Tuesday, October 4, 2022

நடராசரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்

சிவாயநம. திருச்சிற்றம்பலம். சிதம்பரத்தில் உள்ள நடராசபெருமான் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது, 
ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராசர் கோவிலும் நம்ப முடியாத அதிசயத்தை
தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

நடராசரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும், 

பல இடங்களில் இந்த நடராசர் சிலை ஐம்பொன்னாலும் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும். உத்தரகோசமங்கையில் பச்சை மரகதக் கல்லால் உளிகொண்டு செதுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் திருச்சி மாவட்டத்தில்  ஊட்டத்தூரில் உள்ள நடராசர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல.இந்த சிலை உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல சித்தர்களின் நவலிங்க பூசனையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும். 

இந்த சிலை உருவான பாறை பஞ்சநதனபாறை என்று கூறுகிறார்கள். 
இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநதனபாறையாக இருக்கும். பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராசர் சிலை கொண்டிருக்கும் கோவில் இதுவாகும்.இந்த நடராசர் சிலை ஆசிய கண்டத்திலேயே இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும்தான் உள்ளது என்பது மேலும் சிறப்புடையதாகும்.

இந்த கோவிலில் ஒரு முறை பிரதோசதின வழிபாடு செய்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார்.
வளர்பிறையில் இங்கு உள்ள தெட்சிணாமூர்த்தி பெருமானை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஓதுதல் செய்யும்போது பல வகையான சங்கடங்கள் நிவர்த்தி ஆகின்றன. 
இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய  தீர்த்தம் உள்ளது. 

இந்த அபூர்வ நடராசருக்கு சாத்துபடி செய்யப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து ஒரு மண்டலம் பருகிவர சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது.  

இங்குள்ள கொடி மரம் அருகில் 
மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 15 திதிகள் 12 ராசிகள் 9 கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது நம் பிறப்பின் விதியே மீண்டும் ஒரு முறை மாற்றி எழுதப்படுகிறது என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை. 

இந்த கோவில் திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை வழியில் உள்ள பாடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ளது.
அனைவரும் சென்று நடராசபெருமானை தரிசித்து அருள் பெருங்கள். சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...