Thursday, October 13, 2022

எங்கேயடா இருக்கிறான் உன்னுடைய நாராயணன்? இதோ இந்தத் தூணில் இருக்கிறானா சொல்?"

பகவான் நரசிம்மரை பற்றி பலரும் அறியாத விடயங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ நரசிம்மரைப் பற்றி பக்தகோடிகள் நிச்சயம் அறிவர். அவரது பரம பக்தனான பிரகலாதனின் வாழ்க்கை புராண/இதிகாசக் கதைகளுள் மிகப் பிரபலமான ஒன்றாகும். எனினும், பிரகாலதனைக் காத்து, அவனது தகப்பனாக ஹிரண்யகசிபுவை அழிக்கும் அந்த அவதார நிகழ்வு சார்ந்த ஒரு சுவையான விஷயம் பலர் அறியாதது எனலாம்.

தன்னை எவ்வகையிலும் மதியாது, சதாசர்வகாலமும் ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தையே ஜபித்துக்கொண்டிருந்த தன் பிள்ளையைப் பார்த்து, தாளாத சினத்தின் வெம்மை வெளிப்படும்வகையில், ஹிரண்யகசிபு உறுமினான்..

"எங்கேயடா இருக்கிறான் உன்னுடைய நாராயணன்? இதோ இந்தத் தூணில் இருக்கிறானா சொல்?"

"ஆம் தந்தையே, பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் தூணிலும் உள்ளான்.. துரும்பிலும் உள்ளான்.." என்று அப்சொல்யூட் கான்ஃபிடன்ஸுடன் பிரகலாதன் பதிலளிக்க, ஹிரண்யகசிபுவின் சினம் இன்னமும் அதிகரித்தது. தனது அரண்மனையில் இருந்த எண்ணற்ற வலுவான தூண்களில் ஒன்றைப் பிளந்தே பார்த்துவிடுவது என்ற முடிவுடன் தனது மிரளவைக்கும் கதாயுதத்தை உயர்த்தினான்.

படைப்பிலுள்ள அனைத்தையும் காக்கும் பரந்தாமனான ஸ்ரீமன் நாராயணன், பிரம்மா ஹிரண்யகசிபுவிற்கு சிந்திக்காமல் அளித்த வினோத வரத்தின் தன்மைக்கேற்றவாறு, நரசிம்ம அவதாரமாகத் தோன்றவிருக்கும் கணம் நெருங்கிவிட்டது. இப்போது கதையில் ஒரு சின்ன ட்விஸ்ட்.

எம்பெருமானாகிய பரந்தாமன் ஒரு கணம் யோசித்தான்.

'ஹ்ம்ம்ம்.. பாலகனாகிய பிரகலாதன் கான்ஃபிடன்ட்டாக நான் தூணுக்குள் இருப்பேன் என்று சொல்லிவிட்டான். எந்தத் தூணை அப்பன் அடித்துப் பிளப்பான் என்றெல்லாம் அந்தக் குழந்தை யோசித்திருக்க வாய்ப்பில்லை.. இந்தப் ஹிரண்யனோ பயங்கரமான கோபத்தில் இருக்கிறான்.. நேர் எதிரே இருக்கும் தூணை விட்டுவிட்டு, வேறு ஏதாவது தூணைப் பிளந்தால் என்ன பண்ணுவது? பக்த சிரோன்மணியான பிரகலாதனின் வாக்கைக் காப்பாற்றியாக வேண்டுமே.. சம்ஹாரம் வேறு நிகழ்ந்ததாக வேண்டுமே.!'

இந்த சிந்தனையுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அரண்மனையைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தார் பெருமாள். நூற்றுக்கணக்கான தூண்கள் அங்கிருப்பதைக் கண்டார். அப்பன், பிள்ளை இருவரின் லைஃப் ச்சேஞ்சிங் மொமெண்ட்டுக்கான டெசிஷனை, ஐ.ட்டீ.இண்டஸ்ட்ரி மேனேஜர்களைப் போல இழுத்தடிக்காமல், சட்டென்று எடுத்தார்.

காண்போர் அஞ்சும் நரசிம்மர் ரூபத்தில், அங்கிருந்த அத்தனை தூண்களின் உள்ளும் தயாராகக் காத்திருந்தார். ஹிரண்யன் எந்தத் தூணைப் பிளந்தாலும், அந்தக் கணத்திலேயே டிலே எதுவுமின்றித் தோன்றிவிடலாம் அல்லவா!

ஹிரண்யகசிபு ஏதோ ஒரு ரேண்டம் தூணைத் தனது கதாயுதத்தால் அடித்துப் பிளந்தான். அண்டம் நடுங்கும் ஹூங்காரம் செய்தபடி அந்தத் தூணிலிருந்து ஸ்ரீ நரசிம்ம சுவாமி வெளிப்பட்டார். அதன்பின் நடைபெற்ற வதம் இத்யாதி பற்றி பக்த பிரகலாதனின் கதை கேட்டோர் அனைவரும் அறிவர்.

ஆனால் ஸ்ரீமன் நாராயணன், நரசிம்ம ரூபத்தில் உள்ளே காத்திருந்து வெளிப்பட்டதால், அவருக்கும் தூணுக்கும் ஒரு பந்தம் ஏற்பட்டது. அதுதான் இந்தப் புராணக் கதையின் ஆண்ட்டி கிளைமாக்ஸ் போன்ற அட்டகாச ட்விஸ்ட்.

ஹிரண்யகசிபுவின் அரண்மனையில் இருந்த அத்தனை தூண்களும், ஒரு சில கணங்களுக்காவது ஸ்ரீ நரசிம்ம சுவாமியைத் தங்களுக்குள் தாங்கியிருந்த காரணத்தால், ஒரு குழந்தையைத் தனது கர்ப்பத்தில் தாங்கிய நிலையை எய்தின. தூண் பிளந்து நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த கணமானது, அத்தூண்களுக்குப் பிரசவம் நிகழ்ந்த கணம் போன்றதே. இதனால், கோசலை, தேவகி போன்று சாக்ஷாத் பரந்தமானையே பெற்று வளர்த்த உன்னதமான தாயார்களைப் போன்று, அத்தூண்களும் ஸ்ரீமன் நாராயணனின் தாயார் என்ற ஸ்தானத்தை அடைந்தன.

இந்த சுவையான தகவலைப் பகிர்ந்தவர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள். வந்தனத்திற்குரிய வைணவப் பெரியவர். மட்டபல்லி நரசிம்மரின் பரம பக்தர். ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் நேரடி தரிசனம் பெற்றவர் என்பார்கள் இவ்வடியாரை. இவரது "குறையொன்றுமில்லை" நூற்தொகுப்பில் இம்மாதிரியான சுவையான தகவல்கள் பல உள்ளன. நரசிம்ம அவதாரத்தைப் பற்றியே அதர்வண வேதத்திலிருந்து ஒரு அருமையான விஞ்ஞான விளக்கமும் இதில் உள்ளது. ஹைலி ரெக்கமெண்டட்.

எனவே "நரசிம்மரின் அம்மா யார் தெரியுமோ?" என்று உங்களிடம் யாரேனும் ட்ரிக் குவெஸ்ட்டின் கேட்டால், ஞே என்று இனிமேல் விழிக்கத் தேவையில்லை. பிரகலாதன் போல கான்ஃபிடென்ட்டாக "தூண்தான் நரசிம்மரோட தாயார், இது தெரியாத உமக்கு!" என்று ஒரு அன்பிளேயபிள் யார்க்கரை பதிலுக்கு எடுத்து விடுங்கள்!

பி.கு.: "குறையொன்றுமில்லை" நூற்தொகுப்பைப் பற்றிய அடியேனது வலைப்பதிவை ஆர்வலர்கள் இந்த இணைப்பை ஒத்தி/அழுத்தி ரசிக்கலாம்.

No comments:

Post a Comment

Followers

சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்....

கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவின் மிக உயர்ந்த சிகரம் (1615 மீ) மேல்முடி. ஒரு நாள் மலையேற்றத்திற்கு ஒரு நல்ல இடம்.  புரட்டாசி மாதத்...