மாயூரம்:(மயிலாடுதுரை)
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது
என்று அழைக்கப் படும் மயிலாடு துறை,
காசிக்கு வீசம் மகிமை
கூட உள்ள தலம்.
காசியில் ஒரு விஸ்வநாதர் , விசாலாட்சி. இங்கோ ஏழு விஸ்வநாதர் , விசாலாட்சி. அந்த சப்த காசி தலம், மயிலாடுதுறை என்னும் மாயவரம் என்னும் மாயூரம்.
ஏழு காசி
1)துலாகட்டத்த்திற்கு ( லாகடம்) தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர் , 2)காவிரிப் பாலத் திற்கு தெற்கே பாலக்கரை விஸ்வநாதர் ,
3)வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர்,
4)திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர், வடக்கு வீதிக்கும் , பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும் நடுவே உள் விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர் , கௌதமர் , அகத்தியர் , பரத்வாஜர் , இந்திரன் ஆகியோர் சிவலிங்கம் நிறுவி வழி பட்ட கோயில்கள்.
6)இது தவிர லாகடம் மார்க் கெட்டுக்குள் கொஞ்சம் பாழடைந்து திருப்பணி எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஸ்வநாதர் ,
7)கொரநாடு விஸ்வநாதர் ஆக மொத்தம் ஏழு காசி விஸ்வ நாதர்கள் உண்டு.
ஏழூர் பல்லக்கு
மயிலாடுதுறை பெரிய கோயிலுக்கு மேற்கே உள்ள 1)ஐயாறப்பர் கோயிலுக்கு 2)கொரநாடு புனுகீசர் , 3)சித்தர்காடு பிரம்ம புரீசர், 4)மூவலூர் வழித் துணை நாதர் , 5)சோழம் பேட்டை அழகியநாதர் , 6)துலாக்கட்டம் காசி விஸ்வநாதர்,
7)பெரிய கோயிலாம் மயூரநாத ஸ்வாமி கோயில் ஆக ஏழு கோயில்கள் சேர்த்து திருவையாறு போலவே
ஏழூர் சப்தஸ்தானம் என அழைக்கப் படுவது உண்டு ,
ஆண்டு தோறும் சப்த ஸ்தான விழாவும் உண்டு
ஏழு கன்னியர்
1)திரு இந்தளூர் , 2)திருத் தான்றீசம் , 3)கருங்குயில்நாதன் பேட்டை , 4)ஆனந்த தாண்டவ புரம் , 5)பசுபதீசம் , 6)கழுக் காணிமுட்டம் , 7)தருமபுரம் , வள்ளலார் கோயில் என மயிலாடு துறையிலும் சுற்றிலுமாக சப்த மாதாக்கள் வழி பட்ட கோயில்கள் உள்ளன.
பேர் சொன்னால் முத்தி
உங்கள் எல் லோருக்கும் தெரிந்தது
"ஆரூரில் பிறந்தால் முத்தி , காசியில் இறந்தால் முத்தி , தில்லையை சேர்ந்தால் முத்தி , அண்ணாமலையை நினைத்தாலே முத்தி"
என்று.
ஆனால் மயிலாடுதுறை தலம் பெயர் சொல்ல முத்தி தரும் தலம் என்பது தெரியுமா..?
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது அல்லவா.
எத்தனை கோயில்கள். எத்தனை மகிமை. அனைத்தும்
இந்த ஒரு பதிவில் அடங்காது.
மயிலாடு துறையில் வசிப்பவர் களுக்கே அதிகம் தெரியாத
சில கோயில் களின்
விவரங்கள் இதோ.
இங்கே ஒரு தில்லை
கண்வர் வழிபட்ட விஸ்வநாதர் காவிரி வட கரையில் இருக்கிறார்.
இங்கே சிதம்பர இரகசியம் பெரிய யந்திர வடிவமாக எழுதி வைக்கப் பட்டுள்ளது.
தில்லை நடராஜர் போலவே வருடத்தில் ஆறு நாட்கள் இந்த யந்திரத் திற்கும் அபிஷேகம் உண்டாம்.
இதே சன்னிதியில் ஸ்வர்ணா கர்ஷண பைரவர் ஸ்வர்ண பைரவியுடன் காட்சி தருகிறார்.
எதிரில் ஒரு கேதார்
இதற்கு எதிரே காவிரி வட கரையிலேயே கேதார கௌரி சமேத கேதாரீஸ்வரர் கோயில் இருக்கிறது.
பல ஆண்டுகள் புதரில் மறைந்திருந்தவர் 2017 புஷ்கரத்தின் போது வெளிப் பட்டு விட்டாராம்.
பால விநாயகர் , பால முருகன் , கேதார கௌரி சமேதராக குடும்பத்துடன் இனிய காட்சி தருகிறார்.
இதோ ஒரு காளஹத்தி
மயூரநாதரே பெரிய
வள்ளல் தான் தெரியுமா...?
அவரை சுற்றி நான்கு கோயில்களில் இன்னும் நான்கு வள்ளல்கள் இருக் கிறார்கள் என்பது தெரியுமா?
ஆனால் உத்தர மாயூர வாசியான வதாரண் யேஸ்வரர் கோயில் மட்டும் சின் முத்திரை காட்டும் மேதா தட்சிணா மூர்த்தி கோயில் கொண் டிருப்பதால் "கை காட்டும் வள்ளல்" கோயில் ஆகி "வள்ளலார் கோயில்"
என்ற பெயரிலேயே புகழ் பெற்று விட்டது.
இந்த தட்சிணா மூர்த்தி திருமணப் பேறு , மக்கட்பேறு , கல்வி , வேலை வாய்ப்பு அனைத்தும் அருள்பவராம்.
இது சப்த மாதருள் சாமுண்டிக்கு ஈசன் அருளிய தலம்.
நந்தியின் செருக்கடக்கி அவருக்கு அருளிய தலம்.
துலாக் கட்ட மகிமை
காவிரியின் நடுவில் நந்தி தனி மண்டபத்தில் நதி பிரவாகத்தை எதிர்த்து சந்நிதி கொண் டிருக்கிறார்.
வள்ளலார் கோயிலில் தென்முகக் கடவுளாம் மேதா தட்சிணா மூர்த்திக்கு எதிரிலும் நந்தி பகவான் இருக்கிறார்.
காவிரி தென் கரை தீர்த்தம் நந்தி தீர்த்தம் , வடகரை தீர்த்தம் ஞான புஷ்கரணி.
மாயூரம் துலாக் கட்டத்த்தில் நீராடுவது அனைத்து புண்ணிய தீர்த்தங் களிலும் நீராடுவதற்கு சமமாம்.
அங்கு செய்யும் தானம் பிரயாகை , குருக்ஷேத்திரம் போன்ற தலங்களில் செய்யும் தானத்திற்கு சமம்.
No comments:
Post a Comment