Tuesday, July 5, 2022

ஆனித் திருமஞ்சனம் ஸ்பெஷல் திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டை விரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில், திருச்சிற்றம்பலத்தில், இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.அதாவது நாம் தான் அது,அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்தத் திருநடனம்.அதாவது மனிதனின்அகம் ஒரு கோயில்.திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.பொதுவாகவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்கு எதிர்புறம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர்.இதற்க்கு என்ன பொருள் என்றால் உன்னுள் இருக்கும் (பிண்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா, சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா, நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்.அதற்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை தரிசிக்க வேண்டும்.உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்.நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும், பேசும், செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேர்க்கிறோம்..... நமது அறியாமையால் ஏற்படும் தவறுகள் எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா? மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும், உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லிச் சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயறை குறிப்பிட்டான்..... திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...