Tuesday, October 18, 2022

கோயில் பெயர் மாற்றம்:பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது

பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கோயில் பெயர் மாற்றம்:

பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில் இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது.

ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரம்மிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்து

இலங்கை கட்டுமானம் ? !

மாமன்னர் ராஜராஜ சோழன் இலங்கைக்கு சென்று வந்த பிறகு இந்த கோயிலை வடிவமைத்தார். இலங்கையில் இந்து மன்னர்கள் வேதத்தை தழுவிய இந்து கோயில்களால் கவரப்பட்டதானாலேயே அந்த வடிவமைப்பில் இந்த பெரிய கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ( செவி வழிச் செய்தி )  ? ! ..

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. 

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.

திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜனுக்குப் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு.( செவி வழிச் செய்தி )  

இந்த கோவில் ராஜராஜசோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோவில் என்பதால். இத்தலத்தில் என்ன பிராத்தனை செய்தலும் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

இத்தலத்தில் உள்ள வராகி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பிராத்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் உடனே திருமணம் நடக்குமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிராத்தனை செய்தால், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.

மூலவரான பெருவுடையாரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும், மன அமைதி கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு,ஆகியவற்றிற்காகவும் பிராத்தனை செய்தால், சுவாமி பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்.

தஞ்சை பெரிய கோவில் விசேஷங்கள்:

பிரம்மோற்ஸவம்

ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா

அன்னாபிஷேகம்

திருவாதிரை

ஆடிப்பூரம்

கார்த்திகை

பிரதோஷம்

சிவராத்திரி

தேரோட்டம்

இந்த கோவிலில் பொரித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம், இந்த கோவிலானது குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் எனும் கட்டிடக்கலை நிபுணர்கள் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நேர்த்தியான இவரது படைப்புகளில் மூலமே அவரது பெயரில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது, மேலும் இவரது வாஸ்து சாஸ்திரம் எனும் கலை இன்றும் போற்றப்படுகிறது

இந்தப் பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதையில அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், ராஜாக்கள், ராணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகள்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரியகோவிலில் அதிசயங்கள் 

1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்!

2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்!

3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்!

4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!

5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்

பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரிய கற்பனை செய்கிறோம்; நடக்கிறதா? இல்லையே! எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் பெரியோர். அதனால்தான் ராஜ ராஜனை இன்றும் உலகம் போற்றுகிறது.

இந்தக் கோவிலை ராஜ ராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தான. அதாவது வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும்,, புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அது போல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது இக்கோவில்.

இதற்கெல்லாம் அவனுக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார் தெரியுமா?

அவனது சகோதரி குந்தவை மற்றும் ராஜ ராஜனின் படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்

அது சரி, நாம் எண்ணதான் நினைத்தாலும் கட்டிடத்துக்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே; அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் யார்? அவர்கள் பெயரையும் பொறித்து வைத்துள்ளான் ராஜ ராஜன். யார் அவர்கள்?

குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்.

இந்தக் கோவிலில் வேறு என அதிசயங்கள்?

முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை! (பிற்காலத்தில் நாயக்கர், மராத்தா ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு)

குறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் இருக்கின்றன!

ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவனது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும்!

 கோயில்  கல்வெட்டுகள் பிரசுரமாகியுள்ளன. அவைகளில் இருந்து சில ஆடல் அழகிகளின் பெயர்கள்: சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, மாதேவடிகள், இரவிகுல மாணிக்கம், மா தேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, கல்லறை, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி, ஊதாரி, அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி.

கர்ப்பக்கிரகத்துக்குள் போவதற்கு முன் 12 அடி உயர துவரபாலகர் சிலைகளைக் காணலாம். இதில் சிற்பி ஒரு அழகிய கற்பனையைப் புகுத்தியுள்ளார். ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்தப் பாம்பு, துவாரபாலகன் கையிலுள்ள கதையைச் சுற்றி ஒரு புழுப் போல காண்பிக்கப்பட்டுள்ளது.

 இப்பொழுது நாம் காற்பனை செய்ய வேண்டும். யானயின் அளவு நமக்குத் தெரியும். யானையும் பாம்பும் சிறிய அளவுக்கு இருக்குமானால் அந்த துவாரபாலகனின் கதை உருவம் எல்லாம் எவ்வளவு பெரியவை என்று நாம் கற்பனை செய்ய வேண்டும்! அந்தக் கதையைக் கையில் வைத்திருக்கும் துவார பாலகரின் உயரம் என்ன என்பதைக் கற்பனை செய்யவேண்டும். வாயிலைக் காக்கும் துவார பாலகரே இவ்வளவு பெரியவர் என்றால் அவரால் காக்கப்படும் பிருஹதீஸ்வரர் என்னும் பெருவுடையார் எவ்வளவு பெரியவர் என்று கற்பனை செய்யவேண்டும். துவார பாலகரோ பணிவின் சின்னமான விஸ்மய முத்திரையைக் காட்டிய வண்ணம் நிற்கின்றனர்.

மற்றொரு அதிசயம். 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்துக்கு எப்படி ஏற்றினர் என்பதாகும். தஞ்சைக்கு 9 மைல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சரிவாக சாரம் கட்டி கற்களை ஏற்றினர் என்பது ஒரு கருத்து. கோபுரத்தைச் சுற்றி மலைப்பாதை போல சுழல் வட்டப் பாதை அமைத்து அதில் கற்களை இழுத்துச் சென்றிருக்கலாம் என்பது இன்னும் ஒரு கருத்து.

 கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம். இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் அவர்கள் பின் தங்கவில்லை.

இறுதியாக இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.

ஆயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த சோழ சாம்ராஜ்யத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் இன்னும் இதன் பெருமைகள் தெரிந்திருக்கும். ஏனெனில் ராஜராஜன் அளித்த பெரும்பாலான நகைகள் இன்று அங்கே இல்லை!

கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியில் பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர  கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்

எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..
இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

கெட்டவர்களாக இருந்தாலும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கியதால் தஞ்சன் பெயரில் “தஞ்சாவூர்”, தாரகன் பெயரில் “தாராசுரம்”, தண்டகன் பெயரில் “தண்டகம்பட்டு” என மூன்று ஊர்களுக்கும் பெயர் உண்டாயிற்று.சோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவ பெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். 

அதன் படி இக்கோவில் கட்டுவதாற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வந்தார். அக்கற்களை எல்லாம் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் கழிந்திருக்கிறது. செதுக்கிய அக்கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆகா மொத்தம் 34 ஆண்டுகள் செலவழித்து இந்த அற்புதமான கோவிலை காட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். 

➡️   இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானின் லிங்கம் செய்வதற்கான கல் தற்போதைய “மத்திய பிரதேச” மாநிலத்திலிருந்து கொண்டு வந்து வடிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் மட்டும் பன்னிரண்டு அடி. மூலவர் லிங்கம் மிக பெரிதாக இருக்கும் இந்திய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் முதலாவதாகும்.  ⬅️

⬇️

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..  இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு   அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல   அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்.. ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்  5 அடிதான்.. மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..? இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு 

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இந்தக் கோயிலில் இருக்கும் சுரங்க பாதைகளுக்கான சரியான வழி ராஜ ராஜ சோழன் மட்டுமே அறிந்தருந்ததாகவும் அங்கு புதையல்கள், சுவடிகள், பத்திரக் கிடங்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு சுரங்கப்பாதையை கடந்து சென்றால் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வரும் வழி இதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை.
 

இந்தக் கோயிலில் அடித்தளம் அமைக்கும் போது கிணறு போன்று பெரிய பள்ளம் உருவாக்கப்பட்டது. அந்தப் பள்ளத்தில் மிகவும் சிறிய அளவிலான ஆற்று மணல் டன் கணக்கில் கொட்டப்பட்டு நிரப்பட்டன. அதன் மேல் தான் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த மணலானது நிலநடுக்கம் சமயத்தில் நில அதிர்வுகளுக்கு ஏற்றார் போல் மேலும் கீழும் நகர்ந்து போகும் தன்மை உடையவை. இது இந்த பெருவுடையார் கோவில் நிலநடுக்கத்தால் பாதிப்புறாமல் இருக்கும் வண்ணம் அமைக்கப்படுள்ளது. ஆனால் இந்த நடைமுறையை கடந்த நூற்றாண்டில்தான் இன்றைய விஞ்ஞானம் அமல்படுத்தத் தொடங்கியது.

அன்மையில் (  2010  ஆண்டு ) கருவறைக்கு அண்மையில் ஆழ்துளை கிணறு ஒன்று கிணறு தோண்ட முயற்சிக்கப்பட்டது.ஆனால் விபரீதமாய் மூன்று லொறி மணல் வெளியே வர சிலரின் எதிர்ப்பால் ஆழ்துளைகிணறு முயற்சி கைவிடப்பட்டது.இங்கே தோண்டும் பொது பாறைகளோ,குறுமணலோ வரவில்லை.அடி ஆழத்தின் பின்னர் தான் களி மணல் வெளியானது.அதுவரை கிடைத்த மண் இப்பகுதியை சேர்ந்ததல்ல.

கோயிலின் அசதி வாரம் ஆற்று பரு மணல் படுக்கைகள் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை விட அத்திவாரம் ரெண்டு மடங்கு நிறை உடையதாக இருக்க வேண்டும்.இங்கு கிடங்கு வெட்டி அங்கு இருந்தா பாறைகளை அகற்றி கற் தொட்டியினைமைத்து அதில் பரு மணலை நிரப்பி அழுத்தி செய்து இருகின்றார்கள்.பூமி தட்டு நகர்வின் போது மணல் தன்னை தானே தொட்டியில் சமப்படுத்தி கட்டிடத்தின் நிலையை பாதுகாக்கும்
 
 
தொழில்நுட்பமே இல்லாத சமயத்தில் இந்த கிராணிட் கற்கள் எவ்வாறு உடைக்கப்பட்டன என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த கிரணிட் கற்களில் வரிசையாக துளையிடப்பட்டு, அதில் கட்டைகள் சொறுகப்படுகின்றன. பின் இந்த துளையில் நீர் ஊற்றப்படுகின்றன. இந்த கட்டைகள் நீரில் நனைந்து விரிய இந்த கிராணிட் கற்கள் உடைகின்றன.15 மைல் தூரத்திலிருந்து கிரானிட் கற்கள் ஆற்றில் இருக்கும் பரிசல்கள் மூலம் கொண்டுவரப்பட்டன என கூறப்படுகிறது.

 
எல்லாத்துக்கும் மேலாக இந்தக் கட்டுமானப் பணிகள் நடக்கும் காலத்தில், தற்காலிக மருத்துவமனைகள், வீடுகள், வேலை செய்பவர்களுக்கு உணவு தயாரித்தல், வேலையாட்களுக்கு வீடுகள், பொழுது போக்கு அங்கங்கள், வீர விளையாட்டுகள் என ஒரு நகரமாகவே திகழ்ந்திருக்கின்றது இந்த இடம்.

108 சிற்பங்கள் நடன சிற்பங்கள்
 
பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான்  ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏன்? காரனம் தெரியவில்லை.

மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

தஞ்சைப் பெரியகோயில் கட்டிட கலைஞர்கள்
1. இராசராசசோழன்

2. வீரசோழன் குஞ்சரமல்லன் ( ராசராசப் பெருந்தச்சன் என்ற கட்டிட கலைஞன் )

3. மதுராந்தகன் நித்தவினோதப் பெருந்தச்சன் ( இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )

4. இராசராசசோழனின் தமக்கை குந்தவை பிராட்டியார்?

5. இலத்தி சடையனான் ( கண்டராதித்த பெருந்தச்சன் – இரண்டாம் நிலை கட்டிட கலைஞன் )

6. ஈசான சிவபண்டிதர் எனும் ராசகுரு

7. இராசராசசோழனின் மகன் இராசேந்திரசோழன்

8. இராசராசசோழனின் ராசகுரு சர்வசிவபண்டிதர்

9. சேனாதிபதி கிருட்டிணன் இராமன் ( மும்முடிச்சோழன் பிரமமாராயன் )

10.தென்னவன் மூவேந்த வேளன் எனும் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனார் ( கோயில் நிர்வாக அதிகாரி)

11. பவனபிடாரன் ( சைவ ஆச்சாரியார் தலைமைக் குரு )
 

அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்  இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.

அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,  ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை   நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு  லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..  இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை   அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி  மிக பலமான இணைப்பை பெறுகின்றன…இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசியம் 
எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.

உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். 216 அடி உயரமுள்ள விமானம் மகாமேரு மலையாக வடிக்கப் பட்டுள்ளது. அதன் கீழ் திசை சிகரத்தில் சிவபெருமான், உமாதேவி, குமாரர்கள், பிறதெய்வங் களின் சிற்பங்கள் உள்ளன.

தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய தலைமை தச்சன் ‘குஞ்சரமல்லன்‘. ராஜராஜன், இந்த சிற்பிக்கு “ராஜாராஜப் பெருந்தச்சன்“ என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளான். பெரிய கோவிலின் வரலாற்றில் தொடர்புடைய வேறு பலரும் உள்ளனர். ராஜராஜன் பெரிய கோவிலைக் கட்டி முடித்துவிட்டு அதன் திருச்சுற்று மாளிகையின் பெரும்பாகத்தை எழுப்பும் பொறுப்பை தனது தளபதியான கிருஷ்ணன் ராமன் என்பவரிடம் ஒப்படைத்தான்.

கேரளாந்தகன் கோபுரம்

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரமாகும். இதன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள 2 நிலைக் கால்கள் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. 4 அடி நீளம், 3 அடி அகலம், 40 அடி உயரத்தில் ஒரே கல்லிலான இந்த 2 நிலைக்கால்களும் தஞ்சையில் இருந்து குறைந்த பட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. ராஜராஜன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக இந்த வாயிலுக்கு ‘கேரளாந்தகன் வாயில்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் இரண்டாவது கோபுரம் ‘ராஜராஜன் கோபுர வாயில்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திலும் 40 அடி உயரமுள்ள 2 நிலை கால்கள் உள்ளன.
இராசராச சோழன் குறிப்புகள் (ஆய்வுக்குரியவை)

இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)

பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் .

கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டு  (  இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர் ) 

சிறப்புப் பெயர்கள் - 42

  1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்

11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்

21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்

உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)

மனைவியர் - 15 ? ( செவி வழிச் செய்தி )

மக்கள்

இராசராச சோழனுக்கு இராசேந்திரன், எறிவலி கங்கைகொண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்காமாதேவியார், இரண்டாம் குந்தவை என்னும் மூன்று பென்மக்களும் இருந்தனர். எறிவலி கங்கைகொண்ட சோழன் இராசேந்திர சோழனின் தம்பியாவான். 

இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
(இராசராசன் கி.பி.985 ஜுன் 25ம் நாள் அரசு கட்டில் ஏறினான்)

ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது

தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை

கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)

இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
(இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்)  செவி வழிச் செய்தி ? .

வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்

ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்

முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014

சோழர்களின்புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய
வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

குறிப்பு  ⬇️

இங்கு உள்ள புகழ்பெற்ற தகவல்கள் அனைத்தும் கல்வெட்டுகள் மற்றும் செவி வழிச் செய்திகள்  .
*எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்*

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...