தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருக்குடந்தை கீழ்கோட்டம், ஸ்ரீபிருஹந்நாயகி என்கிற பெரியநாயகி உடனுறை ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில்.
தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் 90ஆவது திருத்தலமாகும். சோழர்களால் கட்டப்பட்ட சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில் ஈசன் சுயம்புலிங்கத் திருமேனியராக காட்சி அளிக்க, தனி சன்னதியில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.
கும்பகோணத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றான இத்தலத்தில் சிவனை, நாகங்களின் தலைவனான நாகராஜன் வழிபட்டு பலம் பெற்றதால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்னும் திருப்பெயராயிற்று.
நாகராஜனும் இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரியின் முதல் காலத்தில் இத்தலத்திலும், இரண்டாம் காலத்தில், திருநாகேஸ்வர தலத்திலும், 3ஆம் காலத்தில் திருப்பாம்புரம் தலத்திலும், 4ஆம் காலத்தில் நாகூர் தலத்திலும் வழிபட்டு பலன் அடைந்ததாக தலபுராணங்கள் கூறுகின்றன.
ராகு, கேது தோஷம் உடையவர்கள் சிவராத்திரி நாளில் முறையே இத்தலங்கள் சென்று வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருநாவுக்கரசர், இத்தல ஈசனை பாடும் போது குடந்தை கீழ்க்கோட்டம் என குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதர், தன் திருப்புகழில் இத்தல முருகனை போற்றி பாடியுள்ளார்
கும்பகோணம், 'பாஸ்கர ஷேத்திரம்' எனப் பெயர் பெற்றதற்கு இச்சிவத்தலமே சான்றாகும். மகாமக திருநாளன்று, குளத்திற்கு சுவாமி தீர்த்தவாரிக்கு செல்லும் நிகழ்வு வெகுவிசேஷம்.
No comments:
Post a Comment