Friday, October 14, 2022

சிவம் இருக்க பயம் ஏன் !! என்றால் அது தானே பயம் பலருக்கு

சிவம் இருக்க பயம் ஏன் ?? என்று ஓர் வாகனத்தில் பார்த்தேன் !! எதையும் நம் கண்ணில் தேவையில்லாதே காட்டாதே இறை ஏன் இதை காட்டுகிறது என்ற எண்ணம் !! அதில் விளைந்த தாக்கமே பதிவாக ..
சிவம் இருக்க பயம் ஏன் !! என்றால் அது தானே பயம் பலருக்கு !!

கூப்பிட்டால் வரும் ?? போ என்றால் போகும் என்பதே கடவுள் இதை இந்த கிழமை இப்படி கும்பிடு என்று சொல்வோர் மத்தியில் ..
இருப்பே அவனால் தான் !! இருப்பதும் அவனே தான் !! என்ற மெய்யை உணர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம் !!

சோதிக்கும் ?? தண்டிக்கும் ?? அளிக்கும் ?? என்று ஆயிரம் பொய் சொல்லி பயமுறுத்தி வைத்திருப்பவர்கள் யாராவது அன்பும் !! கருணையும் !! அரவணைப்பும் !! கடந்து வேறேதும் செய்ய தெரியா கருணை கடல் என்ற மெய்யுணர்த்து விட்டால் ?? என்ன ஆகும் என்ற பயம் !!

அழிக்கும் கடவுள் என்று பொய்யை சொல்லி !! எதை அழிக்கும் என்ற மெய்யை உணர்ந்து விடுவார்களோ என்ற பயம் !!

அழித்தல் !! அருளால்  !! காத்தல்  !! மறைத்தல் !! படைத்தல் !! போன்ற அனைத்தையும் சிவமே எதையும் கொண்டு எப்போதும் நிகழ்த்தி கொண்டு இருக்கிறது என்ற மெய் புரிந்து விடுமோ என்ற பயம் !!

நான் இப்படித்தான் !! என்னால் இவ்வளவு தான் முடியும் !! என்றும் நாமும் நம்பி !! பிறரும் தீர்மானித்து நம்மை நாமே சுருக்கிக்கொள்ளும் போது !! நீ எப்படியும் தான் என்ற உருத்தி !! உணர்வித்து விட்டால் !! உன்னை உடைத்து நீயே வெளிப்பட வரம் அளித்து அருளும் சிவத்தை இவர்கள் உணர்ந்து வெளிப்படடு விட்டால் !! எனக்கான அடிமை நீ என்ற என் கணக்கு பொய்த்து விடுமோ என்ற பயம் !!

சிவமே இப்படித்தான் ?? அப்படித்தான் ?? இப்படி இருந்தாலே அருளும் !! அதை செய்தால் உன்னை சும்மா விடாது ?? போன்ற அழகிய பொய் வழியே ஆளுமை செய்து !! தனக்கு ஏற்ற அடிமை கூட்டத்தை ஆள் சேர்த்து பலம் காட்டுவோர்க்கு !! சிவம் எப்படியும் என்ற மெய் விலங்கிவிடுமோ என்ற பயம் !!

அறியா இன்பத்தை துன்பம் என்றும் !! அறியா வெற்றியை தோல்வி என்றும் !! நாமே மயங்கி நிற்பதை பயன்படுத்தி !! எதையாவது சொல்லி உன்னை ஏமாற்றி தன்னை வசதி ஆகும் கூட்டம் !! நீ சிவத்தால் மெய்யறிவு பெற்று விட்டால் என்ற பயம் !!

இப்படி 
சிவம் இருக்க !! 
சிவத்தின் இருப்பை உணர !! 
சிவத்தால் தான் இருப்பே என்று இருப்பதில் எல்லாம் சிவத்தை அனுபவிக்க !!
சிவமே உன்னோடு என்றும் எப்போதும் என்று கொண்டாட !!
மரணம் கூட நீ எய்த வில்லை !! அது நீயாக உன்னை காட்டுவதோடு !! நீ நீங்கி ஒடுக்கி கொள்வது என்ற பெருங்கருணை விளங்க !!

இதையெல்லாம் இல்லை என்று மறுத்து !! இல்லாத துன்பத்தில் துவண்டு கொண்டு இருப்போர் மத்தியில் நீ விழிப்படைந்து விட்டால் !! மற்றவர்களுக்கு பயம் தானே ..

ஏதோ காட்டி !! எதையோ தூண்டி !! என்னையும் கொண்டு !! வெளிப்படுத்துபவன் திருவருள் !! எனக்கும் சேர்த்து யாருக்கோ .....

திருச்சிற்றம்பலம் 

நடராஜா நடராஜா

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...