Wednesday, October 19, 2022

சனி பிரதோஷம் ஸ்பெஷல் !🔥 🔥சகல நன்மைகள் தரும் சனி பிரதோஷம்

🔥சனி பிரதோஷம் ஸ்பெஷல் !🔥 
🔥சகல   தரும் சனி பிரதோஷம்சனி பிரதோஷம் ஸ்பெஷல் !🔥 

🔥சகல தரும் சனி பிரதோஷம்…! 🔥

🔥சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் நேரம் பிரதோஷ சமயமாகும். நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.🔥

🔥எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.🔥

🔥உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்🔥

🔥11-ஆம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12-ஆம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.🔥

🔥பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.🔥

🔥சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.🔥

🔥ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.🔥

🔥சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.🔥

 🔥பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும். வறுமை விலகும். நோய்கள் நீங்கும். சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிவன் அருள் கிடைக்கும்.பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.🔥

🔥பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.🔥

🔥பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்…🔥

🔥சிவனை வழிபட ஏற்ற 
காலம் மாலை நேரம், 
அதிலும் சிறந்தது சோமவாரம், (திங்கட்கிழமை) 
அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, 
அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். 
இதிலும் சிறந்தது பிரதோஷ காலத்தில் சோமசூக்தப் பிரதட்சண முறையில் வழிபடுவது. இப்படி பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.🔥

🔥நீறு இல்லா நெற்றி பாழ், 
நெய் இல்லா உண்டி பாழ், 
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ், 
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்,  
மடக்கொடி இல்லா[த] மனை பாழ்.
ருத்திராட்சம் அணியாத உடம்பு பாழ்,
சிவன் கோவில் இல்லாத ஊர் பாழ்,
சிவபூஜை செய்யாத ஜென்மமே 
பாழ் பாழ் பாழ்...🔥
 சனிப்பிரதோஷ தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று 
வழிபடுவோம்! சிவனருள் பெறுவோம்!

🔥ஓம் சிவாய நமஹ !🔥

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும்

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும் இல்லற வாழ்க்கை என்பது மங்கலகரமானது என்பது வள்ளுவரின் வாக்கு.  மங்கலகரமான இல...