Wednesday, December 14, 2022

மார்கழி_ஸ்பெசல் 🌿🌹 🌹🌿"#திருப்பாவை_தேன்_துளிகள்🌿🌹

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
           🌹🌿#மார்கழி_ஸ்பெசல் 🌿🌹

  🌹🌿"#திருப்பாவை_தேன்_துளிகள்🌿🌹

🌹🌿ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற திருப்பாவை திருவெம்பாவை விரதத்தினை ஸ்ரீவில்லிபுத்தாரில் தன் தோழியடன் கடைபிடித்தாள். தான் மேழிகொண்ட அவ்விரத வழிமுறையினை நமக்கும் தொடப்படுத்தினாள். அதுவே திருப்பான பிரபந்தாயிற்று. திருப்பாவை 30 பாசுரங்ககளக் கொண்டது. அந்த 30 பாசுரங்களின் தேன் துளிகள் உங்களுக்காக... 

🌹 🌿 அருள் பெற்றிடுவோம்! அனுசரிப்போம் வாருங்கள்!!

🌹 🌿 #மார்கழித்திங்கள்...

இடைப்பெண்களே! இது மார்கழி மாதம் சந்திரன் பூரணமான நன்னாளில் நாம்

நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினால், அவன் நம் விரதத்திற்கான பலனை அளித்திடுவான். வாருங்கள்.

🌹 🌿 #வையத்து_வாழ்வீர்காள்...

இந்த விரதத்தின் போது தினமும் அதிகாலையில் நீராடுவோம். நெய், பால் உட்கொள்ளோம். மைதீட்டோம். மலரைச் சூடோம். செய்யத் தகாதவற்றை செய்யோம். பெரியோர் வழி கடைபிடிப்போம்.

🌹 🌿 #ஓங்கி_உலகளந்த...

திரிவிக்ரமனை அதிகாலையில் நாம் நீராடி துதித்தால் மாதம் மும்மாரி பெய்யும். விவசாயம் செழித்திடும். பசுக்கள் குடம் குடமாய் நிறைய பால் சொரியும். குறைவற்ற செல்வம் நிறைந்திடும்.

🌹 🌿 #ஆழி_ #மழைக்_கண்ணா...

மழைக்கு அதிபதியான வருணனே! நீ கடல் நீரைப் பருகி, நாராயணன் உருவம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, சங்கு போல் இடி இடித்து உலகம் வாழும்படியாக மழை பெய்திடாய்.

🌹 🌿 #மாயனைமன்னு

வடமதுரையில் அவதரித்தவனும், யமுனைத் துறை தலைவனும், திருவிளக்கைப் போன்று ஒளி உடையவனுமான தாமோதரனை தூய புஷ்பங்கள் கொண்டு தூவி, அவன் நாமங்களைப் பாடினால் நம் பாவங்கள் தீயிலிட்ட தூசு போன்று உருத் தெரியாமல் போகும்.

🌹 🌿 #புள்ளும்_சிலம்பின...

பெண்ணே பறவைகள் கூவுகின்றன. கோயிலில் பெரிய சங்கின் ஒளி கேட்டிலையோ, பூதனையின் நச்சுப்பாலை உண்டவனை யோகிகளும், முனிவர் களும் தியானித்து துதிக்கும் ஹரிநாமம் கேட்கவில்லையா. எழுந்து வா.

🌹 🌿 #கீசு_கீசென்று...

பெண்ணே! பாரத்வாஜ பறவைகள் கீசுகீசு என்று ஒளி எழுப்புவது கேட்கவில்லையா? இடைப் பெண்கள் தயிர் கடையும் ஓசை கேட்கவில்லையா? நாங்கள் நாராயணனைத் துதித்து பாடுகின்றோம். கதவைத்திற.

🌹 🌿 #கீழ்வானம்_வெள்ளென்று...

பெண்ணே! கீழ்வாளம் வெளுத்து விட்டது. எருமைகள் பனிப்புல் சென்று விட்டன. கோபிகைகள் கிருஷ்ணனை துதிக்க போகாமல் உனக்காக அனைவரையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்பரம் பொருள் இரங்கி அருள் புரிவான். உடனே புறப்பட்டு வா.

🌹 🌿 #அரமணி_மாடத்து...

வீடு முழுக்க விளக்கு எரிய பஞ்சணை மீது படுத்துறங்கும் மாமன் மகளே! தாழ்ப்பாளை திறந்து விடு, அவளுடைய தாயைப் பார்த்து, உன் மகள் ஊமையா? செவிடா? மீளா உறக்கம் கொண்டாளா? நாங்கள் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று ஆயிரம் நாமங்களும் சொல்லி விட்டோம். அவன் எழுந்திருக்கவில்லையே.

🌹 🌿 #நோற்றுச்_சுவர்க்கம்...

பெண்ணே! வாசலைத் தான் திறக்கமாட்டாய். எங்களுக்கு பதிலாவது சொல்லக் கூடாதா? நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை நாம் துதித்தால் அவன் நமக்காக பலனைத் தந்திடுவான். கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்களித்தானா? கதவைத் திற.

🌹 🌿 #கற்றுக்_கறவைக்...

கண்ணனுக்கு ஏற்ற தங்கக் கொடி போன்றவனே! கிருஷ்ணனின் செல்வப் பெண்டாட்டியே! மயில் போன்ற சாயல் உடையவளே! உன் தோழிமார்களாகிய நாங்கள் உன் முற்றத்தில் வந்து நின்று கண்ணனை துதிக்கின்றோம்! நீ எழுந்து வாராய்.

🌹 🌿 #கனைத்து_இளங்...

கிருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையனனுடைய தங்கையே! இராவணனைக் கொன்ற இராமனை நினைத்தாலே மனதுக்கு இன்பத்தைத் தரும். பேரைச் சொல்லியும் நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். நீ சீக்கிரம் எழுந்திராய்.

🌹 🌿 #புள்ளின்_வாய்...

பகாசுரனையும், இராவணனையும் அழித்தவனான கண்ணனைப் பாடி நோன்பு நோற்கும் பிள்ளைகள் களத்திற்குச் சென்று விட்டார்கள். சுக்கிரன் உச்சிப்பட்டு வியாழன் மறைத்தான். நீயும் எங்களோடு சேர்ந்து வாராய்.

🌹 🌿 #உங்கள்_புழைக்கடை...

பெண்ணே! உன் புழைக்கடை யில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்ந்தது. அல்லி மலர் மூடிக் கொண்டது. சன்னியாசிகள் கோயிலுக்கு சங்கு ஊதச் செல்கின்றனர். சங்கு சக்கரம் ஏந்திய கமலக்கண்ணனை நாம் துதித்தல் வேண்டும். எழுந்திராய்.

🌹 🌿 #எல்லே_இளங்கினியே...

இளமை தங்கிய கிளிபோல் இருப்பவளே! எழுந்திராய். வாய்ப்பேச்சில் நீ சமர்த்தையாய் இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிவோம். தோழிகள் அனைவரும் வந்தனரா, வந்தனர், ஆச்சரியமான செய்கைகளை உடையவனான கண்ணனை பாடுவதற்காக எழுந்திராய். 

🌹 🌿 #நாயகனாய்_நின்ற...

நந்தகோபனுடை திருமாளிகையைக் காப்பவனே! அழகிய தாழ்ப்பானைத் திறந்து விடு இடைச் சிறுமிகளுக்கு நீல நிற வண்ணனாங் ஸ்ரீகிருஷ்ணன் சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக தேர்சி வாங்களித்தான். அவன் தூக்கத்திலிருந்து எழுந்திருக் பாட வந்திருக்கிறோம்.

🌹 🌿 #அம்பரமே_தண்ணீரே...

எஸ்திரங்களையுது தண்ணீரையும், சோற்றினையும் தர்மம் செய்யும் நடு 'கோபரே! ஆயர்குலத்து மங்கள தீபமாயுள்ள யசோதை பிராட்டியே! ஆகாய ஒளியைத் துளைத்து உலகை அளந்தவனே! வீரக்கழல்களை அணிந்த பலராமா எழுந்திருக்க வேணும்.

🌹 🌿 #உந்து_மதகளிற்றன்...

யானை போல் பலமுள்ளன ரான நந்த கோபருடைய மருமகனே! நீளாதேவியே எழுந்திரு. கோழிகள் அழைத்தன. குயில்களும் கூவின, உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்கள் பாட வந்தோம். மகிழ்வுடன் கதவைத் திறப்பாயாக.

🌹 🌿 #குத்துவிளக்கெரிய...

நிலை விளக்கானது எரிய, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பஞ்சனையில் நீளா தேளியுடன் உறங்கும் ஸ்வாமி! வாய் திறந்து சொல்வாயாக. நீளாதேவி சிறிது போதும் அவனை விட்டு பிரிவதில்லை. இது உன் ஸ்வபாவத்துக்கும் தகுந்ததன்று.

🌹 🌿 #முப்பத்துமூவர்_அமரர்க்கு...

தேவர்களின் பயத்தைப் போக்கும் பலமுள்ளவனே! அழகிய வடிவுடைய நப்பின்னையே! துயில் ஏழாய். நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களை அளித்து, எங்கள் விரதத்தினை முழுமை அடையச் செய்திடுவாய்.

🌹 🌿 #ஏற்ற_கலங்கள்...

நந்தகோபனின் மைந்தனே! ஸ்ரீகிருஷ்ணா! எழுந்திராள். உன் எதிரிகள் உனக்கு தோற்று உள் மாளிகை வாசலில் வந்து உன் திருவாளை வணங்கி கிடப்பது போல, நாங்களும் உன்னை பாற்றி வந்துள்ளோம். துயில் எழுந்து ஆட்கொள்வாயா.

🌹 🌿 #அங்கண்_மாஞாலத்து...

இப்பூமியை ஆபுரியும் அரசர்கள் தங்கள் அகங்காரம் குலைந்து உன் சிம்மாசனத்தின் கீழ் கூடி இருப்பது போல, நாங்களும் உன் பாதங்களை சரணடைந்தோம் ஸ்வாமி! அழகிய கண்களால் எங்களை கடாக்ஷித்து அருளுங்கள்.

🌹 🌿 #மாரிமலை_முழைஞ்சில்...

மழை காலத்தில் மலைக் குகையில் உறங்கும் வீர்யமுடைய சிங்கம், தேகத்தை உதறி கர்ஜனை செய்து வெளிப்புறப்பட்டு வருவதைப் போல, காயாம்பூ நிற வண்ணா உன் சிம்மாசனத்தில் எழுந்தருளி நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அருள வேணும்.

🌹 🌿 #அன்றிவ்வுலகம்...

அக்காலத்தில் இவ்வுலகினை அளந்த ஸ்வாமி! உன் திருவடிகளுக்கு, பலத்திற்கு, உன் புகழிற்கு மங்களம். உன் குணத்திற்கு, உன் கையிலுள்ள வேலாயுத் திற்கு மங்களம் என உன்னை துதித்து, பறை கொள்வதற்காக வந்துள்ளோம். ஸ்வாமி அருள் புரிய வேண்டும்.

🌹 🌿 #ஒருத்திமகனாய்...

ஒரே இரவில் தேவகிக்கு பிள்ளை யாய் தோன்றி, யசோதையின் பிள்ளையாய் ஒளிந்திருந்து வளரும் காலத்தில், கம்சனுடைய வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்று, உன் வீர்ய குணத்தை நாங்கள் பாடி மகிழ்ந்திடுவோம்.

🌹 🌿 #மாலே_மணிவண்ணா...

 அடியாரிடத்தில் அன்புடைய மணிவண்ணா! இவ்விரதத்தை நாங்கள் செய்வதற்காக பாஞ்சசன்னிய மான சங்குகளையும், பெரியனவான பறகளையும், திருப்பல்லாண்டு பாடுமவர்களையும், மங்கள தீபங்களையும், துவஜங்களையும், மேற்கட்டிகளையும் அளித்தருள வேண்டும்.

🌹 🌿 #கூடாரைவெல்லும்...

தன்னை அடிபணியாதாரை வெல்லும்
கோவிந்தா! உன்னைப் பாடி நாங்கள் அடையும் பரிசாவது என்னவெனில், பலவகை ஆபரணங்களை அணிவோம். பீதாம்பரத்தால் அலங்கரித்துக் கொள்வோம். பால் சோறு நெய்யிட்டு உன்னுடன் கூடி உண்டு
மனம் குளிர்வோம்.

🌹 🌿 #கறவைகள்_பின்...

 பசுக்களோடு காடு சேர்ந்து உண்டு திரிவோம்.

எங்கள் குலத்தில் நீ பிறக்கும் புண்ணியத்தை செய்துள்ளோம்.

கோவிந்தா! உணக்கும் எங்களுக்கும் உள்ள உறவு ஒழிக்க முடியாது.

கோபிக்காமல் நாங்கள் விரும்புவதை அருள வேணும்.

🌹 🌿 #சிற்றஞ்_சிறுகாலே...

கோவிந்தா! இடை குலத்தில் பிறந்த நீ
நாங்கள் செய்யும் சிறு கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடாது. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உன் மகிழ்ச்சிக்காகவே உணக்கே தொண்டு புரிய அருள 
வேண்டும்.

🌹 🌿 வங்கக்கடல்...

மாதவனை, கேசவனை அழகிய இடைப்பெண்கள் துதித்து, பாவை நோன்புக்குரிய கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீவில்லிப் புத்தூரில் பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் அருளிச் செய்த 30 பாசுரங்களையும் பாராயணம் செய்தால் லக்ஷ்மி நாதனல் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

🌹 🌿 நன்றி தி தி தேவஸ்தானம் மாத இதழ்🙏🙏

🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🎋

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...