Thursday, November 17, 2022

அருள்மிகுஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில்,சிறுவாச்சூர் கிராமம்,பெரம்பலூர் (மா)வட்டம்.

(சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்தலத்தில், 
நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் 4-அடி உயரம் கொண்டவளான
மதுரகாளியம்மனின் திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லாமல், சிம்மத்தின் மீது திருவடி வைத்து அருளும் நிலையில் திருக்காட்சியளிப்பது தலச்சிறப்பு.

(🙏🏻சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

ஒரு புராண நிகழ்வின்படி;
முற்காலத்தில்,
இவ்வூரின் வழிபாட்டு தெய்வமான செல்லியம்மனை தனது மந்திரத்தால் சிறை பிடித்த மந்திரவாதி ஒருவனை அழித்து பின், செல்லியம்மனின் வேண்டுதலுக்காக இங்கேயே தங்கிவிட்டவளாம் 
இந்த மதுரகாளியம்மன்.

மதுரகாளியம்மனை இந்த சிறுவாச்சூரில்
தங்கிடச்செய்துவிட்டு,
அருகிலிருக்கும் பெரியசாமி மலைக்குச்சென்றுவிட்ட
செல்லியம்மனுக்கே  முதல்மரியாதை.

ஆலயத்தின் பூஜையின் போது முதலில், செல்லியம்மன் வாசம்புரியும் அந்த பெரியசாமி மலைக்குன்றின் திசையை நோக்கி
தீபாராதனை காட்டும் வழக்கம்
இன்றளவும் உள்ளது.

ஶ்ரீ காளி,
மதுரையிலிருந்து
கண்ணகி ரூபத்தில் 
இத்தலம் வந்தவளாம்.
அதனாலேயே, இங்கு வீற்றிருக்கும் அம்மனுக்கு
ஶ்ரீ மதுரகாளியம்மன்
ஏனும் திருப்பெயர்.

குலோத்துங்க சோழரால் திருப்பணிகள் செய்யப்பட்ட
இந்த ஆலயத்தின் மதுரகாளியம்மனுக்கு,
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை
என, வாரத்தில் இரு நாட்களுக்கு மட்டுமே நடை திறக்கப்பட்டு
பூஜைகள் நடக்கின்றன.
மற்ற நாட்களில் அந்த பெரியசாமி மலையிலிருக்கும்
செல்லியம்மனுடன், மதுர காளியம்மன் தங்குவதாக ஐதீகம்.

எனவே, வாரத்தில்
திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி மற்றும் பிரசித்தி பெற்ற சித்திரைத்
தேர்த்திருவிழா போன்ற
 முக்கியமான பண்டிகை காலங்களைத் தவிர, 
மற்ற நாட்களில் ஆலயம் மூடப்பட்டே இருக்குமாம்.

(🤔இந்த ஆத்தா கோயிலில்,
எல்லா வேண்டுதலுக்கும்
மாவிளக்கு வழிபாடுதான்)

கண் திருஷ்டி அண்டாதிருக்கவும, தடைபெறும்  சுபநிகழ்வுகள் சிறப்புடன் நடைபெறவும்,
செய்யும் தொழில் விருத்தியடையவும்,
தீராப்பிணி தீர்ந்திடவும், (இங்கேய மாவு இடித்து)
மாவிளக்கு ஏற்றி வேண்டுதல் வைப்பது
இத்தலத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்).

🙏🏻ஓம் சக்தி பராசக்தி:

🇮🇳👍🏻 *ஜெய்ஹிந்த்*

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...