Saturday, July 10, 2021

அருள்மிகு கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்
108 திவ்யதேசங்கள் - பதிவு 24 

தெற்கு நோக்கி அமைந்துள்ள இரண்டாவது திருத்தலம்!!! இங்கு தான் குழந்தை வடிவில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார்!!!  

அருள்மிகு கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்:-

திருச்சிறுபுலியூர்

மூலவர்: சலசயனப்பெருமாள், அருள் மாகடல்

தாயார்: திருமாமகள்நாச்சியார், தயாநாயகி

உற்சவர்: கிருபா சமுத்திரப் பெருமாள்

கோலம்: சயனத் திருக்கோலம்

திசை: தெற்கு

விமானம்: நந்தவர்தன விமானம்

துர்த்தம்: மானச புட்கரணி, அனந்தஸரஸ்

ஆகமம்/பூஜை: பாஞ்சராத்ரம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: சலசயனம்,  பாலவியாக்ரபுரம்

மாவட்டம்: திருவாரூர்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

 திருச்சிறுபுலியூர் :-

108 திவ்யதேசங்களில் தெற்கு நோக்கி அமைந்துள்ள திருத்தலங்கள் இரண்டே இரண்டுதான். முதல் தலமானது ஸ்ரீரங்கம். மற்றொன்று "திருச்சிறுபுலியூர்" ஆகும். 

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப்பெரிய வடிவில் சயனத்தில் இருப்பார். ஆனால், இங்கு பாலகனாக சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிப்பது  சிறப்பு.  

இங்கு நடராஜப்பெருமானை வணங்கும் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலத்தில் முனிவர்  "கன்வருக்கு" பெருமாள் அனுகிரகம் புரிந்துள்ளார்.  

இங்கு ஆதிசேஷனுக்கும் தனிக்கோவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் இங்கு மட்டும்தான் குழந்தை வடிவில் சயனநிலையில் உள்ளார்.

ஒருசமயம் வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் இவரை "சிறுபுலியூர்" சென்று பெருமாளை வணங்க ஆணையிட்டார். 

இவரும் அங்கு சென்று பெருமாளை வேண்ட பெருமாளும் இவருக்கு முக்தியை கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகிலே வைத்துக்கொண்டார். 

இந்த நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும்(ஆதிசேஷன்), வியாக்ரபாதர் இருவரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

 மங்களாசாசனம் :-

"கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா

பெருமால் வரையுருவர பிறவுருவர

நினதுருவா திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்

சலசயனத்து அருமா கடலமுதே உனது அடியே

சரணாமே!".

                 "திருமங்கையாழ்வார்.

ஶ்ரீ தயாநாயகித் தாயார் ஸமேத ஶ்ரீ க்ருபாஸமுத்ரப் பெருமாள் ~ திருச்சிறுபுலியூர்.

கருமா முகிலுருவா ! கனலுருவா ! புனலுருவா !
பெருமால் வரையுருவா ! பிறவுருவா ! நினதுருவா !
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து,
அருமாகடலமுதே ! உனது அடியே சரணாமே.
~ பெரிய திருமொழி. 7.9.9

 பிரார்த்தனை:-

இங்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.  மாங்கல்யதோஷம், காலசர்பதோஷம், செவ்வாய்தோஷம், திருமணத்தடை, பாலாரிஷ்டதோஷம், நவக்கிரக பரிகாரம் செய்ய இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

தீராதநோய், மனநலபாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வதால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

தரிசனம் பெற்றவர்கள் :-

இந்த பெருமாளின் திருமேனியானது புஜங்க சயனம். தெற்கே இவரது திருமுக மண்டலம் உள்ளது. இவரை புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் "திருச்சிறுபுலியூர்" என அழைக்கப்படுகிறது. 

இங்கு வியாசர், ஆதிசேஷன், வியாக்ரபாதர் ஆகியோர் வந்து தரிசனம் செய்துள்ளனர்.

 தலவரலாறு:-

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகைமை நீங்க ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்து பெருமாளை நோக்கி தவமிருந்தார். 

இவருடைய தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம் வளர்பிறையில் ஏகாதசியன்று ஆதிசேஷனுக்குக் காட்சி கொடுத்தார். 

இந்த பெருமாள் அத்துடன் ஆதிசேஷனை அனந்தசயனமாக மாற்றிக்கொண்டு, குழந்தை வடிவில் சயனக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

 வழித்தடம் :-

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.  கொல்லுமாங்குடியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.  கொல்லுமாங்குடி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு சலசயன பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு திருமாமகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

 நாளைய பதிவில் :-

அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில் - திருத்தலைசங்க நாண்மதியம் (தலைசங்காடு) திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நமஹ"

#இராமானுசநூற்றந்தாதி
#எம்பெருமானார்
#உடையவர்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் இராமானுசா என்னும் நாமம்

29. கூட்டும்விதியென்றுகூடுங்கொலோ? * தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னைத் * தன்பத்தியென்னும்
வீட்டின்கண்வைத்தஇராமானுசன்புகழ்மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள்தன்னை * என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி

*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...