Friday, November 25, 2022

ஆதித்தன் எனும் சூரியன் வழிபட்டதால் ஆதித்தன்மங்கலம் எனப்பட்டது, இதுவே ஆதமங்கலம் என மருவியது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை  வட்டம், ஆதமங்கலம்  சிவன்கோயில்
Adhamangalam sivan temple 
ஆதித்தன் எனும் சூரியன் வழிபட்டதால் ஆதித்தன்மங்கலம் எனப்பட்டது, இதுவே  ஆதமங்கலம் என மருவியது. 

 சிவபெருமான்  அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1. வைகருத்தன் 2. விவசுவான் 3.  மார்த்தாண்டன் 4. பாஸ்கரன் 5. இரவி 6. லோகப்பிரகாசன் 7. சாக்கி  8.சுவிக்கிரமன் 9. ஆதித்தன் 10. சூரன் 11. அஞ்சுமாலி 12. திவாகரன்  என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர். ஒரு சமயம்  இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர்.  பிரமன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி  ஆணையிட்டார்.

இவ்வூர் கிவளூரின் தெற்கில் 13 கமி தொலைவில் உள்ள விடங்கலூரின் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. ஆதமங்கலம் சித்தாறு எனும் சிறிய ஆற்றின் கரையிலேயே உள்ளது. 

இங்கு சாலையோரத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் உள்ளது, கோயிலின் எதிரில் ஒரு அழகிய குளமும் அருகில் பள்ளி கட்டிடம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை முகப்பு மண்டபம் இவை அதிட்டானம் வரை கருங்கல் கொண்டும் அதற்க்கு மேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. 

இங்குள்ள இறைவன் பெயர்  ஆபத்சகாயேஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி. 

கிழக்கு நோக்கிய கருவறை இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். முகப்பில் இரு சன்னதிகளையும் இணைக்கும் மண்டபம் உள்ளது. 
 இதில் இறைவனை நோக்கி நந்தி  ஒன்றும் பலிபீடம் ஒன்றும் உள்ளது. இந்த முக மண்டபத்தினை தாண்டி வெளியில் ஆத்ம நந்தி எனும் நந்தி இறைவனை நோக்கியுள்ளது. 

 முகமண்டபத்தில் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். இதே மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சண்டேசர் மற்றும் ஒரு பெரிய பைரவர், பெரியதாக ஒரு சூரியன் சிலை உள்ளன. இந்த சூரியனே ஆதித்தனாக இருக்கலாம்..

 கருவறை சுற்றில் தென்முகன், மட்டுமே உள்ளார். சண்டேசர் சன்னதி உள்ளது.  பிரகார சிற்றாலயங்கள் என விநாயகர் மட்டும் உள்ளார் அவர் சத்தரத்து விநாயகர் என பெயர்கொண்டுள்ளார். 

எளிமையான கிராமக்கோயில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஆளக்கூடிய சூரியன், சிறப்பாக இல்லாவிட்டால் பூர்வீக சொத்து பிரச்னை, வில்லங்கங்கள் ஏற்படும், இப்படி  உள்ளவர்கள் சூரியன் வழிபட்ட இத்தலம் வந்து வழிபடலாம். 

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...