாதலால், அவளுக்கு உப்பு போட்டு உணவு வகை எதுவும் சமைக்கத் தெரியாது என்று கூறினீர்கள். ஆதலால், "இந்த தலத்தில் யாம் உப்பை மறுத்தோம். உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம் படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும் எனது அருளை பரிபூரணமாக பெறுவர். உமது மகளை எனக்குத் திருமணம் செய்து தருவீராக!" என்றார்.

இதைக்கேட்டு மகிழ்ந்த முனிவர், "பரந்தாமனே! எனது பதல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்புற்ற உனது உணவு பக்தர்களுக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்" என்ற வரங்களைக் கேட்டார். பெருமாளும் அவர் கேட்ட வரங்களை அருளி "பூமாதேவியை" மணந்தார்.  இன்றளவும் பூமாதேவியுடன் தம்பதியாக திருமண கோலத்திலேயே காட்சி தருகிறார்.

உப்பில்லாத உணவையே விரும்பி ஏற்றதால் "உப்பிலியப்பன்" என்ற திருநாமம் பெற்றார்.  அப்பெயர் மருவி "ஒப்பிலியப்பன்" என்று ஆனது. இன்றளவும் இவருக்கு உப்பில்லாத உணவு வகைகளே நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

 சிறப்புகள் :-

உப்பில்லாத உணவு படைக்கப்படும் ஒரே திவ்யதேசம்.   தாயார் பூமிதேவி மூலவருக்கு அருகிலேயே காட்சி தரும் திவ்யதேசம்.

செண்பக வனம், ஆகாசவனம், திருவிண்ணகர், மார்க்கண்டேய சேத்திரன், தென்திருப்பதி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் தலம்.  

ஆழ்வார்களில் ஒருவரன "நம்மாழ்வார்" பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என ஐந்து வடிவங்களில் காட்சி கண்ட தலம்.

மார்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தர்மதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்த தலம்.

மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
          பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
     மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
          தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

 வழித்தடம் :-

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.  திருநாகேஸ்வரம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு ஒப்பிலியப்பன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு பூமிதேவி தாயார் திருவடிகளே சரணம். 

 நாளைய பதிவில்  :-

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோவில் - நாச்சியார் கோவில் திருக்கோவிலைத் தரிசனம் பண்ணலாம்.

ஒம் நமோ நாராயணாய நமஹ

#இராமானுசநூற்றந்தாதி
#எம்பெருமானார்
#உடையவர்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் இராமானுசா என்னும் நாமம்

இராமானுச நூற்றந்தாதி

உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும்  உயர்குருவும் வெறிதருபூமகள்நாதனும்  மாறன்விளங்கியசீர் நெறிதருஞ் செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர் அறிதரநின்ற  இராமானுசன் எனக்காரமுதே

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி

Temples360.in

*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

🌷🌷

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...