🌻பத்தாம் நாள் #விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது.
சரஸ்வதியின் ஆசீர்வாதங்களைப் பெற பக்தர்கள் சரஸ்வதி பூஜை (வித்யாரம்பம்) செய்கிறார்கள்.வித்யாரம்பம் என்பது அறிவாற்றலை பெறுவதற்கு தொடங்கும் நாளாகும்.சிறு குழத்தைகள் கல்வி கற்க இந்நாளில் தான் ஆரம்பிப்பார்கள்.
🌻நாம் எப்போதும் ஒரு தொடக்க மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்,என்பதற்காக இந்நாளைக் கொண்டாடுகிறோம்.
🌻விஜய தசமி நன்னாளில் சிவன் கோவில்களில் பரிவேட்டை எனும் உற்சவம் நடைப்பெறும்.இந்த நாளில் வன்னி மரத்தில் இறைவன் அம்பு விடுவது வழக்கம்.இதன் மெய் பொருள் என்ன வென்றால்,வன்னி மரம் மனிதனாக கருதப்படுகின்றது.இறைவன் வன்னி மரத்தில் அம்பு போடுவது,நமக்கு ஞானத்தை உபதேசிப்பதாக அர்த்தம்.அம்புகள் தான் ஞானம்.
🌻விஜய தசமி அன்று பல கோவில்களில் நடைக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது.சண்டி என்பது முப்பெரும் தேவியரை குறிப்பிடுவதாகும்.
🌻விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி,வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.மகாத்மியத்தில் மகா நோன்பு என்றும் குறிப்பிடப்படும் நாள் இது தான்.
🌻அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும்,ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
🌻நவராத்திரி என்பது ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல;இது சதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது.
🌻ஒரு மனிதன் வாழ்வின் தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமான #துர்கையை வழிபட வேண்டும்.
🌻அதே போன்று வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் பெற #லட்சுமியை பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.
🌻மேலும் அறிவைப் பெறுவதற்காக #சரஸ்வதியை வணங்க வேண்டும்.இந்த மூன்றும் ஒரு முழுமையான உலக வாழ்க்கைக்கு அவசியமானவை.
No comments:
Post a Comment