`தமிழ் மாதமான ஆடியில் வரும் 18-ம் நாளைத்தான் `#ஆடிப்பெருக்கு’, `#ஆடி18’, `பதினெட்டாம் பெருக்கு’... எனப் பல பெயர்களில் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை, தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் வாசலில் பொட்டு இட்டு, வரவேற்று மகிழ்வார்கள் பெண்கள்’’ ..
``காவிரியை அம்மனாக, தாயாக நினைத்து ஆற்றில் தண்ணீர் வரும் நாளில் அங்கு சென்று வணங்கி ஆசி பெற்றால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் சுபிட்சமும் ஆற்று நீரைப்போல் பெருக்கெடுத்து ஓடும் என்ற நம்பிக்கையோடு அதற்கு மரியாதை செய்யும்விதமாகவே அந்த நாளில் காவிரிக் கரையில் கூடுகிறார்கள் மக்கள்.
காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். படிதுறைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கூடுவார்கள். சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், அந்த வருடத்தில் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் என அனைவரும் தங்கள் சொந்த பந்தங்களோடு காவிரிக் கரைக்கு வந்துவிடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வெள்ளமும், படித்துறையில் மக்கள் வெள்ளமுமாக காவிரிக் கரைகளில் மகிழ்ச்சி வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடும். அந்த நாளில் ஆற்றுப் படிகளில் தலைவாழை இலை போட்டு, அதில் காப்பரிசி, (அரிசி, எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம் எல்லாம் சேர்த்துக் கிளறுவது) காதோலைக் கருகமணி, கறுப்பு மணி, கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, கண்ணாடி, பூ, பழங்கள், தேங்காய், பால், மரப்பலகையில் செய்யப்பட்ட சப்பரம்... அதில் அம்மன் படம், பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச் சங்கிலி எல்லாவற்றையும் வைத்து பூஜை செய்து காவிரித் தண்ணீரைப் பார்த்து மனமுருகி சாமி கும்பிடுவார்கள். தாம்பூலத்தில் மஞ்சள் தண்ணீர் இட்டு, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து, காவிரி நீருக்கு வரவேற்புக் கொடுத்து வணங்குவார்கள்.
பெண்களின் வாழ்வையும் விவசாயத்தையும் செழிப்பாக மாற்றும் புனிதநாள் ஆடி பதினெட்டு வாழ்த்துகள்....
அதுதான் இன்று மழைபெய்கிறது முடிந்தால் நனையுங்கள்.....
நமசிவாய🙏💐
No comments:
Post a Comment